காஞ்சிபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அலை, அலையாக வரும் பக்தர்கள்... அத்தி வரதர் தரிசனத்திற்காக நாளை முதல் சிறப்பு ரயில்

Google Oneindia Tamil News

Recommended Video

    அத்திவரதர் தரிசனத்துக்கு ஆதார் அவசியம்- கோவிலை சுற்றி கழிவறைகள், கேமராக்கள்! -வீடியோ

    காஞ்சிபுரம்: அத்தி வரதர் தரிசனத்திற்காக நாளை முதல் காஞ்சிபுரத்திற்கு தினந்தோறும் 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், திங்கட்கிழமையன்று அத்தி வரதர் வைபவம் துவங்கியது. 40 ஆண்டுகளுக்கு பின், இந்த வைபவம் நடைபெறுவதால், அத்தி வரதரை தரிசிக்க, உள்ளூர், வெளியூர் பக்தர்கள் அன்றாடம் ஆயிரக்கணக்கில் வருகின்றனர்.

    Special train from tomorrow for Athi varadar darshan

    கடந்த நான்கு நாட்களில் சுமார் 3 லட்சத்து 45 பேர் தரிசனம் செய்துள்ளனர். பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அதன்படி, முதல் சிறப்பு ரயில் தாம்பரத்தில் இருந்து நாளை அதிகாலை 04.15 மணிக்கு புறப்பட்டு காலை 06.05 மணிக்கு காஞ்சிபுரம் சென்றடையும்.

    இரண்டாவது சிறப்பு ரயில் சென்னை கடற்கரையிலிருந்து காலை 04.25 மணிக்கு புறப்பட்டு காலை 07.15 மணிக்கு காஞ்சிபுரம் சென்றடையும். செங்கல்பட்டில் இருந்து காலை 10.00 மணி, மதியம் 12.00 மணி, பிற்பகல் 3.10 மணி, மாலை 5.30 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

    அதே போல் காஞ்சிபுரத்தில் இருந்து காலை 7.30 மணி முதல் இரவு 7.45 மணி வரை செங்கல்பட்டு, தாம்பரம், கடற்கரைக்கு 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

    கலகலக்க போகிறதா தேமுதிக.. நிர்வாகிகள் கடும் அதிருப்தி.. அள்ள காத்திருக்கும் திமுக! கலகலக்க போகிறதா தேமுதிக.. நிர்வாகிகள் கடும் அதிருப்தி.. அள்ள காத்திருக்கும் திமுக!

    வைபவம் துவங்கிய நாள் முதல், தரிசனம் தொடர்பான நடைமுறைகள் தொடர்ந்து மாற்றப்பட்டு வருகிறது. முதல் நாளே, 50 ரூபாய் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, உள்ளூர் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு அனுமதியும் ரத்து செய்யப்பட்டது. காரணம், வெளியூரிலிருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவதால், கூட்டத்தை கட்டுப்படுத்த இது போன்ற நடவடிக்கை எடுத்ததாக, கோவில் நிர்வாகம் தெரிவிக்கிறது.

    இந்நிலையில், பக்தர்களின் வருகையை தோராயமாக கணக்கிடப்படும் நிலையில், துல்லியமாக எண்ணும் கருவியை, மாவட்ட நிர்வாகம், திருச்சியில் இருந்து வரவழைத்துள்ளது. நேற்று முன்தினம் இரவு, அத்தி வரதர் வீற்றிருக்கும் வசந்த மண்டபம் வெளியே, இந்த கருவி பொருத்தப்பட்டுள்ளது.

    English summary
    increase of devotees: Special train from tomorrow for the Athi varadar darshan
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X