"ஜாம்பி படை.." அடுத்த லெவலுக்கு போன கிம் ஜாங் உன்.. வடகொரியாவை பார்த்து ஸ்டன் ஆன சர்வதேச நாடுகள்
வடகொரியா அணிவகுப்பில் இடம்பெற்றிருந்த ஒரு யூனிட் உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
பியோங்யாங்: வடகொரியாவில் சில நாட்களுக்கு முன்பு கொரிய மக்கள் ராணுவத்தின் 75வது ஆண்டு விழா அணிவகுப்புகள் நடைபெற்றன. அதில் இடம்பெற்றிருந்த ஜாம்பி யூனிட் பலரையும் உண்மையிலேயே அச்சுறுத்துவதாக இருந்தது.
வடகொரியாவில் இப்போது கிம் ஜாங் உன் தலைமையிலான சர்வாதிகார ஆட்சி நடந்து வருவது அனைவருக்கும் தெரியும்.. இந்த 21ஆம் நூற்றாண்டிலும் சர்வாதிகார ஆட்சி தொடரும் நாடுகளில் வடகொரியாவும் ஒன்றாகும்.
அங்குள்ள மக்கள் மற்ற நாடுகளில் இருந்து தனித்து விடப்பட்டுள்ளனர். மற்ற நாடுகளுக்கும் வடகொரியாவுக்கும் இப்போது எந்தவொரு தொடர்பும் இல்லை. சீனா போன்ற ஓரிரு நாடுகள் மட்டுமே வணிக தொடப்பை கூட வைத்துள்ளனர்.

வடகொரியா
வடகொரியா மக்கள் ஏழ்மையான நிலையில் இருந்தாலும் கூட, அந்நாட்டு ராணுவம் பல ஆயிரம் கோடியை ராணுவத்திற்குச் செலவழிக்கிறது. மேலும், அண்டை நாடான தென் கொரியாவுக்குப் பதற்றத்தைத் தரும் வகையில் ஏவுகணை சோதனைகளையும் நடத்தி வருகிறது. சர்வதேச அளவிலும் கூட வடகொரியா முக்கிய நாடாகவே இருந்து வந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு அங்குத் தலைநகர் பியாங் யாங் அந்நாட்டு அணிவகுப்பு மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

அணிவகுப்பு
அதற்கு முன்பு வரை சுமார் 2 மாதங்கள் பொதுவெளிக்கு வராமல் இருந்த கிம் ஜாங் உன் இந்த ராணுவ அணிவகுப்பில் கலந்து கொண்டார். கொரிய மக்கள் ராணுவம் என்று அழைக்கப்படும் வடகொரியா ராணுவத்தின் 75வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில், இந்த அணிவகுப்புகள் நடத்தப்பட்டன.. இந்த ராணுவ அணிவகுப்பில் வட கொரியாவின் அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை உலகிற்குக் காட்சிப்படுத்தப்படும். அந்தளவுக்கு இந்த அணிவகுப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படும்.

இரு பெரும் சொத்துகள்
உலகின் பல்வேறு நாடுகளுடன் இந்த ராணுவ அணிவகுப்பைக் கவனித்து வந்தன. வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன் தனது இரண்டு பெரிய சொத்துக்களை உலகிற்குக் காட்டினார்.. அமெரிக்கா வரை அணு ஆயுதங்களை எடுத்துச் சென்று தாக்குதல் நடத்தக் கூடிய ஏவுகணைகள் அங்கு வைக்கப்பட்டு இருந்தது. அதேபோல அவருக்குப் பிறகு வடகொரியாவை ஆளப்போகும் தனது மகளையும் முதல்முறையாக இந்த ராணுவ அணிவகுப்பில் கலந்து கொள்ள வைத்தார். இதன் மூலம் கிம் ஜாங்கிற்கு பிறகு அங்கு யாருக்கு ஆட்சி செல்லும் என்பதையும் சொல்லாமல் சொல்லிவிட்டார்.

ஜாம்பி யூனிட்
இதற்கிடையே ராணுவ பரேட்டில் இடம்பெற்றிருந்த ஒரு யூனிட்டின் படம் இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.. அந்த ராணுவ அணிவகுப்பில் இடம்பெற்றிருந்த வட கொரியாவின் "ஜாம்பி யூனிட்" படத்தைச் சர்வதேச பத்திரிகையாளர் ஜீன் எச் லீ தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், அவர், "வடகொரியா ராணுவ அணிவகுப்பில் இடம்பெற்ற ஏவுகணை படங்களை நான் பகிரப்போவது இல்லை.. அது சர்வாதிகார நாட்டிற்கான பிரசாரமாக அமைந்துவிடும்.

பரபரப்பு
இத்தனை ஆண்டுகளாக நான் அங்கு நடக்கும் அணிவகுப்பிற்குச் சென்றுள்ளேன். இந்த முறை அணிவகுப்பில் ஜாம்பி யூனிட்கள் இடம்பெற்றிருந்தன. இத்தனை ஆண்டுகளில் நான் இதுபோன்ற ஒரு விஷயத்தைப் பார்த்ததே இல்லை.. இது என்னை நிச்சயம் அச்சுறுத்துவதாகவே உள்ளது" என்று பதிவிட்டுள்ளார் மேலும், அந்த ஜாம்பி யூனிட் படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். அதில் பல ராணுவ வீரர்கள் அச்சுறுத்தும் வகையிலான பச்சை நிற உடையை அணிந்துள்ளனர். இந்த படங்கள் தான் இப்போது வேகமாகப் பரவி வருகிறது.

ஏழ்மை
வடகொரியா பல உலக நாடுகளுடன் மோதல் போக்கையே கடைப்பிடித்து வருகிறது.. அங்கு வாழும் மக்களும் கூட மோசமான ஏழ்மை நிலையில் உள்ளனர். அங்கு ராணுவ வீரர்கள், முக்கிய தலைவர்கள் தவிர பொது மக்கள் யாருக்கும் இணையச் சேவை இல்லை. இதனால் அவர்களால் வெளியுலகத்துடன் தொடர்பை வைத்துக் கொள்ளவே முடியாது. மேலும், பல மணி நேரம் வரை மின் தடையும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் அங்குள்ள மக்களின் வாழ்க்கைத் தரம் மிக மோசமான ஒரு நிலையிலேயே உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications