“கொன்னுடுவேன் உன்னை..” வடகலை தென்கலை பிரிவினரின் மோதலால் களேபரமான பார்வேட்டை உற்சவம்! ஷாக் வீடியோ
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பழைய சீவரம் பகுதியில் பார்வேட்டை உற்சவத்தில் பிரபந்தம் பாடுவதில் நேற்று வடகலை தென்கலை பிரிவினர் இடையே மோதல் வெடித்திருக்கிறது. இந்த சம்பவம் பக்தர்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது.
சமீப காலமாக வடகலை தென்கலை பிரிவினரின் மோதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மாட்டு பொங்கலன்று இவர்களின் மோதல் மீண்டும் தலை தூக்கியுள்ளது. வைணவ கோயில்களில் நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்களை வைணவர்கள் பாடுவார்கள். இப்படி பாடுபவர்களில் இரண்டு பிரிவினர் இருக்கின்றனர். ஒன்று வடகலை மற்றொன்று தென்கலை. வடகலையை சார்ந்தவர்கள் தங்கள் ஆச்சாரியாரை வாழ்த்திவிட்டு பிரபந்த சேவையை தொடங்குவார்கள்.

ஆனால் தென்கலை பிரிவினர் ஸ்ரீ சைலேஷ தயாபாத்திரம் எனும் மந்திரத்தை சொல்லி பிரபந்த சேவையை தொடர்வார்கள். இந்த இரு பிரிவினருக்கும் தொடக்கமும் முடிவும் மட்டுமே வித்தியாசமாக இருக்கும். மற்றபடி இரு குழுவின் பிரபந்த சேவையும் ஒன்றுதான். இப்படியாக யார் பிரபந்த சேவையை செய்கிறார்கள் என்பது குறித்து இரு தரப்பினருக்கும் அடிக்கடி மோதல்கள் எழுவதுண்டு. சில நேரங்களில் இந்த சண்டை உக்கிரமடைந்துவிடுகிறது.
அப்படித்தான் தற்போது காஞ்சிபுரம் பழைய சீவரம் பகுதியில் பார்வேட்டை உற்சவத்தில் பிரபந்தம் பாடுவதில் வடகலை தென்கலை பிரிவினர் இடையே மோதல் வெடித்திருக்கிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications