ஜி ஜின்பிங் பரிசுகளை குப்பையில் வீசிய டிரம்ப் டீம்.. சீனாவில் கிளம்பியபோது சம்பவம்.. ஷாக் பின்னணி

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2 நாள் சுற்றுப்பயணமாக சீனா சென்றார். சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் சந்தித்து வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டார். இந்த வேளையில் டொனால்ட் டிரம்ப் உள்பட அவருடன் சென்ற அமெரிக்க குழுவினருக்கு சீனா சார்பில் ஏராளமான பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. ஆனால் அவை எல்லாவற்றையும் அமெரிக்க பிரதிநிதிகள் குப்பை தொட்டியில் வீசிவிட்டு விமானத்தில் நாடு திரும்பிய சம்பவம் பேசும்பொருளான நிலையில் அதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமெரிக்காவும், சீனாவும் எதிரெதிர் துருவங்களாக உள்ளன. இருநாடுகளும் வல்லரசாக இருந்தாலும் கூட கடும் போட்டி நிலவி வருகிறது. அமெரிக்காவின் இடத்தை எட்டிப்பிடிக்க சீனாவும், சீனாவின் வளர்ச்சியை தடுக்க அமெரிக்காவும் காய்களை நகர்த்தி வருகிறது. இதற்கிடையே தான் 2 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவுக்கு சென்றார்.

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து இருநாடுகள் இடையேயான உறவை மேம்படுத்துவது, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதித்தார். அப்போது இருநாடுகள் இடையே சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இருநாடுகள் இடையே வர்த்தகம், அரிய வகை கனிமங்கள் ஏற்றுமதி தொடர்பாக ஒப்பந்தம் செய்ய டிரம்ப் முயன்றார். ஆனால் அந்த ஒப்பந்தம் நடக்கவில்லை. மாறாக சோயாபீன்ஸ் மற்றும் போயிங் விமானங்களுக்கான ஒப்பந்தங்கள் மட்டும் இருநாடுகள் இடையே கையெழுத்தானது.

இது டிரம்புக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. இதற்கிடையே தான் தற்போது ஒரு சம்பவம் பேசும் பொருளாகி உள்ளது. அதாவது சீனாவின் 2 நாள் பயணத்தை முடித்துவிட்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவரது தூதுக்குழு மற்றும் பிற அமெரிக்க தொழிலதிபர்கள் நேற்று நாடு திரும்பினர். டிரம்ப் உள்பட அனைவரும் 2 நாள் சுற்றுப்பயணத்தில் சீன அதிபர்ஜி ஜின்பிங் உள்பட பலரும் வழங்கிய பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

டொனால்ட் டிரம்ப் சீனாவுக்கு தனது வெள்ளை மாளிகை ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் அடங்கிய குழுவுடன் சென்ற நிலையில் அனைவருக்கும் பல்வேறு பொருட்கள் பரிசாக கிடைத்தது. ஆனால் நேற்று சீனாவில் இருந்து மீண்டும் அமெரிக்கா புறப்பட்டபோது அனைத்தும்
குப்பை தொட்டியில் வீசப்பட்டது. சீனாவில் இருந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் விமானம் முன்பு பெரிய குப்பை தொட்டி வைக்கப்பட்டு இருந்தது.

அதில் சீனா வழங்கிய பரிசு பொருட்கள், பர்னர் போன்கள், பேட்ஜ்கள் என அனைத்தும் வீசப்பட்டன. அதன்பிறகு தான் அனைவரும் அங்கிருந்து புறப்பட்டனர். இதுதொடர்பான போட்டோக்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருகின்றன. இதனால் விவாதத்தை கிளப்பி உள்ளது. மேலும் ஏன் இப்படி செய்தனர்? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதற்கு முக்கிய காரணம் உள்ளது. அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே கடும் போட்டி உள்ளது. அமெரிக்காவுக்கு எப்படி பாதிப்பை ஏற்படுத்துவது என்று சீனாவும், சீனாவுக்கு எப்படி சிக்கலை தருவது என்று அமெரிக்காவும் காலம் காலமாக யோசித்து செயல்பட்டு வருகின்றன.

அதோடு சீனாவை எடுத்து கொண்டால் உளவு பார்ப்பது, ரகசிய கண்காணிப்பு உள்ளிட்டவற்றில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதனால் சீனா ஏதாவது ஒரு பொருள் வழியாக தங்களின் நடவடிக்கை, செயல்பாட்டை உளவு பார்க்கலாம் என்ற அச்சம் அமெரிக்க தலைவர்களிடம் உள்ளது.

இதனால் சீனாவில் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு அதிபர் அல்லது அமெரிக்க அரசின் முக்கிய அதிகாரிகள் புறப்படும்போது அந் நாட்டின் பொருட்களை அங்கேயே விட்டு செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இது ஒன்றும் புதிது கிடையாது. வழக்கமான நடைமுறை தான்.

அதன்படி தான் தற்போதும் 2 நாள் சுற்றுப்பயணத்தின்போது வழங்கப்பட்ட பர்னர் போன்கள், அடையாள ப்டைகள், அழைப்பிதழ்கள், பரிசு பொருட்கள், நினைவு பொருட்கள் குப்பை தொட்டியில் வீசப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகை பாதுகாப்பு மற்றும் சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகளின் அறிவுரையின்படி இது பின்பற்றப்பட்டுள்ளது.

இதுபற்றி நியூயார்க் போஸ்ட் நிருபர் எமிலி குடின் ட்விட்டரில், ''சீன அதிகாரிகள் வழங்கிய அடையாள அட்டை, பர்னர் போன்கள், பின்கள் அனைத்தையும் விமானத்தில் ஏறும் முன் அமெரிக்க ஊழியர்கள் சேகரித்து குப்பையில் வீசினர். சீனாவில் இருந்து எதையும் கொண்டு வர அனுமதி வழங்கப்படவில்லை" என்று பதிவிட்டுள்ளார்.

பொதுவாக சீனா வழங்கும் பொருட்களை குப்பை தொட்டியில் வீசுவது திரைமறைவில் நடக்கும். ஆனால் இந்த முறை வெளிப்படையாக நடந்ததால் அதுதொடர்பான போட்டோக்கள் வெளியாகி கேள்வியை எழுப்பி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+