சாம்சங் தொழிலாளர்கள் 625 பேர் மீது பாய்ந்தது வழக்கு.. அனுமதியின்றி கூடியதால் போலீசார் ஆக்ஷன்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் தொழிலாளர்கள் 625 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிய ஊழியர்கள் மீது அனுமதியின்றி கூடியதாக 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிஐடியு மாநில தலைவர் சௌந்தரராஜன், சிஐடியு மாநில செயலாளர் முத்துக்குமார் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ஒரு மாத காலமாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊதியத்தை உயர்த்தி வழங்கவும், தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்கவும், 9 மணி நேரத்திற்கும் அதிகமாக நீளும் பணிநேரத்தைக் குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சாம்சங் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்ததால் போராட்டம் தொடர்ந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி தமிழக அரசு தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தியது. தலைமைச் செயலகத்தில், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், டிஆர்பி ராஜா, சி.வெ.கணேசன் ஆகியோர் அடங்கிய குழு மற்றும் சாம்சங் நிறுவனத்தின் பிரதிநிதிகள், போராட்டக் குழுவின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையில் 14 அம்ச கோரிக்கைகளுடன் ஊழியர்களில் ஒரு தரப்புக்கும், சாம்சங் நிர்வாகத்தினருக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது. அதேசமயம், சிஐடியூ சங்கத்திற்கு அங்கீகாரம் அளிக்காததால் சிஐடியூ தொழிற்சங்கத்தினர் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் சாம்சங் தொழிலாளர்களை காவல்துறையினர் நேற்று முன் தினம் இரவு கைது செய்தனர். தொடர்ந்து இன்று காலை போராட்டக் களத்தில் கூடிய சாம்சங் தொழிலாளர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் ஈடுபட்டனர். கொட்டும் மழையிலும் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்த நிலையில், சி.ஐ.டி.யு தலைவர் சௌந்தரராஜன் உள்ளிட்ட போராட்டக்காரர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் காஞ்சிபுரத்தில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் தொழிலாளர்கள் 625 மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிஐடியு மாநில தலைவர் சௌந்தரராஜன், மாநில செயலாளர் முத்துக்குமார் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தடையை மீறி குவிந்தது உள்பட 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications