செப்டிக் டேங்கை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 3 பேர் பலி.. ஸ்ரீபெரும்புதூரில் ஷாக்!
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த காட்ரம்பாக்கம் பகுதியில் இயங்கிவரும் தனியார் கேட்டரிங் நிறுவனத்தில் உள்ள செப்டிக் டேங்க்கினை சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டப்போது விஷவாயு தாக்கியதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
Recommended Video

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த காட்ரம்பாக்கம் பகுதியில் வெங்கடேஸ்வரா கேட்டரிங் இண்டஸ்ட்ரியல் சர்வீஸ் என்ற தனியார் கேட்டரிங் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் செப்டிக் டேங்கை சுத்தம் செய்யும் பணியில் அந்நிறுவனத்தின் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக செப்டிக் டேங்க்கின் விஷவாயு தாக்கியதில் காட்ராம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த
முருகன் ( 41), பாக்கியராஜ் (40) மற்றும் அமரம்பேடு கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் (45) ஆகிய மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து தகவலறிந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் பலியான மூவரின் உடலை மீட்பு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஸ்ரீபெரும்புதூர் ஏ.எஸ்.பி.கார்திகேயன் சம்பவ விடத்தினை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு 2019ல் கூட ஸ்ரீபெரும்புதூரில் விஷவாயு தாக்கி 6 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து செப்டிக் டேங்க்கினை சுத்தம் செய்யும் பணியில் வேலை செய்யும் ஊழியர்களை எவ்வித பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி நிர்வாகத்தினர் ஈடுபட வைக்கின்றதால் தான் இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications