"ரம்ஜான் பண்டிகை".. சவுதி அரேபியாவில் பிறை தெரிவது எப்போது தெரியுமா? வானியல் ஆர்வலர்கள் விளக்கம்
ரியாத்: இஸ்லாமிய காலண்டரின்படி வரும் 31ம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. ஆனால் ரம்ஜான் பண்டிகை என்பது பொதுவாக பிறை தெரிவதன் அடிப்படையில் ஒருநாள் முன்பு அல்லது ஒரு நாளைக்குபிறகு கூட கொண்டாடப்படும். அந்த வகையில் சவுதி அரேபியாவில் இன்று முதல் பிறை பார்க்கப்பட உள்ளது. அங்கு எப்போது பிறை தெரியும்? என்பது பற்றி சவுதி அரேபியாவின் வானியல் ஆர்வலர்கள் முக்கிய தகவலை தெரிவித்துள்ளனர்.
இஸ்லாமியர்களின் புனித பண்டிகையாக ரம்ஜான் உள்ளது. தற்போது ரமலான் மாதம் என்பதால் இஸ்லாமியர்கள் நோன்பு கடைப்பிடித்து வருகின்றனர். நாள் முழுவதும் அவர்கள் உணவு உண்ணாமல் உடலை வருத்தி நோன்பு பின்பற்றி வருகின்றனர்.

ரமலான் நோன்பு காலத்தில் இஸ்லாமியர்கள் சூரிய உதயத்தில் இருந்து சூரிய அஸ்தமனம் வரை உணவு எடுத்து கொள்வது இல்லை. அதன்பிறகு தினமும் இஃப்தார் விருந்துடன் நோன்பை முடிப்பார்கள்.
தற்போது இஸ்லாமியர்களின் நோன்பு காலம் முடிவுக்கு வர உள்ளது. இஸ்லாமியர்களின் காலண்டரின்படி மார்ச் 31ம் தேதி ரம்ஜான் கொண்டாடப்பட உள்ளது. ஆனால் பல சந்தர்ப்பங்களில் ரம்ஜான் தேதி என்பது மாற்றமடையும். வானில் பிறை தெரிவதன் அடிப்படையில் தான் ரம்ஜான் தேதி என்பது நிர்ணயம் செய்யப்படும். அதன்படி பார்த்தால் இந்த ஆண்டும் ரம்ஜான் பண்டிகைக்கான பிறை எப்போது தெரியும்? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
இஸ்லாமியர்களை பொறுத்தவரை சவுதி அரேபியா புனித இடமாக உள்ளது. சவுதி அரேபியாவில் தான் மெக்கா மற்றும் மதீனா உள்ளிட்ட இடங்கள் உள்ளன. இஸ்லாமியர்களில் ஒருபகுதியினர் சவுதி அரேபியாவில் தெரியும் பிறையின் அடிப்படையில் ரம்ஜான் கொண்டாடி வருகின்றனர். இதனால் தற்போது சவுதி அரேபியாவில் எப்போது பிறை தெரியும்? என்பது பற்றி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக சவுதி அரேபியாவின் வானியல் ஆர்வலர்கள் கூறுகையில், ‛‛ஷவால் பிறை அடிப்படையில் இஸ்லாமியர்கள் ரம்ஜான் கொண்டாடி வருகின்றனர். இந்த பிறை என்பது மார்ச் 29 (அதாவது இன்று) வானில் தெரியும். இன்று 2 மணிக்கு தெரிய தொடங்கும். சூரிய உதயத்துக்கு பிறகு 8 நிமிடங்கள் வரை இந்த பிறை இருக்கும். இதனால் சவுதி அரேபியாவில் ரம்ஜான் பண்டிகை என்பது மார்ச் 30ம் தேதி கொண்டாடப்பட வேண்டும். ஆனால் புதிய பிறை என்பது பூமியில் இருந்து பார்த்தால் தெரியாது. இன்னும் சொல்லப்போனால் டெலஸ்கோப் வழியாக கூட பார்க்க முடியாது. இதனால் இன்று வானில் பிறை உருவானாலும் கண்களுக்கு தெரியாது. எனவே நாளைய தினம் பிறை தெரியும்'' என கூறியுள்ளனர்.
அதாவது வானில் இன்று ஷவால் இஸ்லாமிய மாதத்துக்கான பிறை தோன்றினாலும் கூட அது நம் கண்களுக்கு தெரியாது. இதனால் பிறை உருவாகவில்லை என்ற அடிப்படையில் நாளை பிறை பார்க்கப்படும். நாளை பிறை தெரியும்பட்சத்தில் நாளை மறுநாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட வாய்ப்புள்ளது என்கின்றனர் அவுதி அரேபியாவின் வானியல் ஆர்வலர்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications