ஈரானின் பதில் தாக்குதலுக்கு கண்டனமாம்.. குறுக்கே வந்த இங்கிலாந்து! இது என்னங்க நியாயம்?
லண்டன்: ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் சேர்ந்து நடத்திக்கொண்டிருக்கும் தாக்குதலுக்கு, மொத்த உலகமும் கண்டனம் தெரிவித்து வருகிறது. இப்படி இருக்கையில், ஈரானின் பதில் தாக்குதலுக்கு இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கு நாடுகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. இது சர்வதேச அளவில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து, அண்டை நாடுகள் மீது ஈரான் நடத்திய பதிலடித் தாக்குதல்களைக் கடுமையாகக் கண்டித்துள்ளன. இது குறித்து மூன்று தலைவர்களும் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டனர்.

பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஜெர்மன் சான்ஸ்லர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் ஆகியோர் வெளியிட்ட இந்த அறிக்கையில், "ஈரானின் அணுசக்தி திட்டத்தை முடிவுக்கு கொண்டுவரவும், பாலிஸ்டிக் ஏவுகணை திட்டத்தை கட்டுப்படுத்தவும், பிராந்தியத்தில் அதன் நிலைதன்மையற்ற நடவடிக்கைகளை நிறுத்தவும், சொந்த மக்கள் மீதான வன்முறை மற்றும் அடக்குமுறையை நிறுத்தவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்" எனத் தெரிவித்தனர்.
"மேலும், இந்தத் தாக்குதல்களில் நாங்கள் நேரடியாகப் பங்கேற்கவில்லை. எனினும், அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட பிராந்திய கூட்டாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளோம். பிராந்திய நிலைத்தன்மை, பொதுமக்களின் பாதுகாப்பிற்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம். பிராந்திய நாடுகளில் ஈரான் நடத்திய தாக்குதல்களை மிகக் கடுமையாகக் கண்டிக்கிறோம். கண்மூடித்தனமான இராணுவத் தாக்குதல்களை ஈரான் தவிர்க்க வேண்டும்" என அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
மேலும் "ஈரானிய தலைமை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். இறுதியாக, ஈரானிய மக்கள் தங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்க அனுமதிக்கப்பட வேண்டும்" என்றும் அறிக்கை குறிப்பிட்டது.
மொத்த உலகமும் அமெரிக்காவுக்கு எதிராக கண்டனத்தை தெரிவித்து வருகிறது. இந்த நேரத்தில் ஈரான் தனது பாதுகாப்பை உறுதி செய்ய நடத்தும் பதிலடி தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிப்பதெல்லாம் எந்த வகையில் நியாயம் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
-
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications