விமானம் கீழே விழுந்துட்டா?: மலேசிய விமானத்தில் ஏறும் முன்பு அம்மாவிடம் கேட்ட சிறுவன்
ஆம்ஸ்டர்டாம்: மலேசிய விமானத்தில் பயணம் செய்து பலியான 11 வயது நெதர்லாந்து சிறுவனுக்கு விபத்து நடக்கும் என்று ஏற்கனவே தோன்றியிருக்கிறது.
நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாம் அருகே வசித்தவர் மிகுல் பண்டுவினாடா(11). அவரும், அவரது சகோதரர் ஷகாவும் ஆம்ஸ்டர்டாமில் இருந்து கடந்த 16ம் தேதி கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏறினர். அந்த விமானம் உக்ரைனில் தாக்கப்பட்டதில் சகோதரர்கள் இறந்துவிட்டனர்.
மிகுலும் அவரது சகோதரரும் இந்தோனேசியாவில் இருக்கும் பாலியில் வசிக்கும் பாட்டியை பார்க்க கிளம்பி பலியாகிவிட்டனர்.

கேள்விகள்
விமானத்தில் செல்வதற்கு முந்தைய நாள் மிகுல் தனது தாய் சமீராவிடம் மரணம், உயிர், கடவுள் பற்றி பல கேள்விகளை கேட்டுள்ளான்.

கால்பந்து
பயணம் செய்வதற்கு முந்தைய நாள் மிகுல் கால்பந்து விளையாடியுள்ளான். அப்போது அவன், ஒருவர் எப்படி இறப்பார்கள், என்னை புதைத்தால் என் உடலுக்கு என்ன ஆகும்? என் உயிர் கடவுளிடம் செல்வதால் எனக்கு எதுவும் தெரியாதா? என்று எல்லாம் கேட்டுள்ளான்.

அம்மா
இரவில் மிகுல் தனது தாயிடம் வந்து அம்மா, நான் உங்களை கட்டிபிடிக்கலாமா என்று கேட்டுள்ளான். உடனே சமீரா தனது மகனை தனக்கு அருகில் தூங்க வைத்துள்ளார்.

விமான நிலையம்
விமான நிலையத்தில் பாஸ்போர்ட்டுகளை சோதனை செய்யும் இடத்திற்கு சென்ற மிகுல் ஓடி வந்து தனது தாயை கட்டிப்பிடித்து நான் உங்களை மிஸ் பண்ணுவேன். விமானம் விபத்துக்குள்ளானால் என்ன ஆகும் என்று கேட்டுள்ளான்.

ஏன்?
மிகுல் ஏன் மரணம், உயிர், விமான விபத்து பற்றி எல்லாம் பேசுகிறான் என்று சமீரா வியந்துவிட்டு அப்படி எல்லாம் பேசாதே, எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று மகனிடம் தெரிவித்துள்ளார்.

திரும்பிப் பார்த்து
மிகுல் விமானத்தில் ஏறச் செல்லும்போது தனது தாயை திரும்பித் திரும்பி பார்த்துள்ளான்.

மயக்கம்
மகன்களை அனுப்பிவிட்டு வீட்டுக்கு வந்த சமீராவுக்கு விமானம் விபத்துக்குள்ளான செய்தி கேட்டு மயக்கம் வந்தது.

ரேஸ் டிரைவர்
ஷகா டெக்ஸ்டைல் என்ஜினியராகவும், மிகுல் கோ கார்ட் ரேஸ் டிரைவராகவும் ஆக விரும்பியுள்ளனர்.

சமீரா
என் மகனுக்கு எப்படி அது தெரிந்தது? நான் அவன் பேச்சை கேட்டிருக்க வேண்டும். நான் அவன் பேச்சைக் கேட்டிருக்க வேண்டும் என்றார் சமீரா கண்ணீர் மல்க.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications