ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை ..பல இடங்களில் அலை அலையாக புக தொடங்கிய கடல் நீர்.. வீடியோ
டோக்கியோ: இஷிகாவா மாகாணத்தில் 7.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்ம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ள நலையில, ஜப்பானில் கடற்கரையை ஒட்டி உள்ள பகுதிகளில் ஊருக்குள் கடல் நீர் வரத்தொடங்கி உள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
ஜப்பானின் மேற்கு கடலோரப் பகுதியில் 7.6 அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஜப்பானின் மேற்கு பகுதியான இஷிகாவா மாகாணத்தில் 7.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து மேற்கு கடற்கரையோரப் பகுதியில் தீவிர சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருகிறது. இதனால் "அந்தப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் உடனடியாக வெளியேற வேண்டும்" என்று என்.எச்.கே. என்ற ஜப்பானின் அரசு ஊடகம் அறிவித்துள்ளது.
ஜப்பானின் இஷிகாவா, நிகாடா, டோயாமா மாகாணங்களின் கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் மக்களை உடடினாக வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் இறங்கி உள்ளனர். சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் பல இடங்களில் கடல் நீர் அலை அலையாக புக தொடங்கியுள்ளது. இதனால் ஜப்பான் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.
ஜப்பானில் கடற்கரையை ஒட்டி உள்ள பகுதிகளில் ஊருக்குள் வர தொடங்கிய கடல் நீர்
— velmurugan (@velmurugantheni) January 1, 2024
சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் பல இடங்களில் கடல் நீர் அலை அலையாக புக தொடங்கியுள்ளது pic.twitter.com/DbDdLlN6LR
ஜப்பான் வானிலை ஆய்வு மையம் மேற்குக் கடலோரம் உள்ள அனைத்து ஜப்பானிய நகரங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பான் மட்டுமல்லாது தென் கொரியா, செர்பியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளதுது.
富山市 萩浦橋 津波到達中 pic.twitter.com/5TJkH4E1Mx
— 鈴木 一 (@hioooomn) January 1, 2024
கடலுக்கு அடியில் நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளபோது டெக்டானிக் தகடுகள் ஒன்றோடு மோதாமல் ஒன்றின் மீது ஒன்றாக எழுந்தால் சுனாமி அலைகளின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும் என்கிறார்கள். இதனிடையே இன்றைய நிலநடுக்கத்தின் தாக்கத்தால் 5 முதல் 7 மீட்டர் அளவிலான சுனாமி அலைகள் ஏற்படலாம் என்றும் மக்கள் உடனடியாக கடற்கரையோரங்களில் இருந்து வெளியேறி மிக உயரமான கட்டிடங்களில் உச்சிக்கு சென்றுவிடுமாறு ஜப்பான் வானிலை மைய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பசுபிக் பெருங்கடலை ஒட்டி அமைத்துள்ள ஜப்பானில் அடிக்கடி இதுபோல் சுனாமி வருவதும், நிலநடுக்கம் வருவதும் இயல்பான ஒன்றாக உள்ளது.
அங்குள்ள கட்டிடங்கள் நிலநடுக்கத்தை தாங்கும் வகையில் வடிவமைக்கப்படும் என்பதால் பெரிய அளவில் நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏற்படாது, அதேநேரம் சுனாமி குறித்து முறையான எச்சரிக்கையும் வழங்கப்படுவதால் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்படுவார்கள் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது. ஜப்பானில் கடைசியாக கடந்த 2011ம் ஆண்டு பெரிய அளவில் சுனாமி ஏற்பட்டது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications