சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கோயில் பூசாரி.. வீடியோ எடுத்து மிரட்டியதால் போக்சோவில் கைது
காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கோவில் பூசாரியை போக்சோவில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தை அடுத்த ராமானுஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளைஞர் பிரசாத் (27). இவர் சிவன் கூடல் சாலை சந்திப்பில் உள்ள கோயிலில் பூசாரியாக உள்ளர். இந்நிலையில் இதேப்பகுதியில் வசித்து வரும் 12 ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது மாணவியுடன் பழகி வந்திருக்கிறார்.

அந்த மாணவியை ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மாம்பாக்கம் தனியார் விடுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த பூசாரி, இந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை தனது தந்தையிடம் கூறி அழுதிருக்கிறார்.
அதிர்ச்சியடைந்த அவரது தந்தை, ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பிரசாத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் பிரசாதை கைது செய்து விசாரணை செய்தனர்.
அப்போது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்து இருக்கிறது. இதனை தொடர்ந்து பிரசாத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்த போலீசார் ஶ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications