காட்டிக்கொடுத்த சாட்டிலைட்.. சிக்கிய ரயில் போட்டோ.. எங்கே இருக்கிறார் கிம் ஜோங்.. கசியும் தகவல்கள்!
வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் எங்கே இருக்கிறார் என்று சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில் தனியார் அமைப்பு வெளியிட்ட சாட்டிலைட் புகைப்படங்கள் ஒன்று பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பியாங்யோங்: வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் எங்கே இருக்கிறார் என்று சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில் தனியார் அமைப்பு வெளியிட்ட சாட்டிலைட் புகைப்படங்கள் ஒன்று பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் எப்படி இருக்கிறார் என்பதுதான் தற்போது உலகம் முழுக்க இருக்கும் ஒரே கேள்வியாக உள்ளது. அவரின் உடலின் நிலை குறித்து நிறைய உறுதிப்படுத்தப்படாத செய்திகள், வதந்திகள் வெளியான வண்ணம் இருக்கிறது.
இன்னும் அவரின் உடல்நிலை குறித்து உறுதியான செய்தி எதையும் வடகொரியா ஊடங்கங்கள் வெளியிடவில்லை. அதேபோல் வடகொரிய அரசும் இவரின் இருப்பிடம் அல்லது உடல்நிலை குறித்து உறுதியாக இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.

எங்கே இருக்கிறார் என்று சந்தேகம்
இந்த நிலையில் வடகொரியாவின் இருக்கும் வோன்சோன் நகரத்தில் கிம் இருப்பதாக செய்திகள் வந்தது. அங்கு கிம் குடும்பத்திற்கு சொந்தமான ரிசார்ட் ஒன்று இருக்கிறது. கிம்மின் சொந்த வீடும் இங்குதான் இருக்கிறது. ஒருவேளை கிம் இங்கு தங்கி இருக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இங்கு இருக்கும் ரிசார்ட் ஒன்றில் கிம் தீவிரமாக சிகிச்சை பெற்று வருகிறார் என்று கூறுகிறார்கள். ஆனால் இதை இன்னும் யாரும் உறுதி செய்யவில்லை.

புகைப்படம்
இந்த நிலையில் அதிபர் கிம் ஜோங் உன் எங்கே இருக்கிறார் என்று சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில் தனியார் அமைப்பு வெளியிட்ட சாட்டிலைட் புகைப்படங்கள் ஒன்று பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. வாஷிங்டன் மற்றும் வடகொரியாவை மையமாக கொண்டு செயல்படும் "38 நார்த்" என்ற நிறுவனம் இந்த சாட்டிலைட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. அங்கு இருக்கும் ரயில் நிலையத்தின் சாட்டிலைட் புகைப்படம் ஆகும். அங்கு இருக்கும் ரயில் ஒன்றின் புகைப்படத்தை இந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஏன் வைரல் ஆகிறது
ஒரு ரயில் நிலையத்தின் புகைப்படத்தில் பெரிதாக என்ன இருக்கிறது என்று கேட்கலாம். இந்த ரயில் நிலையத்தில் இருக்கும் பிளாட்பார்ம் ஒன்று அந்நாட்டு அதிபர் கிம் ஜோங்கிற்காக ஒதுக்கப்பட்டது. அதாவது கிம் ஜோங்கின் தனிப்பட்ட ரயிலை மட்டுமே இங்கு நிறுத்த முடியும். வேறு எந்த ரயிலையும் இங்கே நிறுத்த முடியாது. இந்த நிலையில் அந்த ரயில் நிலையத்தில் கிம் ஜோங்கின் தனியார் ரயில் தற்போது நிறுத்தப்பட்டு இருக்கிறது.

ரயில் எப்போது வந்தது
கடந்த 23ம் தேதி இந்த ரயில் அங்கே வந்து இருக்கிறது. இதனால் அதே தேதியில் கிம் ரயில் மூலம் இங்கே வந்து இருக்கலாம். அங்கிருந்து தனது ரிசார்டிற்கு கிம் சென்று இருக்கலாம் என்று சந்தேகம் கொள்கிறார்கள். அமெரிக்கா மற்றும் தென் கொரியாவை சேர்ந்த சில உளவு அமைப்பு தகவல்களும் இதை உறுதி படுத்தி உள்ளது. அதாவது கிம் ரயில் மூலம் இங்கே வந்து இறங்கியதாக கூறுகிறார்கள்.

கசியும் ரகசியம்
கிம்மின் தனி விமானம் அந்நாட்டு தலைநகர் பியாங்யாங்கில்தான் இன்னும் இருக்கிறது. இதனால் ரயிலில் அவர் ரகசியமாக இங்கே வந்திருக்க வாய்ய்புள்ளது என்கிறார்கள். ஆனால் வடகொரியா ஏன் இப்படி கிம் உடல் நிலை குறித்து அமைதி காக்கிறது என்று கேள்வி எழுந்துள்ளது. அமெரிக்க உளவு அமைப்பை இது பெரிய சந்தேகத்திற்கு உள்ளாக்கி உள்ளது. கிம்மிற்கு எதுவும் ஆகவில்லை என்றால் ஏன் இன்னும் வடகொரியா இது தொடர்பாக மறுப்பு தெரிவிக்கவில்லை என்றும் கேள்வி எழுந்துள்ளது.

என்ன பிரச்சனை
கிம் மிக மோசமான உடல்நிலையுடன் இருப்பதாக அமெரிக்கா செய்தி ஊடகமான சிஎன்என் செய்தி வெளியிட்டு இருந்தது. அவரின் உடல்நிலை மோசமடைந்து இருக்கிறது, இதய அறுவை ஒன்றின் காரணமாக அவரின் உடல்நிலை மிக மோசமாக உள்ளது என்று செய்தி வெளியிட்டு இருந்தது. . கிம் ஜோங் உன்னுக்கு கடந்த 12ம் தேதி இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பின் அவர் வெளியே எங்கும் வரவில்லை. இதனால்தான் இந்த சந்தேகம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications