Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லிபியா சர்வ நாசம்! நள்ளிரவில் அடுத்தடுத்து உடைந்த அணைகள்! எங்கும் பார்த்தாலும் வெள்ளம்! அரண்ட மக்கள்

Subscribe to Oneindia Tamil

திரிபோலி: லிபியா நாட்டில் மிக கடுமையாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் பல ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கே பாதிப்பு இந்தளவுக்கு மோசமாக என்ன காரணம் என்பதை நாம் பார்க்கலாம்.

வடக்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் நாடு லிபியா. நிலப்பரப்பு அடிப்படையில் ஆப்பிரிக்காவின் 4ஆவது பெரிய நாடாக இருக்கும் போதிலும், பொருளாதார அளவில் இன்னும் பெரியளவில் லிபியா பின்தங்கியே இருக்கிறது.

 What is the real reason as flood cause catastrophic damage in Libya

இதற்கிடையே இந்த லிபியாவில் இப்போது மோசமான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக லிபியாவின் கிழக்குப் பகுதிகளில் இந்த பாதிப்பு மிக மோசமாக இருக்கிறது. இந்த வெள்ள பாதிப்பால் டெர்னா நகரும் ஒட்டுமொத்தமாக நாசமடைந்துள்ளது.

லிபியா: டெர்னாவில் ஏற்பட்ட இந்த பேரழிவுகரமான வெள்ளத்தில் பல ஆயிரம் பேர் உயிரிழந்தனர். மேலும், பல ஆயிரம் பேர் மாயமாகினர். காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் இன்னும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதன் காரணமாக உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. டெர்னா நகர் அங்கு நெரிசல் மிகுந்த நகராக இருக்கும் நிலையில், பாதிப்பு ரொம்பவே மோசமாக இருந்துள்ளது.

இந்த கனமழையால் சுனாமி போன்ற வெள்ளம் நகரில் ஏற்பட்ட நிலையில், டெர்னா நகரின் சுற்றுப்புறங்களும் அடித்துச் செல்லப்பட்டன. அங்கே ஏற்பட்டுள்ள பாதிப்புகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்றும் பேரழிவுகரமானது என்பதையும் தாண்டி நிலைமை மோசமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். இது குறித்த சில சாட்டிலைட் படங்களையும் பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதைப் பார்த்தாலே பாதிப்பு எந்தளவுக்கு மோசம் என்பதை நம்மால் உணர முடியும்.

ஏன் மோசம்: கடந்த ஞாயிற்றுக்கிழமை லிபியாவை தாக்கிய டேனியல் புயலால் இந்த மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மத்தியதரைக்கடல் பகுதியில் ஏற்பட்ட சூறாவளி போன்ற இந்த புயலால் கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு ஒரே நாளில் சில பகுதிகளில் 400 மிமீக்கு மேல் அதிகமாக மழை பெய்தது. அங்கு வழக்கமாக செப். மாதம் வெறும் 1.5 மி.மீ மழை மட்டுமே இருக்கும். இதை வைத்துப் பார்த்தால் அங்கே பாதிப்புகள் எந்தளவுக்கு மோசம் என்பது நமக்குப் புரியும்.

அங்கே லிபியா மலைகளில் உருவாகும் வாடி டெர்னா நதி டெர்னா நகரம் வழியாக மத்தியதரைக் கடலுக்குள் செல்கிறது. ஆண்டில் எப்போதும் வறண்ட கிளைமேட்டை கொண்டிருக்கும் அப்பகுதியில் ஒரே நாளில் கனமழை கொட்டிய நிலையில், வாடி டெர்னா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அங்கு ஏற்பட்ட இந்த காட்டாற்று வெள்ளத்தால் இரு முக்கிய அணைகள் உடைந்தன.

 What is the real reason as flood cause catastrophic damage in Libya

என்ன காரணம்: அங்குள்ள மேல் அணையில் அதிகபட்சம் 1.5 மில்லியன் கன மீட்டர் நீரையும் கீழ் அணையில் 22.5 மில்லியன் கன மீட்டர் தண்ணீரையும் தேக்க முடியும். இந்த இரு அணைகளிலும் அடுத்தடுத்து ஏற்பட்ட உடைப்பு காரணமாக நீர் டெர்னா நகரில் புகுந்ததே பாதிப்பு இந்தளவுக்கு மோசமாகக் காரணமாகும். கடந்த செப். 10ஆம் தேதி இரவில் இந்தச் சம்பவம் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தில் பல ஆயிரம் பேர் மாயமாகியுள்ள நிலையில், உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

லிபியாவில் இப்படி வரலாற்றில் இல்லாத அளவுக்குப் பாதிப்பு மோசமாக இருக்கிறது. அங்குள்ள முக்கிய கட்டிடங்கள் அனைத்தும் நீரால் சூழப்பட்டுள்ளன. மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், அந்நாட்டு மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+