காஞ்சிபுரத்தில் கோயிலுக்கு சென்ற 16 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்... ஆட்டோ ஓட்டுநர்கள் வெறிச்செயல்
Recommended Video

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கோயிலுக்கு சென்ற 16 வயது சிறுமியை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ ஓட்டுனர்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். ஒரு ஆட்டோ ஓட்டுநரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
காஞ்சிபுரம் அருகே விஷ்ணு காஞ்சி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி. இவர் தனியாக அந்த பகுதியில் உள்ள கோயிலுக்கு ஆட்டோவில் சென்றுள்ளார்.

அப்போது சிறுமி விரும்பி சென்ற கோயில் நடை சாத்தப்பட்டு இருந்தது. சிறுமியை அழைத்து வந்த ஆட்டோ ஓட்டுநர், வேறு கோயிலுக்கு அழைத்து செல்வதாக சிறுமியிடம் நைசாக பேசியுள்ளார்.
இதனை நம்பி அச்சிறுமி, அவருடைய ஆட்டோவில் சென்றுள்ளார். அந்த சிறுமியை ஆட்டோ ஓட்டுநர். காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட் பின்புறம் உள்ள காலியிடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தனது நண்பர்களான இரண்டு ஆட்டோ ஓட்டுநர்களை வரவழைத்துள்ளார். அவர்கள் மூன்று பேரும் சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் விஷ்ணு காஞ்சி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், தேவா மற்றும் ராஜா ஆகிய இரண்டு ஆட்டோ ஓட்டுநர்களை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றொரு ஆட்டோ ஓட்டுநரை போலீசார் தேடி வருகிறார்கள். கோயிலுக்கு சென்ற 16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் காஞ்சிபுரம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications