குளிச்சிட்டீங்களா.. ராத்திரி பங்களாவுக்கு வாங்க.. காஞ்சிபுரத்தை உலுக்கிய பலே சாமியார்
குழந்தை வரம் வேண்டி வந்த தம்பதியிடம் போலி சாமியார் நகைகளை அபேஸ் செய்தார்.
காஞ்சிபுரம்: "குளிச்சிட்டு நகைகளை போட்டுக்குங்க.. அந்த பாழடைந்த பங்களாவுக்கு நடுராத்திரி வந்து கண்ணை மூடி சாமி கும்பிடுங்கள்... உங்களுக்கு குழந்தை பிறக்கும்" என்று டுபாக்கூர் சாமியார் சொன்னதை நம்பிய தம்பதிகளின் செய்திதான் இது.
மதுராந்தகம் அடுத்துள்ள ஊர் புதூர் கிராமம். இங்கு வசித்து வரும் தம்பதி பிரபாகரன்-ஜானகி. பிரபாகரன் பெயின்டராக வேலை பார்க்கிறார். இவர்களுக்கு கல்யாணமாகி 3 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை.
அதனால் பலரிடம் தங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று சொல்லி வருத்தப்பட்டனர். அப்போது, காஞ்சிபுரம் அடுத்த தாமரைத் தாங்கல் பகுதியில் பாபு என்ற சாமியாரை சென்று பார்க்குமாறு ஒருசிலர் சொன்னார்கள். அதை நம்பி மனைவியை அழைத்துகொண்டு சாமியாரை சந்தித்தார் பிரபாகரன்.

குழந்தை வரம்
அப்போது சாமியார், "பவுர்ணமி அன்று யாகம் நடத்த வேண்டும். தம்பதி இருவரும் குளித்துவிட்டு, நகைகளை அணிந்து கொண்டு யாகத்துக்கு தயாராக வேண்டும். இரண்டு பேர் தவிர இந்த யாகத்தில் வேறு யாரும் இருக்க கூடாது. அந்த விசேஷ யாகம் நடத்திவிட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்றார்.

புதிய வீடு
இதை நம்பி பிரபாகரனும், ஜானகியும் குளித்துவிட்டு, நகைகளை முழுக்க அணிந்துகொண்டு, ராத்திரி 11 மணிக்கு பாபுவை பார்க்க சென்றனர். அப்போது ஒதுக்குப்புறமாக கட்டப்பட்டு வரும் ஒரு புதிய வீட்டுக்கு இருவரையும் அழைத்து சென்றார்.

10 சவரன் நகை
பிறகு கண்ணை மூடிக் கொண்டு சாமி கும்பிடுங்கள் என்றதும், தம்பதியும் பயபக்தியுடன் கண்களை மூடி கும்பிட ஆரம்பித்தனர். அப்போது பாபு, திடீரென்று ஒரு பெரிய கல்லை கொண்டு வந்து பிரபாகரனையும், ஜானகியையும் பலமாக தாக்க ஆரம்பித்தார். இதில் நிலைகுலைந்து விழுந்தபோது, கழுத்தில் கிடந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு எஸ்கேப் ஆனார் டுபாக்கூர் பாபு.

வழக்கு பதிவு
இதையடுத்து படுகாயமடைந்த தம்பதி கூச்சல் போடவும், அந்த பகுதி மக்கள் விரைந்து வந்து மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய சாமியார் பாபுவை தேடி வருகிறார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications