"ரகசிய மேட்டர்".. மோடிக்காக தூதுபோன அஜித் தோவல்.. ரஷ்ய அதிபர் புதினுடன் விவாதித்தது என்ன?
மாஸ்கோ: நம் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்யா சென்று அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேசினார். அப்போது பிரதமர் மோடி சொல்லி அனுப்பிய ரகசிய தகவல்களை விளாடிமிர் பதினிடம் அஜித் தோவல் எடுத்துரைத்துள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
உக்ரைன் மீது ரஷ்யா தற்போது போர் தொடுத்து வருகிறது. இந்த போர் நடவடிக்கை என்பது 2 ஆண்டுகளை கடந்து நடந்து வருகிறது. உக்ரைன் மீதான போர் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

ஆனால் நம் நாடு ரஷ்யா பொருளாதார தடையை விதிக்கவில்லை. அதேவேளையில் நட்பு நாடாக இருந்தாலும் கூட ரஷ்யாவின் போரை ஆதரிக்கவில்லை. போரை கைவிட்டு ரஷ்யாவும் - உக்ரைனும் ஒன்றாக அமர்ந்து பிரச்சனைகளை பேசி முடிவு எடுக்க வேண்டும் என்று கூறி வருகிறார். இதுதொடர்பாக பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை நேரில் சந்தித்து வலியுறுத்தி உள்ளார். ஆனால் இன்னும் இருநாடுகளும் பேச்சுவார்த்தைக்கு உடன்படவில்லை. இதனால் போர் தொடர்ந்து நடந்து வருகிறது.
இத்தகைய சூழலில் தான் பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த கூட்டமைப்பின் சார்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் மாநாடு என்பது கடந்த 10ம் தேதி ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் தொடங்கியது. இந்த மாநாடு நேற்று முடிவடைந்தது. இந்த மாநாட்டில் பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் பங்கேற்றனர். நம் நாட்டின் சார்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பங்கேற்றார்.
இந்நிலையில் தான் நேற்று அஜித் தோவல், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை என்பது செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள கான்ஸ்டான்டினோவ்ஸ்கி பேலஸில் நடந்தது. இந்த சந்திப்பின்போது ரஷ்யா மற்றும் இந்தியா இடையேயான உறவுகள் பற்றியும், பாதுகாப்பு அம்சங்கள் பற்றியும் இருவரும் விரிவாக விவாதித்தனர். மேலும் இந்த மீட்டிங் என்பது உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போாருக்கு தீர்வு காணும் விவகாரங்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளது.
இந்த வேளையில் பிரதமர் நரேந்திர மோடியின் உக்ரைன் பயணம் பற்றிய விபரங்களை எடுத்துரைக்க தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. ரஷ்யாவின் தொடுத்துள்ள போருக்கு நடுவே பிரதமர் மோடி கடந்த மாதம் 23ம் தேதி உக்ரைன் தலைநகர் கீவுக்கு சென்றார். அங்கு அவர் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார். இந்த வேளையில் இருவரும் என்ன பேசினர்? என்பது பற்றிய முழுவிபரம் இன்னும் வெளியாகவில்லை. இந்த தகவல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் ரகசியம் காக்கப்படும் இந்த விவகாரம் பற்றி பிரதமர் மோடி, விளாடிமிர் புதினுடன் பேச தயாராக உள்ளதாக அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அஜித் தோவல், ‛‛உக்ரைன் பயணம் மற்றும் அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கியை சந்தித்தது பற்றி உங்களுக்குத் தெரிவிக்க விரும்புவதாக பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உங்களிடம் பேசியுள்ளார். அதுபற்றிய பேச்சுவார்த்தை குறித்து தனிப்பட்ட முறையில் உங்களிடம் தெரிவிக்க விரும்புகிறேன். அதாவது பிரதமர் மோடி, ஜெலன்ஸ்கி இடையேயான பேச்சுவார்த்தை என்பது மிகவும் ரகசியமாக ( very closed format) நடந்தது. இருதலைவர்கள் மட்டுமே பேசினர். இந்த பேச்சுவார்த்தையில் ஜெலன்ஸ்கியுடன் 2 பேர் இருந்தனர். பிரதமர் மோடியுடன் இருந்த 2 பேரில் நானும் ஒருவன்'' என்று கூறியுள்ளார்.
பிரதமர் மோடி உக்ரைனுக்கு செல்வதற்கு 6 வாரங்களுக்கு முன்பு தான் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினை அந்த நாட்டில் சந்தித்து பேசியிருந்தார். இதனால் கடந்த மாதம் 23ம் தேதி உக்ரைனில் அந்த நாட்டின் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை பிரதமர் மோடி சந்தித்து அனைத்து நாடுகளின் கவனத்தையும் பெற்றது. அப்போது பிரதமர் மோடி, ‛‛ரஷ்யாவின் போரை பேச்சுவார்த்தை மூலம் முடிக்க முடியும். நேரத்தை வீணடிக்காமல் இருதரப்பு பேச்சுவார்த்தையை நோக்கி செல்ல வேண்டும். போரை முடிவுக்கு கொண்டு வர இருநாடுகளும் ஒன்றாக அமர்ந்து பேச வேண்டும்'' என வலியுறுத்தினார்.
இருப்பினும் பிற தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. அதன்பிறகு உக்ரைனில் இருந்து திரும்பிய பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இருநாடுகளின் போர் நிறுத்தத்தை பிரதமர் மோடி வலியுறுத்தினார். தற்போது அஜித் தோவல் அந்த சந்திப்பு பற்றி விளாடிமிர் புதினுடன் சந்தித்து பேசியுள்ளார்.
முன்னதாக இந்த மாதத்தின் தொடக்கத்தில் கிழக்கு பொருளாதார கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் ரஷ்யாவில் விலாடிவோஸ்டாக் நகரில் நடந்தது. இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்று விவாதித்தார். அப்போது, ‛‛இந்தியா, சீனா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் உக்ரைன் போர் தொடர்பாக மத்தியஸ்தர்களாக பங்கேற்கலாம்.
இஸ்தான்புல்லில் ரஷ்யா - உக்ரைன் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் நிறைவேற்றப்படாவிட்டாலும் கூட இந்த நாடுகள் போர் நிறுத்ததற்கு மத்தியஸ்தர்களாக பங்கேற்கலாம்'' என தெரிவித்து இருந்தார். இதனால் அஜித் தோவல் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இடையேயான சந்திப்பு என்பது அதிக கவனம் பெற்றுள்ளது. இந்த சந்திப்பை தொடர்ந்து விளாடிமிர் புதின் - பிரதமர் மோடி இடையே விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் பட்சத்தில் அது உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரிக்கும் என்று சர்வதேச அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம்












Click it and Unblock the Notifications