"வெளியே போக கூடாது".. கட்டுப்பாடு விதித்த தாலிபான்.. துப்பாக்கியை தூக்கிய பெண்கள்.. அதிரும் ஆப்கான்!
காபுல்: ஆப்கானிஸ்தானில் பல்வேறு மாவட்டங்களை தாலிபான்கள் பிடித்துள்ள நிலையில் அங்கு பெண்களுக்கு எதிரான கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
Recommended Video
தாலிபான்களுடன் செய்யப்பட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறி வருகின்றன. தாலிபான் - அமெரிக்கா இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் காரணமாக போரை நிறுத்திவிட்டு அமெரிக்கா வெளியேறி உள்ளது.
அமெரிக்க படைகள் மொத்தமாக ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் வெளியேற உள்ளது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் தாலிபான் படைகள் வேகமாக பல்வேறு பகுதிகளை கைப்பற்றி வருகிறது. இதுவரை 270 மாவட்டங்களை தாலிபான் கைப்பற்றிவிட்டது.

மீதம்
இன்னும் 130 மாவட்டங்களை கைப்பற்றினால் போதும் ஆப்கானிஸ்தானை மொத்தமாக தாலிபான் கைப்பற்றிவிடும். இந்த நிலையில் தாலிபான் படைகள், பெண்களுக்கு எதிராக விதிகளை விதிக்க மாட்டோம், தீவிரவாத தாக்குதலில் ஈடுபட மாட்டோம் என்றெல்லாம் அமெரிக்கா உடன் நடந்த பேச்சுவார்த்தையில் தாலிபான் வாக்குறுதிகளை அளித்து இருந்தது.

ஆனால் என்ன
ஆனால் தற்போது அமெரிக்க படைகள் வெளியேறுவதை பயன்படுத்தி ஆப்கானிஸ்தானை தாலிபான் கைப்பற்றி வருகிறது. அதோடு 2000க்கும் முன் தாலிபான் ஆப்கானிஸ்தானில் விதித்திருந்த கட்டுப்பாடுகளை மீண்டும் கொண்டு வர தொடங்கி உள்ளது. கண்களை தவிர வேறு எதுவும் தெரியாத வகையில் பெண்கள் பர்தா அணிய வேண்டும், பெண்கள் தனியாக செல்ல கூடாது, கணவனுடன் மட்டுமே வெளியே வர வேண்டும் போன்ற விதிகளை தாலிபான் தாங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள மாவட்டங்களில் விதித்துள்ளது.

விதிப்பு
அதேபோல் இன்னொரு பக்கம் சலூன்களில் ஆண்களுக்கு தாடியை சேவ் செய்ய கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. 2000க்கு முன்பு இருந்தது போலே இப்போது மீண்டும் தாலிபான் கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. இது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தாலிபான் கட்டுப்பாட்டில் உள்ள 250க்கும் அதிகமான மாவட்டங்களில் தற்போது இதுவே விதியாக உள்ளது.

பெண்கள்
இந்த நிலையில் தற்போது தாலிபான் அமைப்பின் கட்டுப்பாடுகளுக்கு எதிராக அங்கு பெண்கள் ஆயுதங்களை தூக்கி உள்ளனர். துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், ராக்கெட் லாஞ்சர்களை வைத்து தாலிபான் அமைப்புகளுக்கு எதிராக பெண்கள் போராட தொடங்கி உள்ளனர். ஆப்கான் படைகளுடன் இணைந்து தாலிபான் படைகளை பெண்கள் பலர் கூட்டம் கூட்டமாக எதிர்க்க தொடங்கி உள்ளனர்.

எதிர்ப்பு
நாங்கள் அமெரிக்க படைகள் இருந்த போது சுதந்திரமாக இருந்தோம். ஆப்கான் அரசுக்கு கீழும் சுதந்திரமாக இருப்போம். ஆனால் தாலிபான்கள் வந்தால் நாங்கள் வெளியே கூட செல்ல முடியாது. பல குடும்பங்களில் பெண்கள்தான் பணிகளை செய்து, சம்பளம் ஈட்டுகிறார்கள். அவர்கள் வெளியே செல்ல கூடாது என்று தாலிபான் தடை விதிப்பதை ஏற்க முடியாது. 2000க்கு முன்பு இருந்த நிலைக்கு நாங்கள் செல்ல முடியாது.

ஆயுதம்
இதனால் தாலிபான் படைகளை நாங்கள் கடுமையாக எதிர்ப்போம். ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கட்டுப்படுத்த நாங்கள் விட மாட்டோம் என்று பெண்கள் கூறி உள்ளனர். பல மாவட்டங்களில் பெண்கள் போராட்டத்தில் குதித்து உள்ளனர். ஆயுதங்களோடு தாலிபான்களுக்கு எதிராக பதில் தாக்குதல்களை பெண்கள் நடத்த தொடங்கி உள்ளனர்.

அரண்
பல மாவட்டங்களில் ஆப்கான் படைகள் கூட தாலிபானிடம் சரண்டர் ஆக தயாராக இருக்கும் நிலையில், பெண்கள் அரணாக மாவட்டங்களை காத்து வருகிறார்கள். தாலிபான் படைகளுக்கு எதிரான ஒரே அரணாக பல மாவட்டங்களில் பெண்கள்தான் உள்ளனர். அமெரிக்க படைகள் வெளியேறிய காரணத்தால் மீண்டும் ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆதிக்கம் உச்சம் தொட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications