டிஎன்பிஎஸ்சி பரீட்சை வைத்தா துணை முதல்வர் பதவியை தேர்வு செய்ய முடியும்? கொங்கு ஈஸ்வரன் கேள்வி
காஞ்சிபுரம்: துணை முதல்வர் பதவிக்கு என்ன டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்தியா தேர்வு செய்ய முடியும் என கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணி கட்சிகள் பங்கேற்ற பவள விழா பொதுக் கூட்டத்தில் அவர் இவ்வாறு பேசியிருந்தார்.
திமுக கூட்டணி கட்சிகள் பங்கேற்கும் திமுக பவள விழா பொதுக் கூட்டம் காஞ்சிபுரத்தில் நேற்று நடந்தது. இந்த பொதுக் கூட்டத்தில் தி.க. தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, விசிக தலைவர் திருமாவளவன், சிபிஎம் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் கலந்து கொண்ட ஈ.ஆர். ஈஸ்வரன் பேசுகையில் ஆட்சியில் இருக்கும் போதும் இல்லாத போதும் திமுக ஒரே மாதிரியாக செயல்படும் கட்சி. கொங்கு வேளாளர் சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்த்து சமூக நீதிக்கு வித்திட்டது திமுக.
இன்றைக்கு முதல்வர் பதவிக்கு போட்டியில்லை. துணை முதல்வர் பதவிக்குத்தான் போட்டி நடந்து கொண்டிருக்கிறது. பெரும்பான்மையாக இருக்கிற திமுகவுக்குதான் முதல்வர் பதவியும் துணை முதல்வர் பதவியும் , டிஎன்பிஎஸ்சி தேர்வு வைத்து துணை முதல்வர் பதவியை தேர்வு செய்ய முடியாது.
திமுக தொண்டர்கள் யாரை ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்கள்தான் துணை முதல்வராக வர முடியும். அப்படிப்பட்ட ஜனநாயகத்தில் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுக்க வேண்டும் என சில மாதங்களாக கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
ஆயினும் காலம் கனியவில்லை என்றே முதல்வர் ஸ்டாலின் கூறிவந்தார். இந்த நிலையில் உதயநிதியை துணை முதல்வராக்க பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கோரிக்கைகள் வந்தன. மூத்த அமைச்சர்களும் ஸ்டாலினிடம் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா போவதற்குள் இந்த விஷயம் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதனால் அமைச்சரவையில் மாற்றமா என ஸ்டாலினிடம் கேட்ட போது, அப்படியா என எதிர் கேள்வி கேட்டார். இதையடுத்து அமெரிக்காவிலிருந்து ஸ்டாலின் வந்ததும் துணை முதல்வராக உதயநிதி பொறுப்பேற்பார் என சொல்லப்பட்டது. ஆனால் அப்படி ஆகவில்லை. இது குறித்து கேட்ட போது மாற்றம் இருக்கும் ஏமாற்றம் இருக்காது என முதல்வர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் செந்தில் பாலாஜியும் இரு தினங்களுக்கு முன்னர் புழல் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தார். அவர் அமைச்சராவதற்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை. இதையடுத்து அவர் அமைச்சராவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அந்த வகையில் நேற்றைய தினம் உதயநிதியை துணை முதல்வராக நியமித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி இன்று மாலை அவருக்கு ஆளுநர் மாளிகையில் பதவிப்பிரமாணம் நடைபெறுகிறது. அது போல் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications