அதிர்ந்து கொண்டே இருக்கும் இந்தோனேஷியா..30 நாளில் 1,440 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது ஏன்? ஷாக் தகவல்
ஜகர்தா: இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் நேற்று திடீரென்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 என்ற அளவில் பதிவானது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படாத நிலையில் கடந்த 30 நாளில் இந்தோனேஷியாவில் 1,440 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ள திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. இந்தோனேஷியாவை மையப்படுத்தி இந்த நிலநடுக்கங்கள் ஏற்படுவது ஏன்? பின்னணி என்ன? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
‛சென்யார்' புயலால் ஏற்கனவே இந்தோனேஷியா பாதிக்கப்பட்டுள்ளது. இந்த புயலால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவால் அங்குள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தோனேஷியாவின் வடக்கு சுமத்ராவில் மட்டும் 25 பேர் வரை பலியாகி உள்ளனர். தற்போது மீட்பு பணிகள், நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்படியான சூழலில் தான் நேற்று திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தேனேஷியாவின் சுமத்ரா தீவில் உள்ள ஆச்சே மாகாணத்தில் நேற்று திடீரென்று பூமி குலுங்கியது. திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறி வந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 என்ற அளவில் பதிவாகி உள்ளது. அதிர்ஷ்டவசமாக எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை.
இதற்கிடையே தான் தற்போது திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்தோனேஷியா தொடர்ந்து நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த 30 நாளில் மட்டும் இந்தோனேஷியாவில் மொத்தம் 1,440 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய
காரணம் அதன் அமைவிடம் தான்.
இந்தோனேஷியா பசிபிக் நெருப்பு வளையம் என்ற புவியியல் மண்டலத்தில் அமைந்துள்ளது. உலகில் ஏற்படும் நிலநடுக்கங்களில் 90 சதவீதம் இந்த மண்டலத்தில் தான் பதிவாகிறது. அந்த வகையில் தான் இந்தோனேஷியாவில் கடந்த 30 நாட்களில் 1,400 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் 250 நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவுகோலில் 4.5 என்ற அளவுக்கு மேலாக பதிவாகி உள்ளது. இது இந்தோனேஷியா மக்களை கவலையடைய செய்துள்ளது.
குறிப்பாக கடந்த 2004ம் ஆண்டில் இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. 9.1 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. அப்போதுசுனாமி ஏற்பட்டது. மொத்தம் 2 லட்சத்து 30 ஆயிரம் மக்கள் இறந்தனர். ஆனால் சமீபத்திய நிலநடுக்கங்கள் சுனாமி உள்பட எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications