விடாத புடின்.. இரவோடு இரவாக போட்ட முக்கிய உத்தரவு! மொத்தமாக குதித்த ரஷ்ய படைகள்! உக்ரைனில் பரபரப்பு
மாஸ்கோ: உக்ரைன் மீது அனைத்து பக்கங்களில் இருந்தும் தாக்குதல் நடத்த போவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைனும் பதில் தாக்குதல் நடத்தி வருவதால் இந்த போர் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
Recommended Video
உக்ரைன் ரஷ்யா இடையே கடந்த வியாழக்கிழமை போர் தொடங்கியது. உக்ரைன் நாடு நேட்டோ படையில் இணைய ஆர்வம் காட்டியதாலும், ஐரோப்பிய யூனியனுடன் நெருக்கம் காட்டி வந்ததாலும் ரஷ்யா இந்த படையெடுப்பை தொடங்கி உள்ளது.
ஆனால் இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா நேரடியாக உதவி செய்யவில்லை. ராணுவ பொருட்கள் வாங்க, ஆயுதங்கள் வாங்க 600 மில்லியன் டாலர் நிதி உதவியை அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கி உள்ளது.

ராணுவ உதவி
ஆனால் நேரடியாக ராணுவ வீரர்களை அனுப்பி உதவிகளை செய்ய அமெரிக்கா மறுத்துவிட்டது. இது மிகப்பெரிய போருக்கு வழிவகுக்கும் என்பதால் அமெரிக்கா இந்த உதவியை செய்ய மறுத்துவிட்டது. இன்னொரு பக்கம் ரஷ்யாவின் இந்த படையெடுப்பிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. ஆனால் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவிற்கு வீட்டோ அதிகாரம் உள்ளது. இதனால் ரஷ்யா இந்த தீர்மானத்தை தனது அதிகாரத்தின் மூலம் நிறைவேற்ற விடாமல் நிராகரித்துள்ளது.

எத்தனை பேர்
தற்போது உக்ரைன் தலைநகர் கீவிற்கு வெளியே ரஷ்ய படைகள் உள்ளன. அங்கு கடுமையான மோதல் நடந்து வருகிறது. உக்ரைன் படைகளும் விடாமல் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் கீவ் தலைநகர் இன்னும் வீழாமல் உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ளது. உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி களத்தில் நின்று ராணுவத்திற்கு உறுதுணையாக இருந்து வருகிறார். ஏற்கனவே செர்னோபில் பகுதியை ரஷ்யா கைப்பற்றிவிட்டது.

படைகள்
இதனால் கிழக்கு உக்ரைன் மட்டுமின்றி ரஷ்யாவின் நட்பு நாடான பெலாரஸ் நாட்டில் இருந்தும் எளிதாக ரஷ்ய படைகளை கீவ் பகுதிக்கு கொண்டு வர முடியும். இதனால் இந்த போரில் தற்போது ரஷ்யாவின் கை ஓங்கி உள்ளது. இந்த போரில் இதுவரை உக்ரைன் தரப்பில் ராணுவ வீரர்கள், பொது மக்கள் உட்பட 198 பேர் பலியாகி உள்ளனர். அதேபோல் ரஷ்ய தரப்பில் 3500 வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

பேச்சுவார்த்தை
உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து வரும் நிலையில் நேற்று முதல்நாள் மாலை திடீரென ரஷ்யா பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. இன்னொரு பக்கம் உக்ரைனும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து வந்தது. ஆனால் நேற்று இரவு திடீரென ரஷ்ய அதிபர் புடின், உக்ரைன் மீது அனைத்து பக்கங்களில் இருந்தும் தாக்குதல் நடத்த வேண்டும். தாக்குதலை தீவிரப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறார். உக்ரைன் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை.

கமிட்டி
நாங்கள் உயர் மட்ட கமிட்டியை அனுப்ப தயாராக இருந்தோம். ஆனால் உக்ரைன் அதை ஏற்கவில்லை. இனி பேச்சுவார்த்தை இல்லை. அனைத்து பக்கங்களில் இருந்தும் தாக்க போகிறோம் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யா தனது உயர் மட்ட கமிட்டியை பெலாரஸ் அனுப்பி அங்கு உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த நினைத்தது. ஆனால் உக்ரைன் அரசு போலந்தில் பேச்சுவார்த்தை நடத்த நினைத்தது. இதனால் ஏற்பட்ட மோதல் காரணமாக பேச்சுவார்த்தை நடக்கவில்லை.

அனைத்து பக்கம்
இதனால் இனி உக்ரைனில் ரஷ்யா அனைத்து பக்க தாக்குதல்களை நடத்தும். இப்போது உக்ரைனில் கிழக்கு பக்கத்தில் மட்டுமே ரஷ்யா தாக்கி வருகிறது. மற்ற பகுதிகளில் பெரிதாக தாக்குதல் நடத்தாமல் விமானங்கள் மூலம் குண்டுகளை மட்டுமே போட்டு வருகிறது. ஆனால் இன்றில் இருந்து உக்ரைனின் அனைத்து பக்கங்களிலும் ரஷ்யா தாக்க உள்ளது.
-
"மோடியை மிரட்டுவது ஆபத்து.." புதின் சொன்ன வார்த்தை.. அப்படியே டிரம்ப் மீதும் பாய்ச்சல் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications