ஈகோ யுத்தம்.. எல்லாம் தொடங்கியது "அந்த" ஹார்ட்டில்தான்.. சிஎஸ்கேவில் இருந்து ஜடேஜா வெளியேறுகிறாரா?
சென்னை: சிஎஸ்கேவில் இந்த சீசனில் மீதம் உள்ள போட்டிகள் அல்லது அடுத்த சீசனில் இருந்து ஜடேஜா வெளியேற போவதாக நெட்டிசன்கள் விவாதங்களை செய்து வருகின்றனர். உறுதிப்படுத்தப்படாத செய்திகளாக காரணமாக இணையத்தில் சிஎஸ்கே ரசிகர்கள் இடையே காரசார விவாதங்களும் ஏற்பட்டுள்ளன.
All is not well என்று கூறுவார்களே.. அப்படித்தான் தற்போது சிஎஸ்கே அணியிலும் திடீரென ஜடேஜா - தோனி இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வர தொடங்கி உள்ளன.

இந்த மோதல் எல்லாம் தொடங்கியது கடந்த சீசனில்தான். தோனிக்கு பதிலாக ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட வரிசையாக சிஎஸ்கே அணி அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வி அடைந்தது. இதையடுத்து ஜடேஜா கேப்டன்சியில் இருந்து நீக்கப்பட்டு மீண்டும் தோனி கேப்டனாக்கப்பட்டார்.
அப்போதே ஜடேஜா சிஎஸ்கேவில் இருந்து வெளியேறுவார் என்று கூறப்பட்டது.
ஜடேஜா
வேறு அணிக்கு டிரான்ஸ்பர் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டவரை கட்டாயப்படுத்தி அணிக்குள் கொண்டு வந்தனர். இந்த சீசனில் அவர் சிஎஸ்கேவில் ஆடும் விருப்பதிலேயே இல்லை. தோனி அவரிடம் பேசி சமாதானம் செய்த காரணத்தினாலேயே அவர் மீண்டும் அணிக்குள் வந்தார்.
இந்த நிலையில்தான் அவரின் ஆட்டத்தை பார்த்துவிட்டு, விருப்பம் இல்லைன்னா.. டீமை விட்டு போங்க பாஸ் என்று ரசிகர்கள் விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர். ஏனென்றால் அவர் சரியாக பேட்டிங் செய்வது இல்லை. பவுலிங் மட்டுமே சுமாராக செய்கிறார். அவரிடம் ஏனோ ஆர்வமே இல்லை.
இதனால்தான் ஜடேஜாவை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை ரசிகர்கள் வைக்க தொடங்கி உள்ளனர்.
மோதல்:
இந்த நிலையில்தான் இவர் பேட்டிங் இறங்கி அவுட்டாகும் போதெல்லாம் தோனி தோனி என்று ரசிகர்கள் உற்சாகமாக கத்தும் சம்பவங்கள் நடக்கின்றன. இதனால் ஜடேஜா கடுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்தே ஜடேஜா பேட்டி ஒன்றில்.. தோனிக்கு பெரிய ரசிகர் படை உள்ளது. அதனால்தான் அணியில் ஒருவர் அவுட்டானால் கூட அதை கொண்டாடி தோனியை வரவேற்கிறார்கள் என்று கூறினார்.
இதை அவர் சிரித்துக்கொண்டேதான் கூறினார். ஆனால் ஜடேஜா மனதில் கண்டிப்பாக வலி இருக்கும் என்று ஒருவர் ட்வீட்டரில் போஸ்ட் செய்து இருந்தார் . இதையும் ஜடேஜா ஹார்ட் விட்டு லைக் செய்தார்.
இந்த ஹார்ட்டில் இருந்துதான் சிஎஸ்கே அணியில் எதோ பிரச்சனை நிலவுகிறது என்று கூறப்பட்டது. அதாவது தோனிக்கு கொடுக்கப்படும் இவ்வளவு பெரிய மரியாதையை ஜடேஜா விரும்பவில்லை என்றும், தன்னுடைய விக்கெட் விழும் போது அதை ரசிகர்கள் கொண்டாடுவதையும் ஜடேஜா விரும்பவில்லை என்று கூறப்பட்டது.
இதில் இருந்துதான் அந்த ஈகோ யுத்தம் தொடங்கியது.
வெளியேறுகிறாரா?
இந்த நிலையில்தான் ஜடேஜா சிஎஸ்கேவில் மீதம் உள்ள போட்டிகளில் ஆடாமல் வெளியேறுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அல்லது அடுத்த சீசனில் ஆட மாட்டாரா என்றும் கேள்வி எழுந்துள்ளது.
ருத்துராஜை சிஎஸ்கே அணி கேப்டனாக்க வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வருவதால் ஜடேஜா இந்த முடிவை எடுக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முதல்நாள் போட்டிக்கு பின்.. தோனி பேசுகையில்.. தனது தனிப்பட்ட ரெக்கார்டுக்காக ஆடும் வீரர்கள் தேவை இல்லை. இந்த அணிக்காக ஆடும் வீரர்களே தேவை என்று கூறினார்.
அவர் ஜடேஜாவை குத்திக்காட்டி இப்படி பேசியதாக கூறப்பட்டது.
மோதல் நடந்ததா?
இந்த நிலையில்தான் நேற்று முதல்நாள் டெல்லி போட்டியில் வென்றதற்கு பின் ஜடேஜா - தோனி இடையே விவாதம் நடந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போட்டி முடிந்த பின் ஜடேஜா தோளில் கையை போட்டு தோனி எதோ சொன்னார். உடனே ஜடேஜா பதிலுக்கு எதோ சொல்ல.. இரண்டு பேரும் காரசாரமாக விவாதம் செய்தனர். இந்த விவாதம் முற்றவே தோனி முகத்தை சுருக்கிக்கொண்டு கோபமாக பேசினார்.
அவர் இப்படி பேசியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே தோனி - ஜடேஜா இடையே கருத்து வேறுபாடு உள்ளதாக சொல்லப்படும் நிலையில்தான் ஜடேஜா - தோனி இடையே நேற்று மோதல் ஏற்பட்டதோ என்று எண்ண தோன்றுகிறது.
இதையடுத்து ஜடேஜா செய்த போஸ்ட் ஒன்றில்.. கர்மா உன்னை கண்டிப்பாக தண்டிக்கும். இப்போது இல்லை என்றாலும் பின்பாவது உன்னை கண்டிப்பாக தண்டிக்கும் என்று கூறி உள்ளார்.
அதில் ஜடேஜா.. defintely என்ற வார்த்தையை வேறு பயன்படுத்தி உள்ளார். கடந்த சீசனுக்கு முந்தைய சீசனில் தோனி ஓய்வு பெறுவீர்களாக என்ற கேள்விக்கு defintely not என்று கூறினார்.
அந்த வார்த்தையை இப்போது ஜடேஜா பயன்படுத்தி உள்ளதால், தோனிக்குதான் இந்த பதிலடியோ என்று எண்ண தோன்றுகிறது. இந்த போஸ்டை ஜடேஜா மனைவியும் ஷேர் செய்துள்ளார்.
இதை எல்லாம் வைத்து பார்த்துதான் சிஎஸ்கேவில் இந்த சீசனில் மீதம் உள்ள போட்டிகள் அல்லது அடுத்த சீசனில் இருந்து ஜடேஜா வெளியேற போவதாக நெட்டிசன்கள் விவாதங்களை செய்து வருகின்றனர்
-
இலவச மெட்ரோ சென்னையில்.. இன்று யாருக்கு அதிர்ஷ்டம்? கையில் இது இருந்தா போதுமே.. 1 மணி வரை சர்ப்ரைஸ் -
ஹெல்மெட்டை தூக்கியெறிந்து.. ஆவேசமான ஸ்டப்ஸ்.. நடுவர்களுடன் மோதிய ராணா.. என்ன நடந்தது? -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம்












Click it and Unblock the Notifications