"வேணாம்பா.. அதுமட்டும் தயவுசெய்து வேணாம்.. பாஜகவும் விரும்பல".. வானதி விடுத்த உருக்கமான கோரிக்கை
புலியை சுட்டுக் கொல்ல வேண்டாம் என வானதி கேட்டுக் கொண்டுள்ளார்
காஞ்சிபுரம்: ஆட்கொல்லி புலியை சுட்டுக் கொல்ல பாஜக விரும்பவில்லை, அந்த புலியை மறுபடியும் மக்கள் விருப்பத்துடன் பத்திரமாக வனத்திற்குள் அனுப்ப வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
Recommended Video
நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் சுற்றித்திரியும் ஆட்கொல்லி புலியை புலியை சுட்டுப்பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது... இந்த புலிதான் கடந்த வருடம் கெளரி என்ற பெண்ணை அடித்துக்கொன்றது.
அதேபோல, மசினகுடியில் குஞ்சு கிருஷ்ணன், சந்திரன் ஆகிய இருவரையும் அடித்து கொன்றது... இதனையடுத்து அப்பகுதி மக்கள் புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறைக்கு அழுத்தம் தரும் விதமாக போராட்டங்களை முன்னெடுத்தனர்.

வேட்டை
பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்கு புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறை முடிவு செய்தது... தற்போது, வன கால்நடை மருத்துவக்குழுவினர் 100-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.. எனினும் மக்களின் ஆவேசம் அடங்கவில்லை.. இறுதியில் T23 புலியை சுட்டுப்பிடிக்க உத்தரவிடப்பட்டது..

தேடுதல் வேட்டை
அதன்படியே, ஏகே 47 ரக துப்பாக்கிகளுடன் அதிரடிப்படையினர் தயார் நிலையில் உள்ளனர்... 20 பேர் 5 குழுக்களாக பிரிந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்... அதேபோல் 6 பேர் கொண்ட 3 வன குழுவினர் வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர். புலியை சுட்டு பிடிக்கும் வரை பொதுமக்கள் வன பகுதிக்குள் ஆடு மாடுகள் மேய்க்க செல்ல வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.. இதனால் எந்த நேரத்திலும் அந்த புலியை சுட்டுக் கொல்லக்கூடும் என்றே தெரிகிறது.

வானதி சீனிவாசன்
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு தேர்தல் பரப்புரைக்காக வந்த பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்த காந்தி சிலைக்கு அணிவித்தார்... பிறகு செய்தியாளர்களிடம் பேசிபோது, "தேர்தலுக்கு முன்பு ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசல் விலையை கொண்டு வருவதாக திமுக சொன்னது..

பாஜக
ஆனால், இன்னைக்கு இன்று எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.. பெட்ரோல், டீசல் விவகாரத்தில் திமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது. நீலகிரி புலியை சுட்டுக் கொல்லும் உத்தரவை பாஜக சுத்தமாக விரும்பவில்லை... தயவுசெய்து அந்த புலியை சுட்டுக் கொல்லாமல் வனத்தில் கொண்டு போய் விடவேண்டும்.. புலி என்பது ஒற்றை உயிர் அல்ல'' என்று கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications