ரஷ்யா போர் 30 நாள் நிறுத்தமா? புதின் ‛ஓகே’ சொல்வாரா? உக்ரைன் - அமெரிக்கா டீலில் இருக்கும் சிக்கல்
மாஸ்கோ: அமெரிக்காவுடன் நடந்த பேச்சுவார்த்தையில் 30 நாட்கள் போரை நிறுத்தி ரஷ்யாவுடன் அமைதியாக செல்ல உக்ரைன் ஒப்புக்கொண்டுள்ளது. இதுதொடர்பாக அமெரிக்கா - உக்ரைன் இடையே 5 முக்கிய டீல் பேசப்பட்டது. இதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஓகே சொல்லும் நிலையில் போர் நிறுத்தம் அமலுக்கு வரும். ஆனால் அமெரிக்கா - உக்ரைன் டீலை ரஷ்யா ஏற்குமா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் இந்த டீலில் ரஷ்யாவுக்கு பெரிய செக் ஒன்று உள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து போராடி வருகிறார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் தொலைபேசி வழியாகவும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் நேரடியாகவும் பேசினார். ஆனால் போர் நிறுத்தம் தொடர்பாக எந்த முடிவும் இதில் எட்டப்படவில்லை.

இதையடுத்து அமெரிக்கா - ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சர்களும் சவுதி அரேபியாவில் பேசினர். அதேபோல் நேற்றைய தினம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் அமெரிக்கா - உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை நடந்தது.
உக்ரைன் - அமெரிக்கா பேச்சு
இதில் அமெரிக்கா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியா, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். உக்ரைன் சார்பில் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியின் Chief of Staff பொறுப்பில் உள்ள அன்ட்ரி எர்மார்க் உள்ளிட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தையில் 30 நாட்கள் தற்காலிகமாக போரை நிறுத்த உக்ரைன் ஓகே கூறியது.
5 டீல் என்னென்ன?
இதுதொடர்பாக அமெரிக்கா - உக்ரைன் இடையே 5 டீல்கள் செய்யப்பட்டன. அதன்படி முதல் டீல் என்பது உக்ரைனுக்கான பாதுகாப்பை அமெரிக்கா உறுதி செய்ய வேண்டும். உளவு தகவல்கள் மற்றும் ஆயுத பகிர்வை வழங்க ஒப்புதல் செய்யப்பட்டது. 2வது டீல் என்பது 30 நாட்கள் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை நிறுத்த வேண்டும். இதுதொடர்பாக ரஷ்யாவுடன் பரஸ்பர ஒப்பந்தம் மேற்கொண்டு இதனை செயல்படுத்த வேண்டும். 3வது டீல் எனப்து உக்ரைன் நாட்டு கைதிகள், பொதுமக்கள், குழந்தைகளை ரஷ்யா விடுவிக்க வேண்டும்.
4வது டீல் என்பது போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் ஐரோப்பா ஒருபகுதியாக இருக்க வேண்டும். 5வது டீல் என்பது கனிமவள ஒப்புதல் தொடர்பாக ஒப்பந்தம் விரைவில் மேற்கொள்ளப்படும். இதன்மூமல் அமெரிக்கா - உக்ரைன் இடையே நீண்டகால உறவை பேண வேண்டும். உக்ரைனின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அமெரிக்கா உதவி செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
புதின் ஏற்பாரா?
இந்த 5 டீல்கள் அமெரிக்கா - உக்ரைன் பேச்சுவார்த்தையில் பேசப்பட்டுள்ளது. இதற்கு அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது. இதுதொடர்பாக அமெரிக்கா சார்பில் ரஷ்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படும் நிலையில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நிறுத்தம் என்பது அமலுக்கு வரும். ஆனால் இப்போது இருக்கும் மில்லியன் டாலர் கேள்வி என்பது அமெரிக்கா - உக்ரைன் பேச்சுவார்த்தையில் நடந்த டீல்களை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஏற்றுக்கொள்வாரா? என்பது தான்.
சிக்கல் என்ன?
உண்மையில் இதில் பெரிய சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே போர் தொடங்க முக்கிய காரணமே நேட்டோ அமைப்பு தான். ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் நீண்டகாலமாக எல்லை பிரச்சனை உள்ளது. இதனால் ரஷ்யாவை சமாளிக்க நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர முயற்சித்தது. நேட்டோ அமைப்பு என்பது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் அமைப்புகள் அங்கம் வகிக்கும் ஒரு பாதுகாப்பு படையாகும்.
இந்த நேட்டோவில் ஒரு நாடு உறுப்பினராகும் பட்சத்தில் அந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் நேரடியாக நேட்டோ களமிறங்கும். இதனால் பலம் வாய்ந்த ரஷ்யாவை சமாளிக்க நேட்டோவில் இணைய உக்ரைன் நினைத்தது. ஆனால் நேட்டோவில் உக்ரைன் இணைந்தால் அமெரிக்கா, ஐரோப்பிய படை வீரர்கள் ரஷ்யா - உக்ரைன் எல்லையில் நிலைநிறுத்தப்படலாம். இது ரஷ்யாவின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் என்று ரஷ்யா நினைத்தது.
அமெரிக்கா தலையீடு
மேலும் உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கியது. இப்படியான சூழலில் தான் தற்போது மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்தம் தொடர்பான டீலில் அமெரிக்கா தொடர்ந்து உக்ரைனுக்கு உளவு தகவல்களை வழங்க வேண்டும். உக்ரைனின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று ஒரு டீல் உள்ளது.
இதன்மூலம் உக்ரைன் - அமெரிக்கா இடையேயான உறவு என்பது தொடரும். இதற்கு ரஷ்யா ஒப்புக்கொள்ளுமா? என்ற பெரிய கேள்வி என்பது எழுந்துள்ளது. ஏனென்றால் உக்ரைனில் அமெரிக்காவின் தலையீடு என்பதே இருக்க கூடாது என்பது தான் இந்த போரின் ஆரம்ப புள்ளியாகும். இதனால் இந்த போர் நிறுத்தம் தொடர்பான டீலுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஒப்புக்கொள்வாரா? என்பது பற்றிய பெரிய சந்தேகம் எழுந்துள்ளது.
டிரம்ப் நம்பிக்கை
இதுதொடர்பாக தற்போது வரை ரஷ்யா சார்பில் எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. விரைவில் ரஷ்யா சார்பில் கருத்து என்பது தெரிவிக்கப்படலாம். இருப்பினும் ரஷ்யா மீது அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிக நம்பிக்கை வைத்துள்ளார். உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பான டீலுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஒப்புக்கொள்வார் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
-
'நேட்டோ' வெறும் காகித புலி! நாங்க இல்லாம ஒன்னுமே இல்லை.. கடுமையாக சாடிய டிரம்ப்! -
டிரம்புக்கு மூக்குடைப்பு. ஈரானை தாக்க தயாரான. அமெரிக்கா போர் விமானங்களை விரட்டியடித்த இலங்கை! -
வினாடிக்கு ரூ.21.36 லட்சம் காலி.. ஈரான் போரில் அமெரிக்காவின் செலவு என்ன? வாய்ப்பிளக்க வைக்கும் நம்பர் -
ஈரானுக்குள் இறங்கும் அமெரிக்க படை? டிரம்ப் கையில் பெரிய பிளான்.. நீண்டகாலம் சண்டை நடக்க வாய்ப்பு -
கருப்பு தங்கம் ஜாக்பாட்! புதினின் சீக்ரெட் ஆஃபர்.. உங்க கிச்சன் வரை ஊடுருவும் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு!












Click it and Unblock the Notifications