Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஷாக்கிங்! அமெரிக்கா சொன்னதையே கேட்காத இஸ்ரேல்.. உலக நாடுகளை 3ம் உலகப்போருக்கு இழுக்கும் நெதன்யாகு?

Subscribe to Oneindia Tamil

ஜெருசலேம்: ஈரான் மீது பதிலடி தாக்குதல் நடத்த வேண்டாம் என்று நட்பு நாடுகள் வைத்த கோரிக்கையை இஸ்ரேல் நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் 3ம் உலகப்போர் ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

உலகம் முழுக்க பல்வேறு போர்கள் நடந்து வருகின்றன. அமெரிக்கா - ரஷ்யா இடையே 1960களில் நடைபெற்ற பனிப்போருக்கு பின்பாக மிக மிக மோசமான மோதல் தற்போது ஏற்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு அமெரிக்கா, ரஷ்யா இடையிலான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் உக்ரைன். உக்ரைன் நேட்டோ படையில் இணைய விரும்பியது. இதற்காக முயற்சிகளை செய்தது.

Why Israel is not listening to its allies on not attacking back at Iran

சோவியத் யூனியன் ஒன்றாக இருந்த போது ரஷ்யாவும் - உக்ரைனும் ஒன்றாக இருந்த நாடுகள் ஆகும். அதன்பின் 1991 டிசம்பரில் சோவியத் யூனியன் உடைந்த போது உக்ரைன் தனியாக பிரிந்தது. இப்படிப்பட்ட நிலையில் உக்ரைன் நேட்டோவில் இணைந்தால் அது ரஷ்யாவிற்கு ஆபத்து. ஏற்கனவே ரஷ்யாவை சுற்றி இருந்த பெரும்பாலான பழைய சோவியத் நாடுகள் அமெரிக்காவின் நேட்டோ படையில் இணைந்துவிட்டது. இதில் உக்ரைனும் இணைந்தால் அது ரஷ்யாவிற்கு பெரிய சிக்கலாகும். பாதுகாப்பு ரீதியாக ரஷ்யாவிற்கு நேட்டோ வைக்கும் செக்காக இது அமைந்துவிடும்.

இதனால் உக்ரைனை நேட்டோ படையில் சேர விடாமல் தடுக்க ரஷ்யா தீவிர முயற்சி எடுத்து வருகிறது. உக்ரைன் அமெரிக்காவின் முழு நேர கூட்டாளி ஆகும் முன் அதை ஆக்கிரமிக்க வேண்டும் என்ற திட்டத்தில் ரஷ்யா இருக்கிறது. ஏனென்றால் ரஷ்யாவின் பெரும்பாலான எல்லையை உக்ரைன்தான் கவர் செய்கிறது. இதற்காக முதலில் உக்ரைன் பிரதமர்களை கட்டுப்படுத்தி ரஷ்யா நிழல் ராஜ்ஜியம் நடத்தியது. ஆனால் அதன்பின் ரஷ்யாவிற்கு ஆதரவாக இருக்கும் அரசியல் தலைவர்களை உக்ரைன் மக்கள் தூக்கி வீசினார்கள்.

இந்த நிலையில்தான் உக்ரைனில் தற்போது கடந்த ஒன்றரை வருடமாக ரஷ்யா போர் செய்து வருகிறது. போர் காரணமாக உக்ரைன் நேட்டோவில் இணைய முடியாது. அதே சமயம் இந்த போர் முடியாமல் அப்படியே நீடிக்கும். இதில் நேட்டோ நேரடியாக தலையிட்டால் அது உலகபோராக வெடிக்கும். உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுத உதவிகளை செய்து வருகிறது. இன்னொரு பக்கம் ரஷ்யாவிற்கு ஆதரவாக சீனா இருப்பதால் போர் சூழல் மோசமாகும் என்ற அச்சம் உள்ளது.

ஈரான் இஸ்ரேல் போர்: இது போக இப்போது பாலஸ்தீனம் - இஸ்ரேல் மோதல் ஏற்பட்டு உள்ளது. இஸ்ரேல் - பாலஸ்தீன போர் என்பது பாரம்பரியமாக போருக்கு இருக்கும் முக்கியமான காரணம். அது நிலத்தகராறு. அதாவது பாலஸ்தீனம் இருந்த இடத்தில்தான் தற்போதைய இஸ்ரேல் கட்டமைக்கப்பட்டு உள்ளது. 1947ல் இருந்து பாலஸ்தீனத்தை கொஞ்சம் கொஞ்சமாக இஸ்ரேல் ஆக்கிரமித்து வந்தது. தற்போது மீதம் இருக்கும் காஸா பகுதியையும், ஜெருசலேமின் வெஸ்ட் பேங்ங் பகுதிகளையும் கைப்பற்றும் முடிவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

காசாவில் இருந்து பாலஸ்தீன விடுதலை போராட்ட அமைப்பான ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக இந்த தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேலில், இஸ்ரேல் அதிகாரத்தை எதிர்க்கும் தனி பகுதிதான் காசா. இதில் இருந்து இஸ்ரேல் முன்பே வெளியேறிவிட்டது. காரணம் இங்கே உள்ள ஹமாஸ் அமைப்பு. இந்த ஹமாஸ் அமைப்பும் - இஸ்ரேலும்தான் தற்போது பாலஸ்தீனத்திற்காக சண்டை போட்டுகொண்டு இருக்கின்றன.

இந்த இரண்டு நாடுகளை சேர்த்து தற்போது மொத்தம் 8 நாடுகள் போரில் நேரடியாக தலையிட்டுள்ளன. இஸ்ரேல், பாலஸ்தீனம், லெபனான், ஈராக், எகிப்து, சிரியா, அமெரிக்கா, சவுதி அரேபியா ஆகிய நாடுகள் போரில் நேரடியாக தலையிட்டு உள்ளன. லெபனான், ஈராக், எகிப்து, சிரியா பாலஸ்தீனம் பக்கம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈரான் உள்ளே வந்தது: இந்த நிலையில்தான் ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. கடந்த ஏப்ரல் 1ம் தேதி சிரியாவில் இருக்கும் ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலியப் படைகள் கடந்த சில மாதம் முன் சிரியா தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் சிரியா வடக்கு நகரமான அலெப்போவில் உள்ள விமான நிலையங்கள் மீது நேரத்தில் ஏவுகணைத் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியது. அங்கு உள்ள ஓடுபாதைகளை சேதப்படுத்தியதாகவும், இரண்டு குடியிருப்புகள் அருகே ராக்கெட் தாக்குதல் நடத்தியதாகவும் கூறியது.

சிரியா தாக்குதல்: சிரியாவின் இந்த குற்றச்சாட்டை இஸ்ரேல் மறுக்கவில்லை. ஏற்கவும் இல்லை. ஏகப்பட்ட ராக்கெட்டுகளை இஸ்ரேல் மாறி மாறி சிரியா மீது ஏவியதாக கூறப்படுகிறது. சிரியாவில் ஹெஸ்புல்லா படையினர் உள்ளனர். இவர்கள் ஈரான் ஆதரவு போராளிகள். இவர்கள்தான் பாலஸ்தீனத்தில் ஹமாஸ் படைக்கு உதவி செய்வதாக கூறப்பட்டது. இவர்களின் ஆதரவின் பெயரிலேயே ஹமாஸ் படைகள் இயங்கி வருகிறது. இந்த நிலையில்தான் சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது.

தூதரக அட்டாக்: இந்த தாக்குதலுக்கு இடையில்தான் சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அங்கே ஈரான் ராணுவ அதிகாரிகளின் கூட்டம் அப்போது நடந்தது. ஈரானிய இராணுவத் தளபதிகள் டமாஸ்கஸில் உள்ள ஈரானின் தூதரக வளாகத்திற்குள் ஒரு உயர்மட்டக் கூட்டத்தைக் கூட்டுவது பாதுகாப்பானது என்று நினைத்து அங்கே கூட்டம் நடத்திக் கொண்டு இருந்தனர். , சர்வதேச விதிமுறைகளின் படி தூதரகங்களை தாக்க கூடாது. இதனால் அங்கே ஈரான் ராணுவ அதிகாரிகளின் கூட்டம் நடந்தது.

ஆனால் சர்வதேச யுஎன் விதிகளை மீறி தூதரக வளாகத்தின் மீது வான்வழித் தாக்குதலில் இஸ்ரேல் ஈடுபட்டது. இதில் ஏழு ஈரானிய அதிகாரிகள் கொல்லப்பட்டனர். ஈரானின் உயர்மட்ட ராணுவ அதிகாரிகளின் ஒருவரான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி கொல்லப்பட்டார். இவர் புரட்சிகர காவல்படையின் (IRGC) மூத்த தளபதி ஆவார். இந்த தாக்குதலுக்குத்தான் தற்போது ஈரான் பதிலடி கொடுத்துள்ளது. இஸ்ரேல் ஈரான் இடையே பயங்கரமான போர் மூண்டுள்ளது. இத்தனை நாள் இரண்டு நாடுகளுக்கு இடையில் புகைச்சல் இருந்து வந்த நிலையில் தற்போது இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது.

200 ஏவுகணைகளை டிரோன்கள் உதவியுடன் இஸ்ரேல் மீது ஈரான் ஏவி உள்ளது. இதுவரை 200க்கும் மேற்பட்ட ஈரானிய ஆளில்லா விமானங்கள் இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்டுள்ளன. இந்த ஏவுகணைகள் இன்னும் இஸ்ரேலை அடையவில்லை. விரைவில் அவை இஸ்ரேல் மீது சென்று தாக்குதலை ஏற்படுத்தும். சில ஏவுகணைகள் தற்போதைக்கு இஸ்ரேலின் ராணுவ தளவாடங்களை தாக்கி லேசான சேதங்களை ஏற்படுத்தி உள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது

பதிலடி தரும் இஸ்ரேல்; ஈரான் மீது பதிலடி தாக்குதல் நடத்த வேண்டாம் என்று நட்பு நாடுகள் வைத்த கோரிக்கையை இஸ்ரேல் நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் 3ம் உலகப்போர் ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. அமெரிக்க, பிரான்ஸ் போன்ற நாடுகள் வைத்த கோரிக்கையை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்..

இதில் ரஷ்யா, சீனாவும் தலையிட்டு உள்ளது. இரண்டு நாடுகளுமே பாலஸ்தீனம் என்ற தனி நாட்டை உருவாக்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது.

இது மூன்றாம் உலகப்போராக வெடிக்கலாம் என்ற அச்சம் உள்ளது. ஏனென்றால் இரண்டு போர்கள் ஒரே நேரத்தில் நடக்கின்றன. இரண்டு போர்களிலும் அமெரிக்கா தலையிட்டு உள்ளது. ஒன்று ரஷ்ய போர், இன்னொன்று இஸ்ரேல் போர். இரண்டுமே கொள்கை, நில ரீதியாக கடுமையான போர். பல நாடுகள் இதில் தலையிட்டுள்ளன. இந்த காரணங்களுக்காக மூன்றாம் உலகப்போர் வெடிக்கலாம்,

அணு ஆயுத போராக இது உருவெடுக்கும் அச்சமும் உள்ளது. உக்ரைனை மண்டி போட வைக்க ஏற்கனவே ரஷ்யா அணு ஆயுதத்தை எடுக்கும் திட்டத்தில் உள்ளதாக கூறப்பட்டது. இஸ்ரேலின் வலிமையை காட்ட.. ஹமாஸை மொத்தமாக தலைமுறை தலைமுறையாக அழிப்போம் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அதனால் அவர்களும் கூட அணு ஆயுதத்தை பயன்படுத்தலாம். இதனால் இந்த போர் அணு ஆயுத போராக மாறினாலும் அச்சப்படுவதற்கு இல்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+