1000 பிணைய கைதிகளை பிடித்து வைத்த "ஹமாஸ்" அகமது சியாம்.. சத்தமின்றி தீர்த்து கட்டிய இஸ்ரேல்.. பகீர்
டெல் அவிவ்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே ஒரு மாதத்திற்கு மேலாக யுத்தம் தொடர்ந்து வரும் நிலையில், ஹமாஸ் முக்கிய தளபதிகளில் ஒருவரை இஸ்ரேல் இப்போது ஏவுகனை தாக்குதலில் கொன்றுள்ளது.
கந்த அக். 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய கொடூர தாக்குதலை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறக்க முடியாது. முதலில் ஏவுகனை தாக்குதலை நடத்திய ஹமாஸ், அதன் பிறகு பிரிட்டன் நாட்டில் நுழைந்து சரமாரியாக தாக்குதல் நடத்தியது. மேலும், பலரையும் பிணைய கைகிகளாகவும் பிடித்துச் சென்றது.

இந்தத் தாக்குதலால் இஸ்ரேல் முதலில் தடுமாறினாலும் கூட அதன் பிறகு சுதாரித்துக் கொண்டு சரமாரியாக தாக்குதலை நடத்தியது. முதலில் காசா மீது சரிமாரியாக ஏவுகணை தாக்குதலை இஸ்ரேல் நடத்திய நிலையில், தொடர்ச்சியாக தரைவழித் தாக்குதலையும் இஸ்ரேல் தீவிரப்படுத்தியது. இதனால் அங்கே பதற்றமான சூழல் நிலவுகிறது.
கடும் மோதல்: இப்படி இஸ்ரேல் ஹமாஸ் இடையே மோதல் தீவிரமாக நடந்து வரும் நிலையில், மூத்த ஹமாஸ் தளபதி அஹ்மத் சியாம் என்பவரை வான்வழித் தாக்குதலில் கொன்றதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. காசா மருத்துவமனையில் சுமார் 1,000 பேரையும் நோயாளிகளையும் பிணைய கைதிகளாக இவர் தான் வைத்திருந்தார். மேலும், வடக்கு காசாவில் தாக்குதல் அதிகரித்த போதிலும் காசா மக்கள் தெற்கு நோக்கி செல்லவிடாமல் தடுத்தவரும் இவரே என்று இஸ்ரேல் கூறுகிறது. இவரை தான் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலில் கொன்றுள்ளது.
இது குறித்து இஸ்ரேல் பாதுகாப்பு துறை தனது ட்விட்டரில், "ஐடிஎஃப் விமானம் அஹ்மத் சியாம் இருக்கும் இடத்தை தாக்கியது. சுமார் 1000க்கும் மேற்பட்ட காசா மக்களையும் நோயாளிகளையும் ரான்டிசி மருத்துவமனையில் பிணை. கைதிகளாக பிடித்து வைத்தவர் இவர் தான். சியாம் ஹமாஸின் நாசர் ரத்வான் நிறுவனத்தின் தளபதியாக இருந்தார், காசாவில் உள்ள பொதுமக்களை பயங்கரவாத நோக்கங்களுக்காக ஹமாஸ் எப்படி மனிதக் கேடயங்களாக பயன்படுத்துகிறது என்பதற்கு இது மற்றொரு சாட்சி" என்று கூறப்பட்டுள்ளது.
அகமது சியாம்: இந்த அகமது சியாம் ஹமாஸின் நாசர் ரத்வான் பிரிவின் நிறுவனத் தளபதியாக இருந்ததாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. அவர் காசாவில் உள்ள அல்-புராக் பள்ளியில் மறைந்திருந்தபோது, போர் விமானம் மூலம் தாக்கப்பட்டார். இஸ்ரேல் உளவு துறைக்கு அகமது சியாம் இருப்பிடம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதை வைத்து நடத்திய தாக்குதலிலேயே இவர் கொல்லப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு கொஞ்ச நேரத்திற்கு முன்பு தான், இந்த அமகது சியாம் 1000 பேரை பிணைய கைதிகளாக பிடித்து வைத்திருந்ததாகவும் இஸ்ரேல் கூறியிருந்தது.
கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலை தொடர்ந்து ஹமாஸின் முக்கிய தளபதிகளை குறிவைத்து இஸ்ரேல் படைகள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ஹமாஸின் முக்கிய படை தளபதிளாக கருதப்படும் அலி காதி, முயதாஸ் ஈத், சக்கரியா அபு மாமர், ஜோத் அபு ஷ்மலா, பெலால் அல்காத்ரா, மற்றும் மெராட் அபு மெராட் என இதுவரை பலரை இஸ்ரேல் ராணுவம் கொன்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் போதிலும், போர் நிறுத்தத்திற்றுக இஸ்ரேல் இதுவரை சம்மதிக்கவில்லை. இதனால் வரும் நாட்களில் போர் மேலும் தீவிரமடையும் என்று அஞ்சப்படுகிறது.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications