அத்தனையும் ஆபாசம்.. பெண்ணிடம் அத்துமீறிய காதலன்.. உடனே பிரிவதாக அறிவித்த இத்தாலி பிரதமர்! என்னாச்சு
ரோம்: தனது காதலனின் ஆபாச பேச்சு வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், அவரிடம் இருந்து பிரிவதாகவும் 10 ஆண்டு உறவு முடிவுக்கு வருவதாகவும் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி அறிவித்துள்ளார்.
ஐரோப்பாவில் இருக்கும் முக்கிய நாடுகளில் ஒன்று இத்தாலி. அங்கே பிரதமராக இருப்பவர் ஜார்ஜியா மெலோனி. 46 வயதான இவர், கடந்தாண்டு அக். 22ஆம் தேதி தான் இத்தாலி நாட்டின் பிரதமராகப் பொறுப்பிற்கு வந்தார்.

அவர் பிரதமர் பதவிக்கு வந்து ஓராண்டு நிறைவடையும் நிலையில், தனது பார்ட்னர் ஆண்ட்ரியா ஜியாம்ப்ருனோவிடம் இருந்து பிரிவதாக அறிவித்துள்ளார். ஜியாம்ப்ருனோவின் ஆபாச பேச்சு வெளியாகி சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இத்தாலி பிரதமர்: ஜியாம்ப்ருனோவை இத்தாலி பிரதமர் மெலோனி திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற போதிலும், இருவரும் சுமார் 10 ஆண்டுகளாக ஒன்றாகவே வசித்து வருகிறார்கள். இந்த தம்பதிக்கு ஏழு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்தச் சூழலில் ஜியாம்ப்ருனோவின் சில கருத்துகள் சர்ச்சையானது. தான் வேறு ஒரு பெண்ணுடன் உறவில் இருப்பது போலவும் ஆபாசமாகவும் அவர் பேசும் பேச்சு வெளியான நிலையில், அவரை விட்டுப் பிரிவதாக மெலோனி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக இத்தாலி பிரதமர் மெலோனி தனது எக்ஸ் பக்கத்தில், "சுமார் 10 ஆண்டுகள் நீடித்த ஆண்ட்ரியா ஜியாம்ப்ருனோ உடனான எனது உறவு இப்போது முடிகிறது. கடந்த சில காலமாகவே எங்கள் பாதைகள் பிரிந்துவிட்டன. அதை ஒப்புக்கொள்ளும் நேரம் வந்துவிட்டது. நாங்கள் கழித்த இந்த காலத்தையும் எங்கள் நட்பையும் நான் பாதுகாப்பேன்.. தனது தாய் மற்றும் தந்தையை நேசிக்கும் எனது ஏழு வயது சிறுமியை நான் நிச்சயம் பார்த்துக் கொள்வேன். இதைப் பற்றி நான் சொல்வதற்கு வேறொன்றுமில்லை" என்று பதிவிட்டுள்ளார்.
சர்ச்சை கருத்து: இத்தாலி பிரதமர் மெலோனிவின் பார்ட்னர் ஆண்ட்ரியா ஜியாம்ப்ருனோ அந்நாட்டில் செய்தியாளராக இருக்கிறார். மேலும் அவர், "டியாரியோ டெல் ஜியோர்னோ" என்ற நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறார். அவர் நிகழ்ச்சியின் இடைய பேசிய சில கருத்துகள் இணையத்தில் டிரெண்டானது. கூட்டுப் பலாத்காரம் தொடர்பாகப் பேசும் போது, பெண்கள் அதிகமாகக் குடிக்காமல் இருந்தால் பலாத்காரத்தில் இருந்து தப்பிக்க முடியும் என்று அவர் கூறியது சர்ச்சையானது.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "நீங்கள் பார்ட்டிக்கு சென்றால்.. கண்டிப்பாக மது குடிப்பீர்கள். ஆனால் அளவுக்கு அதிகமாகக் குடித்துவிட்டு உங்கள் உணர்வை இழக்கும் போதுதான் பிரச்சினை வருகிறது. இதைச் செய்யாமல் இருந்தால் எல்லா பிரச்சினையையும் தவிர்க்கலாம்" என்று கூறியிருந்தார். பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றவாளி ஆக்குவது போல இவரது கருத்துகள் இருப்பதாக பெரும் சர்ச்சை கிளம்பியது. கடந்த ஆக். மாதம் இந்தச் சம்பவம் நடந்தது.
ஆபாசம்: அப்போதே இத்தாலி பிரதமர் மெலோனிவிடம் இது குறித்து கேள்வி எழுப்பினர். உங்கள் பார்ட்னர் கருத்தை நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்களா என்ற கேள்விக்கு, "எனது பார்ட்னர் கூறிய கருத்துக்களை வைத்து என்னை மதிப்பிடக்கூடாது.. அவரது கருத்துகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது. அதேபோல எதிர்காலத்திலும் அவர் கூறும் கருத்துகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது" எனக் குறிப்பிட்டார்.
இதற்கிடையே ஜியாம்ப்ருனோ தொடர்பான வேறு சில வீடியோக்களும் வெளியாகி உள்ளது. அதில் தனது பெண் ஊழியரிடம் ஆபாசமாக நடந்து கொள்கிறார். அதேபோல மற்றொரு ஆடியோவில், தன்னுடன் செக்ஸ் பார்ட்டியில் கலந்து கொள்ளும் பெண் ஊழியர்கள் மட்டுமே தன்னுடன் வேலை செய்யலாம் என்று அவர் கூறுவது போன்ற ஆடியோ வெளியானது. கடந்த வியாழக்கிழமை இந்த ஆடியோ வெளியான நிலையில், மறுநாள் அதாவது நேற்று வெள்ளிக்கிழமையே தனது பார்ட்னரை விட்டுப் பிரிவதாக இத்தாலி பிரதமர் மெலோனி அறிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications