For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கனடாவில் புல்வெளியில் பாய்ந்த ஜெட் ஏர்லைன்ஸ் விமானம் – மழையால் விபரீதம்

Google Oneindia Tamil News

மான்டிரியல்: கனடாவில் விமானம் ஒன்று தரையிறங்கும் போது திடீரென்று ஓடுபாதையை விட்டு புல்வெளியில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.

வெஸ்ட் ஜெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று, டோரண்டோவில் இருந்து மான்டிரியல் விமானநிலையத்திற்கு வந்தது.

Westjet Airlines plane skids off runway at Montreal airport

இவ்விமானத்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். இந்நிலையில் ஓடுபாதையில் தரை இறங்க வேண்டிய விமானம் திடீரென்று தடம் மாறி விமான நிலைய புல்வெளியில் பாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் பத்திரமாக தரையிறங்கினர்.

நள்ளிரவு பெய்த மழையின் காரணமாக விமான ஓடுபாதை ஈரமாக இருந்ததே விமானம் தடம் மாற காரணம் என்று வெஸ்ட் ஜெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. விபத்துக்குள்ளான விமானம் தற்போது தீவிர ஆய்வுக்கு உட்படுத்தபட்டுள்ளது.

English summary
Passengers onboard Westjet Flight 588 got a more eventful landing than they initially planned for when their plane skidded off the runway at Montreal's Pierre Elliott Trudeau International Airport earlier this afternoon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X