ஒரே அடியில் மனிதர்களை கொல்லும் டைனோசர் "காசோவரிகள்.." பிளேட் நகங்களை கொண்ட உலகின் ஆபத்தான பறவை!
கன்பரா: உலகின் அதிக ஆபத்தான பறவை இனங்களில் ஒன்றாக காசோவரிகள் கருதப்படுகிறது. இவை மனிதர்களைத் தாக்கும் போது உயிரிழப்பே கூட ஏற்படும் அபாயம் இருப்பதாகக் கூறப்படுகிறது. தலையில் ஹெல்மெட் அணிந்து இருப்பதைப் போல இருக்கும் இந்த பறவை எந்தளவுக்கு ஆபத்தானது.. இது எங்கு வசிக்கும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
நமது பூமி என்பது பல்வேறு வகையான உயிரினங்கள் நிறைந்தது. ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒவ்வொரு பணி இருக்கிறது. எல்லாம் சேரும் போது பூமி சிறப்பாக இருக்கிறது.

காசோவரிகள்
அதன்படி பூமியில் வாழும் மிக முக்கியமான உயிரினமாகப் பறவைகள் உள்ளன. உலகின் எந்தவொரு கண்டத்திலும் நாம் எதாவது ஒரு பறவை இனத்தைப் பார்த்துவிடலாம். அவ்வளவு ஏன் அண்டார்டிக்காவில் கூட பென்குயின் பறவை இனம் இருக்கும். ஆம், பலருக்கும் பென்குயின் பறவை இனத்தைச் சேர்ந்தது எனத் தெரியாது. ஆனால், உண்மையில் அதுவும் ஒரு வகை பறவை இனத்தைச் சேர்ந்ததே ஆகும்.
உலகெங்கும் பறவைகள் இருந்தாலும் கூட நாம் பெரும்பாலும் அதைப் பார்த்துப் பயப்படத் தேவையில்லை. ஆனால், அனைத்து பறவைகளுமே ஆபத்து இல்லாதவை எனச் சொல்ல முடியாது. காசோவரி (Cassowary) எனப்படும் பறவை உலகின் மிகவும் ஆபத்தான பறவையாகக் கருதப்படுகிறது. அது விட்டால் மனிதர்களையே கூட கொன்றுவிடும் அளவுக்கு ஆபத்தானதாம்.
வாழும் டைனோசர்
அவை ஆஸ்திரேலியா மற்றும் நியூ கினியாவின் வெப்பமண்டல மழை காடுகளில் வாழ்கின்றன. நீல முகம், தலைக்கவசம் போன்ற உறுப்பு மற்றும் பயங்கர கூர்மையான நகங்களுடன் இவை 310 கிலோ எடை கொண்டதாக இருக்கும். இது ஒரு சராசரி மனிதனின் உயரத்திற்கு வளரும். பார்த்தால் ஏதோ இந்த காலத்தில் வாழும் டைனோசர் போலவே இருக்கும். அந்தளவுக்குப் பார்க்கவே அச்சுறுத்தும் வகையில் இருக்கும்.
காசோவரிகள் எப்போதும் தனிமையை விரும்பக்கூடியவை. அவை காடுகளில் மட்டுமே வாழும். அதை மனிதர்கள் கண்டறிவதும் கடினம். மேலும், எப்போதும் அமைதியாகவே இருக்கும் காசோவரிக்கள், பெரும்பாலும் மனிதர்களிடம் இருந்து விலகியே இருக்கும். ஆனால், பயந்து போய் அல்லது ஆத்திரமடைந்து தாக்கத் தொடங்கினால் அது மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். மனிதர்களின் உயிரே கூட போய்விடும்.
மின்னல் வேகத்தில் ஓடும்
இந்த பெரிய பறவைகள் பறக்க முடியாவிட்டாலும், நம்பமுடியாத அளவுக்கு வேகமாக ஓடும். அந்தளவுக்கு வலிமையான கால்களைக் கொண்டுள்ளது. இது மணிக்கு 50 கிமீ வேகத்தில் கூட ஓடும் திறனைக் கொண்டுள்ளது. மேலும், இயற்கையாகவே நீச்சல் அடிக்கும் திறனையும் கொண்டுள்ளது. வேட்டையாடும் போது அல்லது பயத்தில் இருக்கும் போது காசோவரிகள் சுமார் ஏழு அடி உயரம் வரை குதித்து எதிரிகளை உதைக்கும். மேலும், கூர்மையான நகங்களைக் கொண்டு அது எந்தவொரு விலங்காக இருந்தாலும் அதைக் குத்தி கிழிக்கும்.
மனிதர்களையே கொல்லும்
இவை பெரிதாகவும், அச்சுறுத்தும் வகையிலும் காணப்பட்டாலும் பெரும்பாலும் ஆபத்து இல்லாதவையாகவே உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக காசோவரிகளால் மனிதர்கள் இறப்பதை விட அதிகமான காசோவரிகளை மனிதர்கள் கொல்கிறார்கள். ஒருவேளை காடுகளில் இந்த பறவையைப் பார்க்க நேரிட்டால் அப்படியே அசையாமல் நின்றுவிடுங்கள். அதன் கவனத்தை ஈர்க்காதீர்கள். அதை அச்சுறுத்துவது எந்தவொரு பலனையும் தராது. உங்களுக்குத் தான் சிக்கல். அமைதியாகக் கையை கட்டி நில்லுங்கள். அதுவே உங்களைச் சீண்டாமல் நகர்ந்துவிடும்" என்றார்.
கோரிக்கை
சில பழங்குடியின கலாச்சாரங்களில் காசோவரிகள் முக்கிய இடத்தை பெற்றுள்ளன. பாரம்பரிய நடனங்கள், சடங்குகள் மற்றும் இரவு நேரக் கதைகளில் காசோவரிகளுக்கு முக்கிய இடம் உள்ளது. இவை பெரும்பாலும் நியூ கினியாவின் மழை காடுகளில் காணப்படுகிறது. மேலும், கிழக்கு நுசா தெங்கரா, மாலுகு தீவுகள் மற்றும் வடகிழக்கு ஆஸ்திரேலியாவிலும் இவை கண்டறியப்படும். இதன் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வரும் சூழலில் இதைக் காப்பாற்றச் சர்வதேச நாடுகள் நடவடிக்கை எடுக்க வண்டும் என்ற குரல்களும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.












Click it and Unblock the Notifications