இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து தொடர்பான வழக்கு.. குற்றப்பிரிவு போலீஸ் முன் கமல்ஹாசன் ஆஜர்
சென்னை: இந்தியன் 2 படப்பிடிப்பு தொடர்பான வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் முன்பு கமல்ஹாசன் இன்று ஆஜராகியுள்ளார். அவரிடம் குற்றப்பிரிவு துணை ஆணையர் விசாரணை நடத்தி வருகிறார்.
Recommended Video
கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படமாக எடுக்கப்பட்டு வருகிறது. இதன் படப்பிடிப்பு பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஸ்டூடியோவில் 19-ஆம் தேதி இரவு நடந்து கொண்டிருந்தது.

அப்போது பகல் காட்சியை இரவில் படமாக்க ராட்சத மின் விளக்குகள் பொருத்தும் பணிகள் கிரேன் மூலம் நடைபெற்றன. அப்போது பாரம் தாங்காமல் அந்த கிரேனின் பாகம் உடைந்து விழுந்ததில் உதவி இயக்குநர் கிருஷ்ணா, கலை உதவியாளர் சந்திரன், தயாரிப்பு உதவியாளர் மது ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
இதில் 9 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பான வழக்கு நசரத்பேட்டை காவல் நிலையத்திலிருந்து சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதன் விசாரணை கடந்த மாதம் 23-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. இது வரை இந்தியன் 2 படப்பிடிப்புக்கு செட் அமைத்த நிர்வாகிகள், தொழிற்சாலையில் பயன்படுத்தும் கிரேனை படப்பிடிப்புக்கு வாடகைக்கு விட்ட உரிமையாளர், கிரேன் ஆபரேட்டர் ராஜன் உள்ளிட்ட 6 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து இயக்குநர் சங்கருக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பினர். அதன்படி கடந்த 27-ஆம் தேதி சங்கர் ஆஜராகி இரண்டரை மணி நேரம் விளக்கம் அளித்தார். இதைத் தொடர்ந்து கமல்ஹாசனுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் இன்று ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர். அதன்படி இன்று கமல் நேரில் ஆஜராகியுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications