இஸ்ரேலுக்கு ‛செக்’ வைத்த துருக்கி அதிபர்.. எர்டோகன் அறிவிப்பால் இருநாட்டு உறவில் விழுந்த விரிசல்!
துருக்கி அதிபர் எர்டோகன்
அங்காரா: பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை இனப்படுகொலை என விமர்சனம் செய்துள்ள துருக்கி அதிபர் ரெசேப் தயிப் எர்டோகன் இஸ்ரேல் உடனான அனைத்து உறவுகளையும் துண்டிப்பதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.
இஸ்ரேலும், பாலஸ்தீனமும் எல்லைகளை பகிர்ந்து வருகிறது. இருநாடுகள் இடையே நீண்டகாலமாக எல்லை பிரச்சனை இருந்த நிலையில் கடந்த ஆண்டு போராக மாறியது. கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி காசாவில் இருக்கும் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்கு நுழைந்து தாக்குதல் நடத்தி 240க்கும் அதிகமானவர்களை பணயக்கைதிகளாக பிடித்து சென்றனர்.

இதையடுத்து ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வகையில் காசா மீது இஸ்ரேல் போர் நடவடிக்கையை தொடங்கியது. இந்த போர் தற்போது ஓராண்டை கடந்தும் நடந்து வருகிறது. காசாவுக்குள் நுழைந்து இஸ்ரேல் படைகள் கடும் தாக்குதலை தொடர்ந்து வருகிறது. ஹமாஸ் அமைப்பின் தலைவர் உள்பட முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் 7 ம் தேதி முதல் தற்போது வரை இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக காசாவில் மொத்தம் 43,712 பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். 1 லட்சத்த 3,258 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 10 ஆயிரம் பேர் வரை மாயமாகி உள்ளனர்கள். இவர்களின் நிலை என்ன என்பது? தெரியவில்லை என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் தான் இஸ்ரேல் மீது இஸ்லாமிய நாடுகள் கடும் கோபத்தில் உள்ளன. இந்த போர் நடவடிக்கைக்கு எதிராக ஈரான் ஆதரவு பெற்ற லெபனானின் ஹிஸ்புல்லா ஏற்கனவே இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அதேபோல் ஈரானும், இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. சவூதி அரேபியாவும், காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது. பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக அறிவிக்கும் வரை சவூதி அரேபியா, இஸ்ரேலுடன் எந்த உறவையும் வைக்காது என்று அறிவித்துள்ளது.
அந்த வரிசையில் தற்போது துருக்கியும், இஸ்ரேலுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளது. காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது. இதனை கைவிட வேண்டும் என்று தொடர்ந்து துருக்கி தெரிவித்து வந்த நிலையில் தற்போது இஸ்ரேல் உடனான அனைத்து உறவுகளையும் துண்டிப்பாக துருக்கி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக துருக்கி அதிபர் ரெரேசப் தயிப் எர்டோகன் கூறியதாவது:
தற்போது துருக்கி, இஸ்ரேலுடன் அனைத்து வகையான உறவுகளையும் வைத்துள்ளது. துருக்கி அரசு இஸ்ரேலுடன் எந்த வகையான தொடர்பு மற்றும் உறவையும் வைத்து கொள்ளாது. இதுதொடர்பாக ஆளும் எங்களின் கூட்டணி அரசு சார்பில் தீர்மான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையை தான் நாங்கள் எதிர்காலத்திலும் தொடருவோம்.
இஸ்ரேல் தொடர்ந்து காசா மற்றும் லெபனான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலை தொடரும்போது இன்னும் நிலைமை என்பது மோசமாகும்'' என்று கவலை தெரிவித்தார். சமீபத்தில் துருக்கி அதிபர் எர்டோகன் சவூதி அரேபியா, அஜர்பைஜான் சென்று துருக்கி திரும்பியபோது பத்திரிகையாளர்களின் கேள்விக்கு எர்டோகன் இப்படி தெரிவித்துள்ளார்.
துருக்கி தொடக்கம் முதலே இஸ்ரேலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வந்தது. அதோடு கடந்த மே மாதம் வணிக ரீதியாக இஸ்ரேலுடன் சில உறவுகளை துருக்கி துண்டித்தது. தற்போது அனைத்து வகையான உறவுகளையும் துண்டிப்பதாக அறிவித்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications