ஆ உயிரே போயிடுச்சே.. ஆருத்ரா மோசடியில் ஷாக்.. சாட்டையை எடுக்கும் ஸ்டாலின்.. திரும்பிய பாஜக!
காஞ்சிபுரம்: IFS, ஆருத்ரா நிதி நிறுவனங்களில் முதலீடு செய்த பணம் திரும்பக் கிடைக்காததால், கடன் தொல்லை காரணமாக ராஜி என்ற இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்த இவர், கொரியர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்; அதிக வட்டி என விளம்பரம் செய்ததால், வெளியே கடன் வாங்கி அந்நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். ஆனால் கடைசியில் தான் செலுத்திய தொகை கிடைக்காத காரணத்தால் தற்கொலை செய்து கொண்டார்.
ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில் தேசிய அளவில் கவனம் பெற தொடங்கி உள்ளது. இதில் பாஜகவினர் பலரின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன. முக்கியமாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மிக நெருக்கமாக இருக்கும் பல தலைவர்களின் பெயர்களும் அடிபட்டு வருகின்றன.

ஆர்.கே சுரேஷ் பெயர் - புகார்: ஆர்.கே சுரேஷ் போன்றவர்கள் அண்ணாமலைக்கு மிக நெருக்கமானவர்கள். இவர்கள் தற்போது தமிழ்நாடு குற்றப்பிரிவு போலீசார் மூலம் குறி வைக்கப்பட்டு உள்ளனர். வேலூரை தலைமையிடமாக கொண்டு ஆருத்ரா நிறுவனம் செயல்பட்டு வந்தது. சென்னை, திருவண்ணாமலை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் இவர்களுக்கு கிளை இருந்தது.
ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் 1 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.36 ஆயிரம் தருவோம். 10 மாதம் இந்த பணத்தை தருவோம். உங்களுக்கு 3.6 லட்சம் கிடைக்கும் என்று விளம்பரம் செய்துள்ளனர்.
இதை நம்பி முதலீடு செய்த மக்களை அந்த நிறுவனம் கடைசியில் ஏமாற்றி உள்ளது. இந்த நிலையில்தான் ஆருத்ரா நிறுவன இயக்குனர் ஹாரிஸுக்கு கட்சியில் பதவி கொடுத்ததாக பாஜக தலைவர் அண்ணாமலை மீது புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆருத்ரா ஹாரிஸ்தான் சமீபத்தில் போலீசார் மூலம் கைது செய்யப்பட்டார். இவர் சமீபத்தில் செய்த ட்விட்டர் போஸ்டை வைத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தற்கொலை: இந்த நிலையில்தான் IFS, ஆருத்ரா நிதி நிறுவனங்களில் முதலீடு செய்த பணம் திரும்பக் கிடைக்காததால், கடன் தொல்லை காரணமாக ராஜி என்ற இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து இந்த விவகாரத்தில் ஸ்டாலின் விரைவில் சாட்டையை சுழற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆளும் திமுகவை சேர்ந்த அமைச்சர்கள் அடுத்தடுத்து குறி வைக்கப்பட்டு உள்ள நிலையில் அதிமுகவை சேர்ந்த மாஜி அமைச்சர்களையும், ஆருத்ராவில் தொடர்புடைய பாஜக தலைவர்களையும் குறி வைக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது நடக்கும் நிகழ்வுகளால் திமுக நிர்வாகிகள் பலரும் அப்செட் ஆகி இருக்கிறார்களாம். நாம்தான் ஆளும் கட்சி. ஆனால் அதிமுகவினர் நிம்மதியாக இருக்கிறார்கள். ஆனால் நாமோ தினமும் வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு இருக்கிறோம் என்று ஸ்டாலினிடம் மூத்த நிர்வாகிகள் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனராம். இதனால் விரைவில் ஸ்டாலின் நடவடிக்கைகளை துரிதப்படுத்துவார் என்று கூறப்படுகிறது.

கைது நடவடிக்கைகள்: இந்த நிலையில்தான் இந்த மோசடி குறித்து இதுவரை நேரடியாக பேசாமல் இருந்த முதல்வர் ஸ்டாலின், முதல் முறையாக நேரடியாக கருத்து சொன்னார். இதை பற்றி முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் நேரடியாக பேசினார். அதில், மக்களிடம் அதிகம் வட்டி.. அதாவது 23 முதல் 30 சதவிகிதம் மாத வட்டி கொடுப்பதாக கூறி மக்களிடம் இருந்து பணத்தை பெற்று உள்ளனர். கிட்டத்தட்ட 1 லட்சம் பேரிடம் இவர்கள் முதலீட்டை பெற்று உள்ளனர்.
இதில் கிட்டத்தட்ட 243 கோடி ரூபாய்க்கு முதலீடு பெற்று , அதை திருப்பியும் தராமல் ஏமாற்றி உள்ளனர். இது தொடர்பாக பலர் புகார்களை அளித்துள்ளனர். அந்த புகார்கள் மீது குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்து இருக்கிறோம்.இதில் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த விவகாரத்தில் 22 பேருக்கு எதிராக விசாரணை நடத்தி வருகிறோம். 11 பேர் இதில் ஏஜெண்டுகள் என்று பணியை மேற்கொண்டு வந்துள்ளனர். அவர்களும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இதுவரை வங்கியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட இவர்களின் 6 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டு உள்ளன. இதில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த விவகாரத்தில் வெளிநாடு தப்பி ஓடிச்சென்ற ராஜசேகர், ஷாராணி ஆகியோர் ரெட் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
சம்மன்: ஆர்.கே. சுரேஷின் வங்கிக் கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ள நிலையில் ஆருத்ரா மோசடி புகாரில் 500 பேருக்கு சம்மன் அனுப்ப முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
ஆருத்ரா கோல்டு டிரேடிங் மோசடி விவகாரத்தில் நடிகர் ஆர்.கே.சுரேஷ், 15 கோடி வாங்கியது அம்பலம் ஆகி உள்ளதாக கிரைம் பிரான்ச் போலீசார் தெரிவித்துள்ளனர். 500 முகவர்களுக்கு சம்மன் அனுப்ப பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். 500 முகவர்கள் மூலம் F800 கோடி வசூலித்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. குற்றப்பத்திரிகை தொடர்பான ஆவணங்கள் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்ய அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
வழக்கு: இதேபோன்ற மோசடியில் ஈடுபட்ட வேறு நிறுவனங்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். இந்த வழக்கில் மக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் இதுவரை 21 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர் .அய்யப்பன், ரூசோ, பாஜக நிர்வாகி ஹரிஷ், மாலதி, பாஸ்கர், மோகன்பாபு, செந்தில் குமார், உள்ளிட்ட 11 பேர் இதுவரை கைதும் செய்யப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் 97 கோடி ரூபாய் மதிப்புடைய அசையா சொத்துக்கள் கண்டறியப்பட்டன. அதேபோல் பல கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி மீட்கப்பட்டது.
இந்த வழக்கில் கைதான ரூசோ என்பவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பாஜக ஒபிசி பிரிவு துணை தலைவரான ஆர்.கே.சுரேசுக்கு ஆருத்ரா மோசடியில் தொடர்பிருப்பதாக தகவலை பெற்றது. அதனடிப்படையில் போலீஸ் விசாரணைக்கு உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகும்படி ஆர்.கே.சுரேசுக்கு பொருளாதார குற்றப்பிரிவினத் சம்மன் அனுப்பினர். இந்த சம்மனை ரத்து செய்யக்கோரி ஆர்.கே.சுரேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அதில், பட தயாரிப்பு தொடர்பாகவே ரூசோ தம்மை அணுகியதாகவும், அது தொடர்பாக மட்டுமே பண பரிவர்த்தனை நடந்ததாக கூறியுள்ளார். தனது மனைவி மற்றும் குழந்தையை கவனித்து கொள்வதற்காக வெளிநாட்டில் இருப்பதால், விசாரணைக்கு நேரடியாக ஆஜராக இயலாது என தெரிவித்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது ஆர்.கே.சுரேஷ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி ஆஜராகி, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்த விவகாரத்தில் தம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும், தமக்கும் ஆரூத்ரா நிறுவனத்தின் மோசடிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என வாதிட்டார்.
அப்போது நீதிபதி, ஆவணங்களுடன் ஆஜராகும்படி அனுப்பப்பட்டுள்ள சம்மனில், எந்த மாதிரியான ஆவணங்கள் போன்ற விவரங்கள் இல்லை என்பதால் சம்மனை ரத்து செய்யப் போவதாகவும், வேண்டுமானால் தேவையான விவரங்களுடன் புதிய சம்மனை அனுப்பும்படியும் காவல்துறையிடம் தெரிவித்தார்.காவல்துறை தரப்பில் வழக்கறிஞர் சந்தோஷ் ஆஜராகி, சம்மனை ரத்து செய்ய வேண்டாம் எனவும், இந்த சம்மன் அனுப்பபட்டது குறித்து விளக்கம் பெற்று தெரிவிக்க அவகாசம் வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து காவல்துறை அளித்த விளக்கத்தை ஏற்றுக்கொண்டு, இந்த சம்மனை ரத்து செய்ய முடியாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.சம்மன் ரத்து செய்யப்பட்ட பின்பும் போலீசாரிடம் ஆஜராகாமல் ஆர். கே சுரேஷ் தலைமறைவாக உள்ளார். இதையடுத்து ஆர்.கே.சுரேஷ் உட்பட 4 பேருக்கு போலீசார் மூலம் லுக் அவுட் நோட்டீஸ் விடுக்கப்பட்டது.
ஆஜராகவில்லை: இந்த நிலையில்தான் போலீசாருக்கு டிமிக்கி காட்டி வரும் ஆர்.கே. சுரேஷின் வங்கிக் கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளனர். ஆருத்ரா மோசடி புகாரில் ஆர்.கே.சுரேஷ்க்கு தொடர்பு இருப்பது விசாரணையில் அம்பலம் ஆகி உள்ளதால் அவரின் கணக்கு முடக்கப்பட்டு உள்ளது. வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications