"தேர்தலை கண்டு அச்சமா.. அந்நிய நாட்டின் சதி!" விளாசிய தள்ளிய இம்ரான் கான்.. யாரை சொல்கிறார்?

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் தொடர்ந்து மோசமடைந்து வரும் நிலையில், இம்ரான் கான் எதிர்க்கட்சிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாகவே பாகிஸ்தான் பொருளாதாரம் மிக மோசமாகவே இருந்து வந்துள்ளது. இந்தச் சூழலில் கடந்த 2019 தேர்தலை புதிய பாகிஸ்தான் படைப்போம் என்ற முழக்கத்தை முன்வைத்து ஆட்சியைப் பிடித்தவர் இம்ரான் கான்.

இருப்பினும், இம்ரான் கான் அரசால் தனது வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை. இதனால் இம்ரான் கானுக்கு எதிரான அரசியல் அழுத்தம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

 பாகிஸ்தான் பிரதமர்

பாகிஸ்தான் பிரதமர்

இந்தச் சூழலில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளன. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி ஆளும் கூட்டணியில் இருந்தும் கூட பலரும் இம்ரான் கானுக்கு எதிராகத் திரும்பி இருந்தனர். குறிப்பாக, பாகிஸ்தான் ராணுவம் கூட இம்ரான் கானுக்கு எதிராகத் திரும்பி இருப்பதாகவும் இதனால் இம்ரான் கானுக்கு பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது.

 நம்பிக்கையில்லாத் தீர்மானம்

நம்பிக்கையில்லாத் தீர்மானம்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானமும் பாக். நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தின் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. பெரும்பாலான உறுப்பினர்கள் இம்ரான் கான் அரசுக்கு எதிராக இருந்ததால், நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேறும் என்றும் இம்ரான் கான் அரசு கவிழும் என்று கூறப்பட்டது.

எதிர்க்கட்சிகள்

எதிர்க்கட்சிகள்

இந்தச் சூழலில் திடீர் திருப்பமாக நம்பிக்கையில்லாத் தீர்மானம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று கூறி அதைப் பொறுப்பு சபாநாயகர் ரத்து செய்தார். இந்தச் சம்பவம் அந்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஷெபாஸ் ஷெரீபை பாகிஸ்தான் புதிய பிரதமராக ஆக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்த நிலையில், சபாநாயகரின் இந்த அறிவிப்பால் எதிர்க்கட்சிகள் அதிருப்தி அடைந்தனர்.

 இம்ரான் கான் பதிலடி

இம்ரான் கான் பதிலடி

இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் பாகிஸ்தான் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாகப் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எதிர்க்கட்சிகளைச் சாடியுள்ளார். முன்கூட்டியே தேர்தல் நடத்துவது குறித்து அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் ஏன் இப்படி எதிர்வினையாற்றுகிறது என்று புரியவில்லை என்று இம்ரான் கான் கேள்வி எழுப்பியுள்ளார்.

 தேர்தலை கண்டு அச்சம்

தேர்தலை கண்டு அச்சம்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில், "பொதுத் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியான பின்னரும் எதிர்க்கட்சிகள் ஏன் இப்படி நடந்து கொள்கிறது என புரியவில்லை. எங்கள் அரசு தோல்வியடைந்ததாகவும் மக்களின் ஆதரவை இழந்ததாகவும் அவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இவர்கள் தேர்தலைக் கண்டு அஞ்சுவது ஏன்? ஜனநாயகத்தை நம்பும் கட்சிகள் ஆதரவு கேட்டு மக்களிடம் தான் செல்வார்கள்" என்று ட்வீட் செய்துள்ளார்.

 அந்நிய நாட்டு சக்தி

அந்நிய நாட்டு சக்தி

மேலும், அந்நிய நாட்டுச் சக்திகளுக்கு உறுதுணையாக இருந்து அவர்களுக்கு விசுவாசமாக இருப்பதற்குத் தேசத்தின் மீது பற்றுக் கொண்டு தேர்தலை முடிவை ஏற்றுக்கொள்ளுமாறு அவர் எதிர்க்கட்சிகளிடம் வலியுறுத்தி இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் நாட்டு மக்களிடையே பேசிய இம்ரான் கான் பாக். அரசியல் குழப்பத்திற்குப் பின் அமெரிக்கா இருப்பதாகக் குற்றஞ்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த வாரம், பாக். பிரதமர் இம்ரான் கான் பங்கேற்ற மாநாட்டில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர். இதனால் இம்ரான் கானுக்கு மக்கள் ஆதரவு இருப்பதாக அக்கட்சியினர் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+