மூடிக்கிடந்த வாசல்.. குவைத் தீ விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க காரணம் என்ன?
குவைத்: குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழப்பு அதிகரிக்க என்ன காரணம் என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த நேரத்தில் என்ன நடந்தது...ஏன் சுமார் 50 பேர் வரை இறந்து போனார்கள் என்பது குறித்து பார்ப்போம்.
இந்தியர்கள் புலம் பெயர் தொழிலாளர்களாக அதிக அளவில் உள்ள நாடுகளில் ஒன்று குவைத். சுமார் 21 சதவீதம் பேர் இந்தியர்கள் தான் குவைத்தில் இருக்கிறார்கள். எண்ணெய் வயல்கள், சுத்திகரிப்பு மையங்கள் என அது சார்ந்த நிறுவனங்களில் இந்தியர்கள் பணியாற்றுகிறார்கள்.

குவைத்தில் என்.பி.டி.சி. என்ற நிறுவனத்தில் ஏராளமானோர் பணியாற்றி வருகிறார்கள். அந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி கவர்னரகத்துக்கு உட்பட்ட மங்காப்பில் உள்ள ஆறு மாடிகளை கொண்ட ரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அந்த அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 200 பேர் தங்கியிருந்தனர். தொழிலாளர் முகாம் என அழைக்கப்படும் அந்த அடுக்குமாடியில் தங்கியிருந்தவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் ஆவர். அதிலும் குறிப்பாக கேரளா, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவார்.
இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் நேற்று அதிகாலையில் சமையல் செய்து கொண்டிருந்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. மளமளவென பரவிய இந்த தீ அடுத்தடுத்த வீடுகளுக்கும், மாடிகளுக்கும் பரவியது. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது. அதிகாலை நேரம் என்பதால் பலரும் தூக்கத்தில் இருந்தனர். இதனால் அவர்கள் தூக்கத்திலேயே உடல் கருகினர். அதேநேரம் புகை மூட்டம் காரணமாக பலருக்கும் மூச்சுத்திணறலும் ஏற்பட்டு இறந்துள்ளனர். உடல் கருகியும் மூச்சுத்திணறலும் ஏற்பட்டு சுமார் 49 பேர் இதுவரை இறந்துள்ளனர்.
இந்நிலையில் குவைத் தீ விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க காரணம் என்ன என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதிகாலை நேரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ பிடித்தபோது தொழிலாளர்கள் பலரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்துள்ளார்கள். கொழுந்து விட்டு எரிந்த தீயின் வெப்பம் மற்றும் புகையால் ஏற்பட்ட முச்சுத்திணறலால் பரிதவித்த அவர்கள், வெளியேற வழி தெரியாமல் தடுமாறியுள்ளார்கள்.
எப்படியாவது வெளியேறிவிட வேண்டும் என கட்டிடத்தின் தரைத்தளத்தை நோக்கி ஓடிய அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஏனெனில் தரைத்தளங்களில் உள்ள வெளியேறும் வாசல்கள் அனைத்தும் பூட்டப்பட்டு இருந்துள்ளது. இதனால் பதற்றத்தில் அங்கும் இங்கும் ஓடிய அவர்கள் மூச்சுத்திணறல் அதிகரித்து ஆங்காங்கே விழுந்து இறந்துபோனார்கள்.
ஒருசிலர் மாடியில் இருந்து கீழே குதித்தனர். அதனாலும் உயிரிழப்புகள் ஒருசிலர் மாடியில் இருந்து கீழே குதித்தனர். அதனாலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. 5-வது மாடியில் இருந்து குதித்த ஒருவர் கீழே வரும்போது மற்றொரு மாடியின் பால்கனி சுவரில் மோதி இறந்துள்ளார்.. ஒரு கட்டத்தில் நிறைய பேர் மயங்கி விழுந்து கொத்தாக இறந்தனர். இதையறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் , மற்றவர்களை காப்பாற்ற கொடுத்த ஒரு ஐடியாவால் பலரும் காப்பாற்றப்பட்டுள்ளனர். தீயணைப்பு வீரர்கள் கொடுத்த ஐடியாவின் படியே, பலரும் கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு விரைந்து சென்றனர். அதனால் அங்கு ஏற்பட்ட தீ ஜூவாலையில் இருந்தும், புகை மூட்டத்தில் இருந்தும் உயிர் தப்பி உள்ளார்கள்..
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications