"டெட்லைன்".. நடந்து போங்க! இந்தியர்களை மிரட்டிய உக்ரைன்? புடினுக்கு போனை போட்ட மோடி.. என்ன நடந்தது?
உக்ரைனில் போர் நடந்து வரும் நிலையில் நேற்று ஐநா பொது சபையில் இது தொடர்பான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ரஷ்யாவிற்கு கண்டனம் தெரிவிக்கும் இந்த வாக்கெடுப்பு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவோடு நேற்று நிறைவேற்றப்பட்டது.
இந்த வாக்கெடுப்பில் இந்தியா ரஷ்யாவிற்கு எதிராக வாக்களிக்காமல் விலகிக்கொண்டது. ரஷ்யாவிற்கு எதிராக 141 நாடுகள் வாக்களித்தன. ரஷ்யாவிற்கு ஆதரவாக 5 நாடுகள் வாக்களித்தது. இந்தியா உள்ளிட்ட 35 நாடுகள் வாக்களிக்கவில்லை.

கார்கிவ் ஏன் முக்கியம்
ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் தற்போது கார்கிவ் பகுதியில் நடந்து வருகிறது. இது ரஷ்யா எல்லையில் இருக்கும் பகுதியாகும். இதனால் இங்கு கடுமையான மோதல் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த பகுதியை பிடிப்பது ரஷ்யாவிற்கு எல்லை ரீதியாக பெரிய வசதியை கொடுக்கும். உக்ரைனை அதன் கிழக்கு பக்கத்தில் இருந்தும் பிடிக்க வசதியாக இருக்கும். இதனால் அங்கு கடும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

ஆனால் ஏற்கனவே இந்தியர் மரணம்
உக்ரைனில் நடக்கும் இந்த தாக்குதல்கள் காரணமாக ஏற்கனவே நவீன் என்ற கர்நாடகாவை சேர்ந்த மாணவர் உக்ரைனில் கொலை செய்யப்பட்டார். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் உடனடியாக தலை நகர் கீவில் இருக்கும் இந்தியர்களை வெளியேறும்படி இந்தியா உத்தரவிட்டது. அதேபோல் அங்கிருந்து இந்தியர்களும் வெளியேற்றப்பட்டனர். அதை தொடர்ந்து கார்கிவ் பகுதியில் இருந்து இந்தியர்களை வெளியேற்ற இந்திய அரசு முயன்றது.

டெட்லைன்
ஆனால் அங்கு தொடர்ந்து தாக்குதல்கள் நடந்து வந்தது. ரஷ்யா பீரங்கி தாக்குதல்களை நடத்தியது.இதையடுத்து இந்திய வெளியுறவுத்துறை ரஷ்யாவிடம் சில மணி நேரங்கள் தாக்குதலை நிறுத்தும்படி கோரிக்கை விடுத்தது. இந்தியர்களை வெளியேற்றும் வரை தாக்குதலை நிறுத்த கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து கார்கிவ் பகுதியில் தற்காலிகமாக தாக்குதல் நிறுத்தப்பட்டது. இந்திய நேரப்படி நேற்று இரவு 10 மணி வரை மக்களை வெளியேற்ற டெட்லைன் கொடுக்கப்பட்டது.

உக்ரைன் கொடூரம்
இதையடுத்து இந்தியர்கள் வேக வேகமாக அங்கிருந்து வெளியேற முயன்றனர். பலர் ரயில் நிலையங்களுக்கு சென்றனர். ஆனால் உக்ரைன் நாட்டுக்கு இந்தியா ஆதரவு தரவில்லை என்ற கோபத்தில் இந்தியர்கள் மீது ஆங்காங்கே உக்ரைன் மக்கள், ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். நேற்றும் கூட இந்தியர்களை ரயிலில் ஏற விடாமல் கடுமையாக தாக்கி உள்ளனர். அதோடு நடந்து வாருங்கள் என்றும் கூறி மிரட்டி உள்ளனர். ரயிலில் இடம் கேட்ட இந்திய பெண்களை துப்பாக்கி காட்டி மிரட்டி உள்ளனர்.

அவசர போன் கால்
இந்த விஷயம் தெரிந்த உடனேதான் பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புடினுக்கு போன் போட்டார். ரஷ்யா நினைத்தால் உக்ரைன் படைகளை அடக்கி, இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற முடியும். இதனால் உடனடியாக அவர் அதிபர் புடினுக்கு போன் செய்தார். இந்தியர்களுக்காக ரஷ்ய ராணுவம் கான்வாய் ஒன்றை ஏற்படுத்த வேண்டும். சில இடங்களில் சிக்கி உள்ளவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்க வேண்டும் என்று பிரதமர் மோடி கோரிக்கை விடுத்தார்.

அதிபர் புடின் உத்தரவு
அதன்படியே ரஷ்ய அதிபர் புடின் இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற உதவி செய்வோம் என்று உறுதி அளித்தார். ஹெலிகாப்டர், விமானம் மூலம் மீட்க முடியாது. மிஸைல் தாக்குதல் நடக்கலாம். தரைவழியாக மீட்கிறோம் என்று புடின் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்தே இந்திய மக்கள் பலரை ரஷ்ய ராணுவம் பாதுகாப்பான வழியை ஏற்படுத்தி அவர்களை மீட்டு உள்ளது. ஆனால் இன்னும் அங்கு பலர் இருக்கிறார்கள்.

பாதுகாப்பு
கார்க்கிவ் நகரத்தில் இன்னும் பலர் சிக்கி உள்ளனர். அங்கு மீண்டும் ரஷ்ய படைகள் தாக்குதலை தீவிரபடுத்தி உள்ளது. இதனால் இந்தியர்கள் பலர் முகாம்களில் தங்கி உள்ளனர். இன்னும் பலர் பங்கர்களில் பதுங்கி உள்ளனர். இதனால் கார்கிவ் பகுதியில் கொஞ்சம் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications