சினிமாவில் மாணவ, மாணவிகள் சீருடையில் காதல் காட்சிகள்! சமூகத்துக்கு களங்கமா?
குறும்படங்கள், திரைப்படங்கள், சமூக வலைதளங்கள் போன்றவற்றில் பள்ளி சீருடையில் காதல் காட்சிகள் அதிகரித்து வருகின்றன. இது மாணவ, மாணவியர்களின் மனநிலையை தவறான பாதையில் இட்டுச் செல்கிறது.
பள்ளி சீருடை என்பது கட்டுப்பாடு, கல்வி மற்றும் ஒழுக்கத்தின் ஒரு அடையாளம். அதை காதல், ரொமான்ஸ் போன்ற விஷயங்களுக்கு பயன்படுத்துவது சமூகத்துக்கு ஆபத்தான வழிகாட்டுதலாக மாறுகிறது. இளம் தலைமுறையின் எதிர்காலத்தை பாதிக்கும் இந்த செயல்களை வன்மையாக எதிர்த்து, அந்தந்த மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக ஊடகங்களில் இப்படியான வீடியோக்களை தடுக்க கட்டுப்பாடுகள் கொண்டு வர வேண்டும். பள்ளிகளும் பெற்றோர்களும் மாணவர்களுக்கு சரியான விழிப்புணர்வை ஏற்படுத்தி, தவறான பாதையில் செல்லாமல் பாதுகாக்க வேண்டியது மிக அவசியம்.

மாணவ மாணவிகள் - அவர்கள் கல்விக்கான பருவத்தில் இருக்கிறார்கள்: மாணவிகள் என்பது பள்ளிப் பருவத்தில் அறிவை வளர்க்கும் ஒரு நுண்ணிய நிலை. அவர்களுக்கான முக்கியக் கடமை கல்வி கற்க வேண்டும் என்பதேயன்றி, சமூகத்திற்குப் பொறுப்பான ஒரு நபராக உருவாக வேண்டும் என்பதுதான். ஆனால், இன்றைய டிஜிட்டல்மயமான உலகில், யுவதியின் ஆளுமையை மதிப்பது குறைந்து, அதனை ஒரு விளையாட்டாக கருதும் நிலை உருவாகிவிட்டது.
பள்ளி மாணவிகள் காதல் விஷயங்களில் ஈடுபடுவது இயல்பான ஒன்று என்ற பெயரில், அவர்களின் பருவ சிந்தனையை தவறாக வழிநடத்தும் வகையில் சமூக ஊடகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, சீருடையில் தோன்றி, காதலின் பெயரில் தயார் செய்யப்பட்ட ரீல்ஸ்கள், அவர்களின் எதிர்காலத்துக்கு களங்கம் ஏற்படுத்தும் என்பதனை புரிந்துகொள்ள வேண்டும்.
அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகள் - ஒரு கடுமையான கட்டுப்பாடு தேவை: இவ்வாறான வீடியோக்கள் சமூகத்துக்கு விஷமாக மாறும் முன் அரசு பல்வழிகளில் கட்டுப்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாநில அரசும் இதனை கண்டித்து, தடை செய்யக்கூடிய ஒரு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சில முக்கிய நடவடிக்கைகள்:
சமூக வலைதளங்களுக்கான கண்காணிப்பு: மாணவர்கள் தொடர்புடைய வீடியோக்களை பக்குவமாக பரிசோதித்து, தவறான பாதிப்பை ஏற்படுத்தும் உள்ளடக்கங்களை தடை செய்ய வேண்டும். சமூக ஊடக நிறுவனங்களுக்கு கட்டுப்பாட்டு சட்டங்களை கொண்டு வர அரசு முன்வர வேண்டும்.
கல்வி நிறுவனங்களில் விழிப்புணர்வு: பள்ளிகளில் மாணவிகளுக்கான சீருடையின் முக்கியத்துவத்தை விளக்கி, அதை தவறாக பயன்படுத்துவதை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாணவ, மாணவியர்கள் பெற்றோர்களுக்கும் இதன் தீவிர விளைவுகளைப் பற்றிய விழிப்புணர்வு வகுப்புகள் நடத்த வேண்டும்.
கடுமையான தண்டனை: மாணவிகள் சீருடையில் அசிங்கமானவாறு காட்டப்படும்போது, அதனை உருவாக்கியவர்களுக்கும், வெளியிட்டவர்களுக்கும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
அந்த வகை உள்ளடக்கங்களை உள்வாங்கும் சமூக ஊடக நிறுவனங்களுக்கும் எச்சரிக்கை மற்றும் அபராதம் விதிக்க வேண்டும்.
மாணவிகள் - சமூகத்தின் எதிர்காலம்: மாணவிகள் என்பது ஒரு குடும்பத்தின் நிலையான அடித்தளம். அவர்களின் கல்வி, அறிவு மற்றும் சமுதாய பொறுப்பு சரியாக அமைந்தால், எதிர்காலம் ஒரு ஒளிமயமான பாதையாக அமையும். அதனால், கல்விக்கு முக்கியத்துவம் அளித்து, இவ்வாறு தவறாக வழிநடத்தும் செயல்களை உடனடியாக கண்டிக்க வேண்டியது அவசியம்.
அரசும், பெற்றோர்களும், பள்ளிகளும் ஒருங்கிணைந்து மாணவிகளை பாதுகாக்க வேண்டும். அவர்களின் உரிமைகளை மதிக்க வேண்டும்.
- குரு கிருஷ்ணன்
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications