ஓய்வுக்கு ரெடியாகிறாரா சீன அதிபர் ஜி ஜின்பிங்? பரவலாக்கப்படும் அதிகாரங்கள்! அலர்ட் மோடில் அமெரிக்கா
பெய்ஜிங்: 13 ஆண்டுகளாக சீன அதிபராக உள்ள ஜி ஜின்பிங், சீன கம்யூனிஸ்ட் கட்சிக்குள் தனது அதிகாரங்களை பிரித்து கொடுக்க தொடங்கியுள்ளார். இதனால் அவர் ஓய்வு பெற இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.
கடந்த ஜூன்.30ம் தேதி சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்களுக்கான(பொலீட் பீரோ) கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஜி ஜின்பிங் தலைமையேற்றார். இதில் கட்சியின் நிறுவனங்களின் பணி குறித்த புதிய விதிமுறைகள் மறு ஆய்வு செய்யப்பட்டன. இந்த கூட்டத்தில் கட்சியின் ஸ்தாபனம், பொறுப்புகள் மற்றும் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும் விதிமுறைகளை அவர் முன் வைத்திருக்கிறார்.

24 பேர் கொண்ட பொலீட் பீரோ உறுப்பினர்களுக்கான இந்த கூட்டம், அதிகார பரவல், அல்லது அதிகாரம் பகிர்ந்தளிப்பதற்கான தொடக்கம் என்று சொல்லப்படுகிறது. சீனாவின் மாவோவுக்கு பிறகு அதிக அதிகாரம் கொண்ட தலைவராக அறியப்படும் ஜி ஜின்பிங், அடுத்த கட்ட நகர்வை நோக்கி நகர்வதாகவும், எனவே அதிகாரத்தை பரவலாக்க முயற்சிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனாவுக்கும்-அமெரிக்காவுக்கும் பஞ்சாயத்து போய்க்கொண்டிருக்கையில்தான், சீன கம்யூனிஸ்ட் கட்சிக்குள் முக்கிய மாற்றங்கள் ஏற்பட இருக்கின்றன. மேற்கு ஊடகங்கள், ஜி ஜின்பிங் ஓய்வு பெறுவதற்கான செயல்முறையாக இந்த நிகழ்வை அடையாளப்பட்டு வருகின்றன. ஆனால் ஓய்வு குறித்து இன்றும் சீன அதிபர் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
சீனா இப்போது ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கிறது. ஆசியாவில் உள்ள நாடுகளில் மிகவும் பலமான மற்றும் புத்திசாலித்தனமான நாடாக சீனா இருக்கிறது. குறிப்பாக மேற்கு நாடுகளுக்கு இணையாக ஆசியாவை மேம்படுத்தும் வேலையில் சீனா தீவிரமாக இருக்கிறது. சீனா எப்படிங்க மொத்த ஆசியாவையும் மேம்படுத்தும்? என்று கேள்வி எழலாம். பிரிக்ஸ் கூட்டமைப்பு மூலம் இந்த வேலையை சீனா செய்கிறது. சீனாவுடன் வர்த்தக உறவில் இருக்கும் மற்ற நாடுகளும் வளர்ந்து வருகிறது.
அதேபோல டாலரின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொடுவருவதிலும், அமெரிக்காவின் தலையீடுகளை நிறுத்துவதிலும் சீனா சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பிரிக்ஸ் நாடுகளில் இந்தியா தவிர, ஏறத்தாழ அனைத்து நாடுகளும் சீனாவுக்கு பின்னால் இருக்கிறது. அனைத்து நாடுகளுடன் பொருளாதார உறவை கொண்டிருக்கும் சீனா, பிரிக்ஸ் கரன்சியை உருவாக்குவதில் தீவிரமாக இருக்கிறது. இப்படியான சூழலில் ஜி ஜின்பிங் ஓய்வு பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருப்பது அதன் நட்பு நாடுகளிடையே சோர்வை ஏற்படுத்தியுள்ளன.
ஒருவேளை இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான உரசல்கள் குறைந்து நட்பு அதிகரித்தால், நிச்சயம் ஆசிய நாடுகளின் வளர்ச்சி பெரிய அளவுக்கு இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
ஆனால் இதையெல்லாம் தாண்டி சீனாவுக்கு சில சிக்கல்கள் இருக்கின்றன. தைவான் விஷயத்தில் அமெரிக்காவின் தலையீட்டை குறைப்பது, தென் சீனக்கடலில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்துவது, தொடர்ந்து பொருளதாரத்தில் முன்னிணியில் இருப்பது போன்ற விஷயங்கள் சீனாவுக்கு சவாலாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications