காஞ்சிபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காஞ்சிபுரத்தில் இன்று ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா.. மாவட்ட ஆட்சியர் தகவல்

Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 41 ஆக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் மட்டும் 43 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் காஞ்சிபுரத்தில் கொரோனா பாதிப்பு 84 ஆக அதிகரித்துள்ளது.

கோயம்பேடு சந்தையில் பணியாற்றிவிட்டு சொந்த ஊர் திரும்பிய கூலி தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகள் பலருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

29 more people have been infected with coronavirus in kanchipuram

ஒவ்வாரு மாவட்டத்திற்கும் 100க்கணக்கான கூலி தொழிலாளர்கள் கோயம்பேட்டில் இருந்து சென்றுள்ளனர். சில மாவட்டங்களில் 1000பேர் வரை வரை சென்றுள்ளனர். அப்படி சென்றவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் என பலருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

காஞ்சிபுரம் நகரில் திருக்காளிமேடு மின் நகர் அம்பேத்கர் நகர் போன்ற பகுதியிலும், காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடி, பெருநகர் பகுதியிலும், ஸ்ரீபெரும்புதூர் , சுங்குவார்சத்திரம் படப்பை மாங்காடு வரதராஜபுரம் போன்ற பகுதிகளில் அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ளளதாக

மேலும் இந்த 84 நபர்களில் கோயம்பேடு மார்கெட் தொடர்புடையவர்களே அதிகம் என்பதும் தெரியவந்துள்ளது. சுமார் 20 நாட்களுக்கு பிறகு கொரோனா வைரஸ் நேற்று முதல் அதிகரித்து வருகிறது. இந்த எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். எனவே இன்று மாலை இறுதி நிலவரம் தெரியவரும்.

English summary
29 more people have been infected with coronavirus in kanchipuram by koyambedu sources
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X