"சிவந்து போன கருங்கடல்".. அமெரிக்க ட்ரோனில் எரிபொருளை ஊற்றி.. சுக்குநூறாக்கிய ரஷ்ய சுகோய்.. பின்னணி
தற்போது கருங்கடலில் பறந்த அமெரிக்காவின் ட்ரோன்கள் அனைத்தும் தரையிறக்கப்பட்டு உள்ளது.
மாஸ்கோ: அமெரிக்காவின் ட்ரோன் விமானத்தை ரஷ்யாவின் சுகோய் தாக்கி அழித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அதிர்ச்சி தரும் விவரங்கள் பல வெளியாகி உள்ளன.
கருங்கடல் என்று அழைக்கப்படும் பிளாக் சீ தற்போது மீண்டும் சிவப்பு கடலாக மாற தொடங்கி உள்ளது. காரணம் இங்கே நடக்கும் அமெரிக்கா - ரஷ்யா இடையிலான மோதல்.
இந்த கடல் மோதலை எளிதாக விளக்கலாம்.. துருக்கி, பல்கெரியா, உக்ரைன் என்று பல நாடுகளின் எல்லையில் கருங்கடல் உள்ளது. ரஷ்யா இதன் இன்னொரு எல்லையில் உள்ளது. இந்த கடல் பகுதியை ஆள ரஷ்யா நினைக்கிறது.
ஆனால் எல்லையில் இருக்கும் மற்ற நாடுகளுக்கு உதவுகிறேன் பேர்வழி என்ற போர்வையில் இங்கே அமெரிக்கா ரோந்து பணிகளை செய்து வருகிறது. இதற்காகவே அங்கே ட்ரோன்களை ரஷ்யா பறக்க விட்டு உள்ளது.

எப்படி நடந்தது?
இந்த நிலையில்தான் அமெரிக்காவின் ட்ரோனை அதிவேகத்தில் மோதி ரஷ்ய விமானம் தாக்குதல் நடத்தி உள்ளது. திடீர் தாக்குதல் காரணமாக கருங்கடலில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. அமெரிக்காவின் MQ-9 Reaper எனப்படும் தாக்குதல் திறன் கொண்ட ட்ரோன் மீதுதான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இந்த ட்ரோன் ஒரு விதமான கண்காணிப்பு ட்ரோன் ஆகும். அதோடு இதில் சிறிய அளவிலான ராக்கெட்டுகள், குண்டுகள் இருக்கும். இது சர்வதேச எல்லையில் பறந்து கொண்டு இருந்தாலும், ரஷ்யாவின் கடற்படையை இந்த விமானங்கள் நோட்டமிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் இங்கே ரஷ்யாவின் இரண்டு சுகோய் விமானங்கள் வேகமாக பறந்து அமெரிக்க ட்ரோனை இடைமறித்து உள்ளன.

வேண்டும் என்றே செய்தது?
அதன்படி அமெரிக்காவின் ட்ரோனை அதிவேகத்தில் மோதி ரஷ்ய விமானம் தாக்குதல் நடத்தி உள்ளது. ரஷ்யாவின் இரண்டு சுகோய் 27 விமானங்கள் இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. இந்த தாக்குதலுக்கு முன்பாக இரண்டு விமானங்களும் அந்த ட்ரோனை நெருக்கமாக சுற்றி வந்துள்ளன. அதன்பின் மேலே இருந்து ட்ரோன் மீது எரிபொருளை ஊற்றி உள்ளன. கடைசியில் வேகமாக வந்து அந்த ட்ரோனை மோதி தாக்கி உள்ளன. மோதுவதற்கு முன்பாக அருகில் சென்று மிக மோசமாக தாக்குவது போல பறந்து உள்ளன. ட்ரோனை திசை மாற்ற விடாமல் ரஷ்ய விமானங்கள் செய்ததாக கூறப்படுகிறது.

சேதம் இருக்கும்
இதில் ட்ரோன் மொத்தமாக உடைந்து நாசமாகி உள்ளது. ஆனால் ரஷ்யாவின் விமானம் சிறிய சேதங்களுடன் தப்பித்து உள்ளது. தற்போது அந்த ட்ரோன் கடலில் விழுந்துவிட்டதாக கூறப்படுகிறது. MQ-9 ட்ரோன் அங்கே ரோந்து பணிகளை செய்து கொண்டு இருந்தது. அப்போது ரஷ்யா விமானங்கள் இரண்டு அதை சுற்றி சுற்றி வந்துள்ளன. அதன்பின் அதன்மீது எரிபொருளை ஊற்றி உள்ளன. கடைசியில் அந்த ட்ரோனை மோதி அளித்து உள்ளன. ட்ரோனை தேடும் பணிகள் தற்போது முடுக்கிவிடப்பட்டு உள்ளன.

ரஷ்யா மறுப்பு
ஆனால் இதை ரஷ்யா மறுத்துள்ளது. நாங்கள் ட்ரோனை தாக்கி அழிக்கவில்லை. விபத்தில் அது விழுந்துவிட்டது. அந்த ட்ரோன் ரஷ்ய எல்லைக்கு அருகில் சென்றது. அதனால் விசாரணை நடத்த சென்றோம். ஆனால் அந்த ட்ரோனில் டிராண்ஸ்பாண்டர் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் அதன் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன் காரணமாகவே நாங்கள் அதை சுற்றி வளைக்க வேண்டியதாகிவிட்டது. மற்றபடி நாங்கள் அதை தாக்கவில்லை, என்று கூறியுள்ளது. இதையடுத்து தற்போது கருங்கடலில் பறந்த அமெரிக்காவின் ட்ரோன்கள் அனைத்தும் தரையிறக்கப்பட்டு உள்ளது.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications