அமைச்சர் சேகர்பாபுவுக்கு தகுதி வேண்டும்.. கொந்தளிக்கும் பாஜக தலைவர் அண்ணாமலை
காஞ்சிபுரம்: காவல்துறை தலைவருக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு, இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபுவுக்கு முதலில் தகுதி வேண்டும் என பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை கடும் விமர்சித்துள்ளார்.
Recommended Video
பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள கோவில் வளாகத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சியை காணொளியில் காணும் நிகழ்ச்சி காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் அருகே உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வற்கு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் அவர்கள் காஞ்சிபுரத்திற்கு வருகை தந்தார். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அவர், பின்னர் பிரதமரின் வாரணாசி நிகழ்ச்சியை காணொளி மூலம் கட்சித் தொண்டர்களுடன் அமர்ந்து பார்வையிட்டார்.

உரத்தட்டுப்பாடு இல்லை
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை, மாநில அரசு பெயரளவிற்கு மட்டுமே விவசாயத்திற்கு தனியாக பட்ஜெட் போட்டிருக்கிறார்கள் எனவும் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் கடந்த 7 ஆண்டுகளில் உரத்திற்கு தட்டுப்பாடு என்பது எதுவும் ஏற்படவில்லை எனவும், எனவே மாநில அரசு மத்திய அரசு மீது புகார் அளிப்பதை தவிர்த்து மாநில அரசு விவசாயிகளுக்காக என்ன செய்திருக்கிறது உரத்திற்காக மானியம் வழங்கி இருக்கிறார்கலா என்பதை சிந்திக்க வேண்டும் என்றார்.

இந்துசமய அறநிலையத்துறை நாடகம்
மத்திய அரசுடன் மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும் கவர்ச்சிகரமாக பட்ஜெட்டை மட்டும் போட்டுவிட்டு மத்திய அரசு எல்லாம் செய்து விடும் என எதிர்பார்க்கிறார்கள் பரதநாட்டிய கலைஞர் ஜாகிர் உசேன் விஷயத்தில் இந்து அறநிலைத்துறை நாடகமாடுகிறது எனக் கூறிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, யாரெல்லாம் கடவுளை நம்பி ஆன்மிகத்தை நம்பி கோவிலில் சாமி தரிசனம் செய்ய விரும்புகின்றார்களோ அவர்களுக்கு நமது நம்பிக்கையில் நிச்சயமாக இடம் இருக்கிறது அதை தடுத்து நிறுத்துவதற்கு யாருக்கும் அருகதை கிடையாது என்றார்.

வேலையில்லாமல் உள்ளனர்
சிபிஎஸ்இ தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய பதிலளித்த அண்ணாமலை, இந்தியாவில் இரண்டு பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள், ஒன்று காங்கிரஸ்காரர்கள் மற்றொன்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்றார். வேலை இல்லாதவர்கள் சொல்வதை சீரியசாக எடுத்துக் கொள்ளக் கூடாது எனவும் கூறினார். பாரபட்சம் இல்லாமல் திமுக உறுப்பினர்கள் யாரெல்லாம் தவறு செய்து இருக்கிறார்களோ அவர்கள் மீது நாளை எப்ஐஆர் பதிவு செய்தால் காவல்துறை தலைவரை முதல் ஆளாய் வரவேற்பது பாரதிய ஜனதா கட்சிதான் எனவும் அண்ணாமலை தெரிவித்தார்.

பேசுவதற்கு தகுதி வேண்டும்
இந்து அறநிலை துறை அமைச்சர் கட்சி மாறி இன்னொரு கட்சிக்கு வந்து வெள்ளை கலர் சட்டை அணிந்து நெற்றியில் பட்டை அடித்துக் கொண்டால் அவரின் பழைய வரலாறு மக்கள் மறந்து விடுவார்களா என்ன? எனக் கேள்வி எழுப்பிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் வாய்க்கு வந்ததை பேசக்கூடாது எனவும், காவல்துறை தலைவரை ஆதரித்து பேசுவதற்கு தகுதி வேண்டும் சட்டத்தை மதிப்பவர் ஆக சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பவராக இருக்க வேண்டும் ஆன்மீகம் வேஷம் போட்டு கொள்ள கூடாது என்றார்.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications