என்னாது கொரோனா எங்கள் லேபிலிருந்து தப்பியதா.. அதெல்லாம் வெறும் கட்டுக் கதை.. வுகான் லேப்
பெய்ஜிங்: கொரோனா எங்கள் பரிசோதனை கூடத்திலிருந்து வெளியேறியதாக கூறப்படுவது சுத்த கட்டுக் கதை என ஒருவழியாக வுகான் பரிசோதனை கூடம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சீனாவின் வுகான் மீன் சந்தையிலிருந்து வெளியேறியதாக கூறப்படும் கொரோனா வைரஸ் உலகில் உள்ள 170 நாடுகளுக்கும் மேலாக பரவி இதுவரை 3.45 லட்சம் உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

கசிந்து
இந்த நிலையில் அமெரிக்காவின் ஊடகமான பாக்ஸ் நியூஸ், இந்த கொரோனா வைரஸ் இயற்கையானது அல்ல என்றும் அது வுகான் நகரில் உள்ள வைராலஜி ஆய்வுக் கூடத்திலிருந்து செயற்கையாக உருவாக்கப்பட்டது. அங்கிருந்து கசிந்துதான் உலகமெங்கும் பரவி வருகிறது என செய்தி வெளியிட்டது.

வெளியுறவுத் துறை அமைச்சர்
இதே விவகாரத்தை அமெரிக்க அதிபர் டிரம்பும் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோவும் கூறி வந்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் டிரம்ப் தெரிவித்திருந்தார். அது போல் வைரஸ் எப்படி பரவியது என்பது குறித்து சீனாவும் தனது ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது.

வைரஸ்
இந்த நிலையில் இதுகுறித்து வுகான் பரிசோதனை கூடத்தின் இயக்குநர் வாங் யான்ங்யி கூறுகையில் கொரோனா வைரஸ் எங்கள் ஆய்வுக் கூடத்திலிருந்து கசிந்ததாக கூறுவது வெறும் கட்டுக் கதை ஆகும். கொரோனா வைரஸை நாங்கள் வைத்திருக்கவில்லை. அந்த வைரஸை நாங்கள் ஆராய்ச்சி செய்யவும் இல்லை.

பரபரப்பு
அந்த வைரஸ் இருப்பது கூட எங்களுக்கு தெரியவே தெரியாது. அப்படியிருக்கும் போது அந்த வைரஸ் எப்படி எங்கள் ஆய்வுக் கூடத்திலிருந்து கசிந்திருக்க முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இத்தனை நாட்கள் அமெரிக்கா குற்றச்சாட்டு பதில் தராமல் இருந்த வுகான் பரிசோதனை கூடம் தற்போது மறுத்து கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications