"முதலாளிகள் விற்பனைக்கு.." விலை கூட ரொம்ப கம்மி.. சீனாவில் வினோதமான டிரெண்ட்! ஓ இதுதான் மேட்டரா!
பெய்ஜிங்: நமது அண்டை நாடான சீனாவில் திடீரென பலரும் தங்கள் முதலாளிகள், சக ஊழியர்களை விற்பனைக்குப் பட்டியலிட்டுள்ளனர். ஏதோ சமூக வலைத்தளத்தில் இல்லை. உண்மையாகவே செகண்ட் ஹேண்டில் பொருட்களை விற்கும் ஈ-காமர்ஸ் தளமான சியான்யூ தளத்தில் இதை எல்லாம் பட்டியலிட்டுள்ளனர். எதற்காக அவர்கள் இப்படிச் செய்கிறார்கள். இதன் பின்னணியில் உள்ள காரணம் என்ன என்பது குறித்துப் பார்க்கலாம்.
இந்த காலத்தில் எல்லா வேலைகளிலும் ஒருவித மன அழுத்தம் இருக்கவே செய்யும். மன அழுத்தம் இல்லாத வேலை என்று எதுவும் இல்லை. அதேநேரம் வேலை செய்யும் இடத்தில் நல்ல பாஸ் கிடைத்துவிட்டால் நமக்குப் பிரச்சினை இருக்காது.

அதேநேரம் டாக்சிக்கான பாஸ் கிடைத்தால் அவ்வளவுதான் வேலை செய்யும் இடமே நரகமாக மாறிவிடும். அதுவே ஒருவருக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும். இந்த நெகடிவ் பணிச் சூழல் மனச்சோர்வு உள்ளிட்ட பல வகை பாதிப்புகளை ஏற்படுத்தும்.
வினோதமான டிரெண்ட்: இதுபோன்ற சூழல் ஏற்படும் போது அதைச் சமாளிக்க ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்தைச் செய்வார்கள். சிலர் நல்லா சாப்பிடுவார்கள், சிலர் வீக் எண்டில் நண்பர்களுடன் பார்டி செய்வார்கள். அப்படிதான் சீனாவில் வேலையில் ஏற்படும் அழுத்தத்தைச் சமாளிக்க ஒரு வினோதமான டிரெண்ட் பரவி வருகிறது.
அதாவது அங்கு செகண்ட் ஹேண்ட்டில் பொருட்களை விற்பனை செய்யும் ஈ-காமர்ஸ் தளங்களில் ஊழியர்கள் தங்கள் முதலாளிகள், சக ஊழியர்கள், அவ்வளவு ஏன் தங்கள் வேலைகளைக் கூட விற்பனைக்குப் பட்டியலிடுகிறார்கள்.
முதலாளிகள் விற்பனைக்கு: பிரபல அலிபாபா நிறுவனத்தின் செகண்ட் ஹேண்ட் ஈ-காமர்ஸ் தளமான சியான்யூ என்ற தளத்தில் தான் இந்தக் கூத்து நடந்து வருகிறது. அங்குப் பலரும் வேலை ஏற்படுத்தும் மன அழுத்தத்தைக் குறைக்க இதுபோல தங்கள் முதலாளிகளை விற்கிறார்கள். சீனாவில் பணியிட சூழல் மிக மோசமாக இருப்பதையே இது காட்டுவதாகப் பலரும் விமர்சித்து வருகிறார்கள்.
எரிச்சலூட்டும் முதலாளிகள், மிக மோசமான வேலைகள், வெறுக்கப்படும் சக ஊழியர்கள் எனப் போட்டுப் பட்டியலிடுகிறார்களாம்.. சில ஆயிரம் முதல் லட்ச கணக்கில் கூட இதைப் பட்டியலிட்டுள்ளனர்.. அப்படி தான் பெண் ஒருவர் தனது வேலையை ₹ 91,000க்கு பட்டியலிட்டுள்ளார். இதில் மாதம்₹ 33,000 சம்பளம் கிடைக்கும் என்றும் மூன்று மாதங்களில் போட்ட காசை திரும்ப எடுத்துக் கொள்ளலாம் என்றும் பதிவிட்டுள்ளார். இவர் மட்டுமின்றி இவரைப் போலவே பலரும் தங்கள் முதலாளிகளை விற்பனைக்கு பட்டியிலிட்டுள்ளனர.
எதற்காக இந்த டிரெண்ட்: அதேநேரம் இவை எல்லாம் வெறும் ஜோக் தானாம். ஆபீஸில் ஏற்படும் கடுப்பை எப்படி போக்குவது எனத் தெரியாமல் இப்படிச் செய்து கொண்டு இருக்கிறார்கள். யாராலும் இதில் ஆர்டர் போட முடியாதாம். அப்படியே தெரியாமல் யாராவது ஆர்டர் போட்டாலும் அவர்களது ஆர்டரை கேன்சல் செய்யப்படுகிறது.
என்ன மனநிலை: இது குறித்து அங்குள்ள சிலர் கூறுகையில், "இவை உண்மையான விற்பனை இல்லை. யாரையும் இங்கே வாங்குவதும் இல்லை. விற்பதும் இல்லை. தங்கள் முதலாளிகளை, சக ஊழியர்களை, வேலையை அற்ப தொகைக்கு விற்பதன் மூலம் அவர்களைப் பழிவாங்க முடிவதாக நினைக்கிறார்கள். அப்படி தான் இந்த டிரெண்ட் ஆரம்பித்தது" என்றார்.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications