பாகிஸ்தான் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் தாலிபான்! இரண்டும் இஸ்லாமிய நாடுகள்தான்! அப்போ என்ன பிரச்சனை
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே இப்போது போர் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இரு தரப்புமே மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இரண்டுமே இஸ்லாமிய நாடுகளாக இருக்கும் போதிலும் இரண்டிற்கும் என்ன சிக்கல்.. இதன் பின்னணி என்ன என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.!
பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயான பதற்றம் கடந்த சில நாட்களாகத் திடீரென அதிகரித்தது. ஆப்கன் தலைநகர் காபூலில் சில இடங்களில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களே இதற்குக் காரணம். இந்தத் தாக்குதல்களுக்கு ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

ஆப்கன் தாக்குதல்
ஆப்கன் தாலிபான் எதிர்ப்பு மட்டுமின்றி பதிலடியும் கொடுத்தது. பாகிஸ்தானில் அங்கூர் அட்டா, பஜவுர், குர்ரம், திர் மற்றும் சித்ரால் ஆகிய பகுதிகளைக் குறிவைத்து தாலிபான் அமைப்பு பதில் தாக்குதல் நடத்தியது. கைபர் பக்துன்க்வாவில் உள்ள இந்த ஐந்து ராணுவ நிலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 15 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இது குறித்து பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை, "எதிர்த் தரப்பு மீண்டும் ஆப்கானிஸ்தானின் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறினால்.. எங்கள் ஆயுதப்படைகள் நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்க முழுமையாகத் தயாராக உள்ளன.. மேலும் கடுமையான பதிலடி கொடுப்போம்" என்று ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் சொல்வது என்ன
இருப்பினும், தாலிபானின் நடவடிக்கைகளை நியாயமற்றது என்று பாகிஸ்தான் விமர்சித்தது. தாலிபான்கள் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி குற்றஞ்சாட்டினார். மேலும், ஆப்கானிஸ்தானுக்குத் தக்கப் பதிலடி கொடுக்க பாகிஸ்தான் படைகள் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், "ஆப்கான் படைகள் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது சர்வதேச சட்டங்களின் அப்பட்டமான மீறலாகும். இதுபோன்ற நடவடிக்கைகளைப் பொறுத்துக் கொள்ள முடியாது. தக்கப் பதிலடி கொடுப்போம்" என்றார்.
பின்னணி
அதேநேரம் நாம் கடந்த காலங்களைப் பார்த்தால் பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான மோதல் புதியதல்ல. பாகிஸ்தான் அரசுக்குத் தலைவலியாக மாறியுள்ள பாகிஸ்தான் தாலிபான் (சுருக்கமாக டிடிபி) என்ற குழுவை ஆப்கானிஸ்தான் தான் ஆதரித்து வருவதாக பாக். அரசு குற்றஞ்சாட்டி வருகிறது. பாகிஸ்தானில் இயங்கும் இந்தத் தாலிபான்கள் ஆப்கான் தாலிபானின் சித்தாந்தத்தையே கொண்டுள்ளது. இந்தக் குழு பாகிஸ்தான் மீது பல பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும், பல பொதுமக்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் இதில் உயிரிழந்துள்ளதாகவும் பாகிஸ்தான் குற்றஞ்சாட்டுகிறது.
இது குறித்து பாகிஸ்தான் கூறுகையில், "டிடிபி அமைப்புக்கு ஆப்கான் தாலிபான் ஆதரவளிக்கிறது. மேலும், அதன் மண்ணிலிருந்து பயங்கரவாத தாக்குதல்களை நடத்த அனுமதிக்கிறது" என்பதே பாகிஸ்தான் நிலைப்பாடு! கடந்த 2024இல் மட்டும் பாகிஸ்தான் படைகள் மீது 600க்கும் மேற்பட்ட தாக்குதல்களை இந்த டிடிபி நடத்தியுள்ளதாகச் சர்வதேச அமைப்புகள் கூறுகின்றன.
பாகிஸ்தான் பயங்கரவாத குழு
டிபிபி ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2000களின் தொடக்கம் முதலே இந்தக் குழு செயல்பட்டு வருகிறது. பாகிஸ்தான் அரசைக் கவிழ்ப்பதே இதன் நோக்கம். பைத்துல்லா மெஹ்சுத் என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த டிடிபி பயங்கரவாத குழு, பெரும்பாலும் பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் தான் செயல்படுகிறது. இந்தப் பயங்கரவாத குழுவில் 3,000 முதல் 4,000 பயங்கரவாதிகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது..
மோதலுக்குக் காரணம் என்ன!
இப்போது இந்தக் குழுவை நூர் வாலி மெஹ்சுத் என்பவர் வழிநடத்தி வருகிறார். ஆப்கான் தாலிபானுக்கு விசுவாசமாக இருக்கும் டிடிபி, பாகிஸ்தானில் முழுக்க முழுக்க ஒரு இஸ்லாமிய ஆட்சியை அமல்படுத்த விரும்புகிறது. இதன் காரணமாகவே பாகிஸ்தான்- அமெரிக்கா கூட்டணியைத் துரோகம் எனச் சொல்லி எதிர்க்கிறது. மேலும், இதை முஸ்லிம்களுக்கு 'துரோகம்' என்று கருதுகிறது.
மறுபுறம் இந்த டிடிபி பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காக பாகிஸ்தான் ராணுவம் வடக்கு மற்றும் தெற்கு வஜிரிஸ்தான் பகுதிகளில் பல தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஆனாலும் பாகிஸ்தானால் இந்தக் குழுவை அழிக்க முடியவில்லை. இது பாகிஸ்தான் ராணுவத்தின் பலவீனத்தையே காட்டுகிறது.
தீவிரமடையும் தாக்குதல்
டிடிபி அமைப்பின் தாக்குதல்களைப் பொறுத்துக் கொள்ள முடியாது என சொல்லியுள்ள பாகிஸ்தான் அரசு, அவர்களை ஆதரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறியுள்ளது. இது ஆப்கானிஸ்தானை மறைமுகமாக விமர்சிப்பதாகும். இந்தத் தாக்குதலுக்குக் காரணமானவர்கள் எங்கிருந்தாலும் பதிலளிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முஹம்மது ஆசிப் கடந்த வாரம் கூறியிருந்தார். அதைத் தொடர்ந்தே தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
-
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு












Click it and Unblock the Notifications