"திமிறிய" மாணவிகள்.. தாலிபன்கள் அட்டகாசத்தால் வெகுண்டெழுந்து.. திணறிப்போன போலீஸ்.. ஆப்கனில் பரபரப்பு
ஆப்கனில் பல்கலை பெண்கள் தங்கள் போராட்டத்தை துவங்கி நடத்தி வருகிறார்கள்
ஆப்கன்: ஆப்கன் பெண்கள் கல்வி கற்க, இன்னொரு அதிர்ச்சி அறிவிப்பினை தாலிபன்கள் வெளியிட்டுள்ளனர்.. இதற்கான காரணத்தையும் தாலிபன்கள் விளக்கி உள்ளனர்.. தாலிபன்களின் பெருகிவரும் இந்த அட்டகாசத்தை பார்த்து உலக மக்களே அதிர்ந்து போய் உள்ளனர்..
தாலிபன்கள் ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்துக்கு மேலாகியும் இன்னும் பள்ளிகள் ஆப்கனில் திறக்கப்படவில்லை.. பல்கலை கல்வி நிலையங்களில் கூட ஆண்களுடன் சேர்ந்து படிக்க அனுமதி கிடையாது. ஆப்கன் பிள்ளைகள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.
ஆறாம் வகுப்பு மேல் கல்வி கற்க தடை, ஆண்கள் துணையின்றி விமானங்களில் பயணிக்க தடை, பொது இடங்களில் ஆடை கட்டுப்பாடு, பொழுதுபோக்கு பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் செல்ல தடை என பெண்களுக்கு பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பகீர் பகீர்
பல்கலைக் கழகங்களில் பெண்கள் பணியாற்ற கட்டுப்பாடுகளை தலிபான்கள் விதித்துவிட்டனர். தற்போதும் ஒரு கொடுமை நடந்துள்ளது.. ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு தலிபான்கள் இடைக்கால தடை விதித்துள்ளனர்... அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் இந்த உத்தரவு செல்லும் என்றும் அடுத்த உத்தரவு வரும் வரை இது அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்த நடவடிக்கைக்கு இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் கவலை தெரிவித்து வருகின்றன.. ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்க தாலிபான்கள் விதித்துள்ள கட்டுப்பாடுகளுக்கு அமெரிக்கா, ஐநா போன்றவை கண்டனம் தெரிவித்துள்ளன...

டிரஸ்கோடு
தங்கள் தடை உத்தரவுக்கு சர்வதேச அரங்கில் கடும் எதிர்ப்பு வந்துள்ள நிலையில், தடைக்கான காரணம் குறித்து தாலிபான் விளக்கம் அளித்திருந்தது.. அந்நாட்டின் உயர்கல்வி அமைச்சர் நிதா முகமது நதிம் இதை பற்றி சொல்லும்போது, "பல்கலைக்கழகம், கல்லூரிக்கு போகும் மாணவிகளுக்கு, உயர்கல்வி அமைச்சகம் விரிவான வழிகாட்டுதல்களை 14 மாதங்களுக்கு முன்பே வழங்கியிருந்தது... ஆனால், 14 மாதங்கள் கடந்தும்கூட, இந்த வழிகாட்டுதல்களை மாணவிகள் யாருமே பின்பற்றுவதில்லை. டிரஸ் தொடர்பான விதிகளையும் அவர்கள் பின்பற்றுவதில்லை...

கண்டிஷன்
முக்கியமாக, கல்வி நிலையங்களுக்கு வரும்போது, ஆண் உறவினரின் துணையுடன் வர வேண்டும் என்று கண்டிஷன் உள்ளது.. ஆனால், அந்த விதியையும் பின்பற்றுவதில்லை. ஏதோ கல்யாணத்துக்கு வருவது போல, மாணவிகள் டிரஸ் அணிந்து வருகின்றனர்... ஹிஜாப் விதிகளை அவர்கள் முறையாக பின்பற்றுவதில்லை... அதுமட்டுமல்ல, பொறியியல், வேளாண்மை போன்ற படிப்புகள், பெண்களின் கண்ணியம் மற்றும் ஆப்கானிஸ்தானின் கலாசாரத்திற்கு கொஞ்சம்கூட ஒத்துவராதவை... சில படிப்புகள் இஸ்லாமின் அடிப்படைகளை மீறும் விதமாக பயிற்றுவிக்கப்படுகிறது.. அதனாலேயே இப்படி ஒரு தடையை அறிவித்தோம்" என்று விளக்கம் தந்திருந்தார்.

கண்ணீர் பெண்கள்
இந்த ஒன்றரை வருட காலமாகவே, ஆப்கன்கள் பெண்களுக்கு எதிரான அறிவிப்புகளை வெளியிட்டபடியே உள்ளனர்.. எனினும், தற்போது இதற்கு மேல் கொறுத்து கொள்ள முடியாது பெண்கள், ஆவேசம் ஆகி உள்ளனர்.. ஆப்கனின் இந்த திடீர் முடிவால், மாணவிகள் கண்ணீருடன் பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேறும் வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் வேகமாக பரவின.. சில பல்கலைக்கழகங்களில் தாலிபன் அரசின் இந்த முடிவை எதிர்த்து மாணவிகளுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள்..

கலையாத மாணவிகள்
குறிப்பாக, நங்கர்ஹார் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தாலிபன் அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டங்களில் இறங்கி உள்ளனர்.. "உயர்கல்வி தடைக்கு எதிராக பெண்கள் ஹெராத் நகரில் கல்வி எங்களின் உரிமை" என்று முழக்கங்கள் எழுப்பியபடி போராட்டம் நடத்தினர்.. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், மாகாண ஆளுநரின் இல்லத்தை முற்றுகையிடுவதற்காக ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். அவர்களை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர். ஆனால் அவர்கள் யாருமே கலைந்து செல்லவில்லை..

பீய்ச்சிய தண்ணீர்
இதனால், பாதுகாப்பு படையினர், அவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டியடித்தனர்... எனவே, தற்போது ஆப்கானிஸ்தனில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் போராட்டங்கள் நாடு முழுவதும் பரவி வருவதால் அங்கு பதற்றமான சூழ்நிலையும் ஏற்பட்டு வருகிறது. கடந்த 20 வருடங்களாகத்தான் ஆப்கன் பெண்கள், மெல்ல தலைநிமிர தொடங்கினர்.. வீட்டை படிக்க ஆரம்பித்தனர்.. வேலைக்கும் போக ஆரம்பித்தனர்.. ஆப்கன் வரலாற்றில் கல்விக்கான பொற்காலம் என்று கடந்த 20 வருடங்களை மட்டுமே சொல்ல முடியும்.. ஆனால் அதற்குள் இந்த தாலிபன்கள் ஆட்சிக்கு வந்து அட்டகாசம் செய்ய ஆரம்பித்துவிட்டனர்..

அதிர அதிர எதிர்ப்பு
கல்வியை நோக்கி அடியெடுத்து வைத்து கொண்டிருந்த பெண்களுக்கு, உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதும், கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளதும், உலக நாடுகளை கவலை கொள்ள செய்து வருகின்றன.. எங்கே போவது, என்ன செய்வது என்றே தெரியாமல், ஆப்கன் பெண்கள் விழிபிதுங்கி கொண்டிருந்த நிலையில், தாலிபன்கள் மீதான எதிர்ப்புகளை, சம்பந்தப்பட்ட பெண்களே வலிய திணித்து வருவது, மிகுந்த பரபரப்பை ஆப்கன்மீது குவிய செய்து வருகிறது..!!!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications