உலகை உறைய வைக்கும் வினோத நிகழ்ச்சி..10,000 நாய்களை பலியிடும் சீனர் திருவிழா ஜூன் 21-ல் தொடக்கம்
யூலின் நாய் இறைச்சி திருவிழா வரும் 21-ந் தேதி தொடங்குகிறது.
யூலின்: உலகையே உறைய வைக்கும் வகையில் 10,000க்கும் மேற்பட்ட நாய்களை இறைச்சிக்காக பலியிட்டு கொண்டாடக் கூடிய சீனர்களின் திருவிழா வரும் 21-ந் தேதி தொடங்குகிறது.
சீனாவின் குவாங்ஸி மாகாணத்தின் யூலினிக் ஆண்டு தோறும் லிச்சி நாய் இறைச்சி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் நடத்தப்படும் இவ்விழாவுக்கு உலகம் முழுவதும் உள்ள விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த ஆண்டு யூலின் லிச்சி நாய் இறைச்சி வரும் 21-ந் தேதி தொடங்குகிறது. சுமார் 1 வாரம் இந்த நாய் கறி திருவிழா நடைபெறும்.

உடலுக்கு குளிர்ச்சி தரும் நாய் இறைச்சி
கடந்த 10 ஆண்டுகளாகத்தான் இத்தகைய திருவிழா நடைபெற்று வருகிறது. சீனர்களைப் பொறுத்தவரை கோடைகாலங்களில் நாய் இறைச்சியை பெருமளவு உண்பது உடலுக்கு நல்லது என்பது நம்பிக்கை. அதேபோல் தங்களது பாரம்பரிய நம்பிக்கை சார்ந்தும் நாய்களை பலியிடுதலும் அரங்கேறும்.

நாய் திருட்டுகள் அதிகம்
ஆனால் இத்திருவிழாவில் விற்பனை செய்வதற்காகவே 'நாய் வேட்டை' 'நாய் திருட்டு' அமோகமாக நடைபெறுகிறது என்பது விலங்குகள் நல ஆர்வலர்களின் குற்றச்சாட்டு. அத்துடன் மிகக் கொடூரமான முறையில் கூண்டுகளில் அடைத்து யூலினுக்கு நாய்கள் கொண்டு வரப்படுவதாகவும் கூறப்படுகிறது.

உயிருடன் தீயில் வாட்டப்படும்
யூலின் திருவிழாவில் நாய்கள் உயிருடன் விற்பனை செய்யப்படும். விற்பனை செய்யப்படும் நாய்கள் அங்கேயே வெட்டப்பட்டு அல்லது உயிருடன் தீயில் வாட்டப்பட்டு இறைச்சியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். நாய்கள்தான் என்று இல்லை பூனைக்கறியும் இந்த திருவிழாவில் தாராளமாகக் கிடைக்கும்.

எதிர்ப்பை கண்டு கொள்ளாத சீனர்கள்
இப்போது இத்திருவிழாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விலங்குகள் நல ஆர்வலர்கள் சமூக வலைதளங்களில் பிரசாரத்தை நடத்தி வருகின்றனர். ஆனால் சீனர்கள் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் 'நாய் கறி' திருவிழாவுக்கு ஜரூராக தயாராகி வருகின்றனர்.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு












Click it and Unblock the Notifications