காலிஸ்தான் ஆதரவாளருக்கு தேர்தலில் மரண அடி கொடுத்த கனடா மக்கள்.. இந்தியாவுக்கு இது ஏன் முக்கியம்?
ஒட்டாவா: கனடா நாட்டின் பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகின. அதில் லிபரல் கட்சி ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. இதற்கிடையே ட்ரூடோ காலத்தில் கிங் மேக்கராக இருந்த ஜக்மீத் சிங் என்ற காலிஸ்தான் ஆதரவாளர் படுதோல்வி அடைந்துள்ளார். ஜக்மீத் சிங்கின் தோல்வி இந்தியா கனடா உறவுக்கு எவ்வளவு முக்கியம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
கனடாவில் கடந்த சில காலமாகவே அரசியல் குழப்பம் நிலவி வந்த நிலையில், ட்ரூடோ சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து பிரதமராகப் பதவியேற்ற மார்க் கார்னி நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டுத் தேர்தலை அறிவித்தார். அங்கு நேற்று வாக்குப்பதிவு நடந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

கனடா தேர்தல்
இதில் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. சில தொகுதிகளில் இன்னும் வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில், மொத்தமுள்ள 343 சீட்களில் லிபரல் கட்சி 168 இடங்களில் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கன்சர்வேடிவ் கட்சி 144 இடங்களையும் பெலோயில்-சாம்ப்ளி கட்சி 24 இடங்களையும் கைப்பற்றி இருக்கிறது. அதேநேரம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜக்மீத் சிங் இதில் படுதோல்வி அடைந்தார். அவரது தோல்வியும் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
ஜக்மீத் சிங் தோல்வி
காலிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்ட ஜக்மீத் சிங், கனடாவின் புதிய ஜனநாயகக் கட்சிக்குத் தலைமை தாங்கினார். கடந்த ட்ரூடோ ஆட்சியில் கிங் மேக்கராக இருந்த ஜக்மீத் சிங், இந்தியா மீது பல குற்றச்சாட்டுகளைக் கூறி வந்தார். குறிப்பாக கனடாவில் கொல்லப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொலையில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் தொடர்ந்து கூறி வந்தார். இந்தியா கனடா இடையே உறவு மோசமாக இவரும் முக்கிய காரணமாக இருந்தது.
இந்தச் சூழலில் தான், அவரது கட்சி இந்தத் தேர்தலில் படுதோல்வி அடைந்தது. அங்கு இவரது புதிய ஜனநாயகக் கட்சியால் வெறும் 7 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. அவ்வளவு ஏன் ஜக்மீத் சிங்கால் தனது சொந்தத் தொகுதியில் கூட வெல்ல முடியவில்லை. பர்னபி சென்ட்ரல் என்ற தொகுதியில் போட்டியிட்ட ஜக்மீத் சிங்கிற்கு மக்கள் சரியான பாடம் புகட்டிவிட்டனர்.
சொந்தத் தொகுதியிலும் தோல்வி
கடந்த தேர்தலில் எம்பியாக வென்ற ஜக்மீத் இந்த முறை 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டார். ஆளும் லிபரல் கட்சியின் வேட் சாங் 42% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற நிலையில், கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளர் ஜேம்ஸ் யான் 38.7 சதவீத வாக்குகளைப் பெற்றார். ஜக்மீத் சிங் வெறும் 18.1 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.
ஏன் முக்கியம்?
கடந்த 2021 தேர்தலில் ட்ரூடோ ஆட்சி அமைக்க ஜக்மீத் சிங் ஆதரவு முக்கியமாகத் தேவைப்பட்டது. இதனால் அவர் ட்ரூடோ அரசுக்குப் பல்வேறு அழுத்தங்களைக் கொடுத்தார் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக ஹர்தீப் சிங் விவகாரத்திலும் இந்தியா மீது நடவடிக்கை எடுக்க ஜக்மீத் சிங் அழுத்தம் கொடுத்திருக்கிறார். இந்தச் சூழலில் தான் அவர் மட்டுமின்றி அவரது கட்சியும் மிக மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது.
ஒரு கட்டத்தில் கிங் மேக்கர் என்று வர்ணிக்கப்பட்ட ஜக்மீத் சிங் சொந்தத் தொகுதியிலேயே தோல்வி அடைந்துள்ளார். இந்தத் தேர்தலில் அவரது புதிய ஜனநாயகக் கட்சி ஏழு இடங்களில் மட்டுமே வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. கனடா சட்டப்படி ஒரு கட்சி தேசியக் கட்சி என்ற அங்கீகாரத்தைப் பெறக் குறைந்தது 12 இடங்களில் வென்றிருக்க வேண்டும். இவரது புதிய ஜனநாயகக் கட்சி ஏழு இடங்களில் மட்டுமே வென்றுள்ளதால் தேசியக் கட்சி என்ற அந்தஸ்தை இழந்துள்ளது.
உறவு மேம்படும்
அதேநேரம் இவரது கனடாவில் காலிஸ்தான் ஆதரவு காலியாகிவிட்டதையே குறிக்கிறது. மேலும், இந்தியாவுக்கும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ட்ரூடோ அரசில் கூட்டணியில் இருந்து கொண்டு ஜக்மீத் சிங் பல்வேறு குடைச்சல்களைக் கொடுத்தார். இப்போது அவரது கட்சி படுதோல்வி அடைந்துள்ள நிலையில், அவரால் எதுவுமே செய்ய முடியாது. இதன் மூலம் இந்தியா கனடா உறவு மீண்டும் சீராகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications