Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜக ஏதோ வானத்துல இருந்து குதிச்ச மாதிரி.. இனி தான் பார்க்கப் போறீங்க எங்க ஆட்டத்தை: கோகுல இந்திரா

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக அறிவித்துள்ள நிலையில், பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா.

2024 லோக்சபா தேர்தல் நெருங்கிவரும் நிலையில், நாடு முழுவதும் அனைத்துக் கட்சிகளும் தேர்தலுக்குத் தயாராகி வருகின்றன. தேசிய அளவில் 'இந்தியா' கூட்டணி அவ்வப்போது கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டங்களை நடத்தி, முக்கிய முடிவுகளை எடுத்து வருகின்றன. அதை எதிர்கொள்ள பாஜகவும் தனது கூட்டணிக் கட்சி நிர்வாகிகளை அவ்வப்போது அழைத்து பேசி வருகிறது.

AIADMK former minister Gokula indira attacks bjp in public meeting

பாஜக அதிமுக கூட்டணி பிளவு: தமிழ்நாட்டில் 2019 மக்களவைத் தேர்தல் மற்றும் 2021 சட்டப்பேரவைத் தேர்தல் ஆகியவற்றை அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து சந்தித்தது. 2024 மக்களவைத் தேர்தலிலும் கூட்டணி தொடரும் என்று இரு கட்சிகளும் அறிவித்திருந்தன. இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஜெயலலிதா, அண்ணா போன்ற தலைவர்களை கூட்டணி தர்மத்தை மீறி விமர்சித்து வருவதாக கூறி, பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக அறிவித்துள்ளது.

தொடர்ந்து, அதிமுக மூத்த நிர்வாகிகள் டெல்லி சென்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசினர். அண்ணாமலையை அதிமுக தலைவர்களை விமர்சிக்கக்கூடாது என ஸ்ட்ரிக்ட்டாக ஆர்டர் போட வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால், தேசிய தலைமை, அதிமுக தலைவர்களின் கோரிக்கையை கண்டுகொள்ளவில்லை எனத் தகவல் வெளியானது.

பாஜகவை தாக்கும் அதிமுக மாஜிக்கள்: இந்நிலையில் தான் அதிமுக மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக செயலாளர்கள், எம்.பி எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த 25ஆம் தேதி மாலை நடைபெற்றது. அப்போது பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, தேசிய அளவிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதிமுக அறிவித்துள்ளது.

இந்நிலையில், அதிமுக தலைவர்கள் பாஜகவை விமர்சித்துப் பேசத் தொடங்கியுள்ளனர். முன்பு ஜெயக்குமார், சி.வி.சண்முகம் என ஒரு சிலரே பாஜகவை விமர்சித்து வந்தனர். இப்போது, அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் பலரும் பாஜகவையும், அண்ணாமலையையும் நேரடியாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.

கோகுல இந்திரா பேச்சு: காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா பேசுகையில், "பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, நம்முடன் கூட்டணியில் இருந்து போன முறை காரைக்குடி தொகுதியில் போட்டியிட்டார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சிதறிக் கிடந்த அதிமுகவை ஒன்று சேர்த்தது நாங்கள் தான், நன்றி கெட்டவர்கள் என்று நம்மை பார்த்து சொல்லி இருக்கிறார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவை அக்குவேறு ஆணி வேறாக ஆக்கியது நீங்கள். தர்மயுத்தம் நடத்த வேண்டும் என சொல்லிக் கொடுத்தது நீங்கள். பிரச்சனை பண்ணவேண்டும் என நினைத்தது நீங்கள். மீண்டும் ஒன்று சேர்ப்பது போல சேர்க்க நினைத்தது நீங்கள். அந்தக் கதையை எல்லாம் நாங்கள் பேசத் தொடங்கினால் அது பெரிய கதை ஆகிவிடும்.

AIADMK former minister Gokula indira attacks bjp in public meeting

தொண்டர்கள் யாரும் பாஜகவோடு கூட்டணி வைப்பதை விரும்பவில்லை. தொண்டர்களின் விருப்பத்தைத் தான் நாங்கள் ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றியுள்ளோம். அடிமட்டத்தில் பாஜகவுடன் சேர்ந்து நம்மால் வேலை பார்க்கவே முடியாத சூழல் வந்தது. காரணம் என்னவென்றால், ஏதோ பாஜகவினர் தான் வானத்தில் இருந்து குதித்து வந்ததுபோலவும், அவர்களே நாட்டை காப்பாற்றுவது போலவும், நாம் எல்லாம் இல்லாதது மாதிரியும் அவர்களின் நடவடிக்கைகள் இருக்கின்றன.

உங்க வழியை பாருங்க: அதனால் தொண்டர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி இருக்கிறோம். 1956ல் பேரறிஞர் அண்ணா ஒரு கூட்டத்தில் பேசியதை, அன்றைக்கு அண்ணாமலையின் அம்மாவுக்கு கல்யாணம் கூட ஆகியிருக்காது, அப்போது நடக்காத ஒரு சம்பவத்தை நடந்தது போல கூறி, ஓடிய கூட்டம் என்று பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியுமா?

எங்களிடம் காரியம் ஆகவேண்டுமென்றால் ஒன்று பேசுவது, காரியம் வேண்டாம் என்றால் வேறு மாதிரி பேசுவது.. இதுதான் பாஜக செயல்பாடு. 2026ல் சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வரவேண்டும் என்று எந்தக் கூட்டணி விரும்புகிறதோ அதைத்தான் எங்கள் தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்கள். நாங்கள் உங்களை சுமந்தது போதும், நாங்கள் இறக்கி வைத்துவிட்டோம். உங்கள் வழியை நீங்கள் பாருங்கள், எங்கள் வழியை நாங்கள் பார்க்கிறோம், எங்கள் தொண்டர்களின் பலத்தை இனிமேல் தான் நீங்கள் பார்க்கப் போகிறீர்கள்." எனப் பேசியுள்ளார் கோகுல இந்திரா.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+