காசா மக்களின் உயிர்நாடி நகரம்.. மொத்தமாக காலி செய்ய இஸ்ரேல் பிளான்.. அலறும் அமெரிக்கா! என்னாச்சு
டெல் அவிவ்: ஹமாஸ் மீதான போரை முடிவுக்குக் கொண்டு வர இஸ்ரேல் முனைப்புக் காட்டும் நிலையில், தனது கடைசி டார்கெட்டாக ரஃபா நகரை குறிவைத்துள்ளது. இந்த ரஃபா நகரம் எங்கே அமைந்துள்ளது.. ஏன் முக்கியமானது.. என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிய போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. காசா பகுதிக்குள் புகுந்து இஸ்ரேல் தொடர்ச்சியாகக் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது.

பகீர் திட்டம்: இதற்கிடையே இஸ்ரேலின் அடுத்தகட்ட திட்டம் குறித்து சில பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன.. அதாவது தெற்கு காசாவில் அமைந்துள்ள முக்கிய நகரான ரஃபாவில் உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. தெற்கு காசாவில் உள்ள இந்த ரஃபா நகரம் அதிக மக்கள் தொகையைக் கொண்ட நகரம் என்பதால் இது பேரழிவை ஏற்படுத்தலாம் என்று வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.
நெதன்யாகு: ஹமாஸுக்கு எதிரான போர் ரஃபாவிற்குள் நுழையாமல் முடிவுக்கு வராது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாகக் கூறிவிட்டார். ஆனால், ரஃபா மீது நடத்தப்படும் தாக்குதல் மிக மோசமான சூழலை உருவாக்கும் என்று அமெரிக்கா தொடர்ந்து எச்சரித்து வருகிறது. இஸ்ரேல், ஹமாஸ் என இரு தரப்பிற்கும் ரஃபா நகரம் ஏன் முக்கியம்.. அமெரிக்கா ஏன் எச்சரிக்கிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ரஃபா மீதான தாக்குதல் திட்டத்தைப் பொதுவெளியில் சொல்லி ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில், இப்போது அங்கு இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தெற்கு காசாவின் மிக முக்கிய நகரமாக இந்த ரஃபா இருக்கிறது. பல ஆயிரம் பால்தீன மக்களுக்கு இந்த ரஃபா தான் உயிர்நாடியாக இருக்கிறது. இதன் காணமாகவே நென்யாகு இந்த ரஃபா நகரை குறிவைத்துள்ளார்.
இஸ்ரேலுக்கு ஏன் முக்கியம்: ஹமாஸை முற்றிலும் ஒழிப்பதையே இஸ்ரேல் தனது இலக்காக வைத்துள்ளது. இந்த காசா பகுதியில் ஹமாஸின் கடைசி கோட்டையாக ரஃபா இருக்கிறது.. நான்கு ஹமாஸ் பட்டாலியன்களின் தாயகமாக ரஃபா உள்ளது.. இதன் காரணமாகவே இஸ்ரேல் ரஃபா நகரைத் தாக்குவதில் குறியாக இருக்கிறது. காசா பகுதியின் வடக்கு மற்றும் மத்திய பகுதியில் ஹமாஸ் மீதான தாக்குதலை இஸ்ரேல் முடித்துவிட்ட நிலையில், இப்போது ரஃபா பக்கம் தனது பார்வையைத் திருப்பி இருக்கிறது.
அமெரிக்கா எச்சரிப்பது ஏன்: கடந்தாண்டு அக். மாதம் ஆரம்பித்த இந்த போரால் இதுவரை பல லட்சம் பேர் காசாவில் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர். அப்படி வெளியேறியவர்களில் பல லட்சம் பேர் ரஃபாவுக்கு தான் சென்றுள்ளனர். இதன் காரணமாகவே இந்த நேரத்தில் ரஃபாவில் தாக்குதல் நடந்தால் அது மிகப் பெரிய மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.
எங்கே இருக்கிறது: பாலஸ்தீனர்கள் வசிக்கும் 41 கிமீ பரப்பளவு கொண்ட காசா பகுதி மத்தியதரைக்கடலின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ளது. காசாவை கிட்டதட்ட எல்லா பக்கமும் இஸ்ரேல் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாகவே காசா பகுதியைத் திறந்தவெளி சிறைச்சாலை என்று பலரும் குறிப்பிடுகிறார்கள்.
இப்படி காசாவின் அனைத்து பகுதிகளையும் இஸ்ரேல் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கட்டுப்படுத்தினாலும் இந்த ரஃபா நகரம் எகிப்து எல்லையில் அமைந்துள்ளதால் இது இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இல்லை. இதன் காரணமாகவே ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் என இரு தரப்பும் இந்த நகரை முக்கியமானதாகக் கருதுகிறது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications