விஜயாவுக்கு டபுள் சந்தோஷம்.. அத்திவரதரையும் பார்த்தாச்சு.. அழகான மகனையும் பெத்தெடுத்தாச்சு!
அத்திவரதர் கோயில் வளாகத்தில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது
Recommended Video
காஞ்சிபுரம்: அத்திவரதர் கோயில் வளாகத்திலேயே கர்ப்பிணி விஜயாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டு... அழகான ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டாலும் பக்தர்களிடையே மகிழ்ச்சி தென்பட்டது.
காஞ்சிபுரத்தில் நடைபெறும் அத்திவரதர் வைபவம் நிறைவு பெற இன்னும் 2 நாட்களே உள்ளன. அதனால் பக்தர்கள் கூட்டம் முண்டியடித்து வருகிறது. இந்நிலையில், வேலூர் மாவட்டம், பாணாவரம் பகுதியைச் சேர்ந்த விஜயா என்ற கர்ப்பிணிப் பெண் இன்று காலை அத்திவரதரை தரிசிக்க வந்திருந்தார்.

நிறைமாத கர்ப்பிணியான இவர், கூட்ட நெரிசலிலும் கஷ்டப்பட்டு வந்து அத்திவரதரையும் தரிசித்து விட்டு வெளியே வந்தார். அப்போது மணி 10 இருக்கும்.
அந்த கோயில் வளாகத்திலேயே விஜயாவுக்கு திடீரென பிரசவ வலி வந்துவிட்டது. இதனால் அங்கிருந்த பெண் பக்தர்கள் அவரை கைத்தாங்கலாக பதினாறு கால் மண்டபம் அருகே உள்ள மருத்துவ முகாமுக்கு அழைத்து வந்தனர்.
விஜயாவை அனுமதித்த உடனேயே, ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் கெளதம், நர்ஸ் யோகவள்ளி ஆகியோர் பிரசவத்துக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர். இதையடுத்து சிறிது நிமிடங்களிலேயே, முகாமில் உள்ள டாக்டர்கள் தமிழ்ச்செல்வன், ஜான்சிராணி, வினோபா ஆகியோர் விஜயாவுக்கு பிரசவம் பார்க்க... 3 கிலோ எடையுள்ள ஆண் குழந்தை பிறந்தது.
இதையடுத்து இருவரும் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாயும் சேயும் நலமாக இருக்கிறார்களாம்.அத்திவரதரை தரிசனம் செய்ததும், அழகான ஆண் குழந்தையும் பிறந்த இரட்டை சந்தோஷத்தில் உள்ளார் விஜயா!












Click it and Unblock the Notifications