‘சும்மா எதையும் சொல்ல மாட்டேன்.. தவெக அரசியல் அஜென்டா இதுதான்’ – விஜய் ஆவேசம்
காஞ்சிபுரம்: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு தவெக தலைவர் விஜய் மீண்டும் அரசியல் களத்திற்கு வரத்தொடங்கியுள்ளார். இந்நிலையில் காஞ்சிபுரத்தில் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. அதில் தற்குறிக்கான விளக்கம் தொடங்கி தங்களின் அரசியல் அஜென்டா வரை பலவற்றுக்கு விஜய் விளக்கமளித்தார். விஜய் எதையும் சும்மா சொல்ல மாட்டான். சொன்னால் செய்யாமல் விடமாட்டான் என்றும் அவர் ஆவேசமாக பேசினார்.
தவெக விஜய் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மக்களை சந்தித்து உரையாடும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மக்கள் பிரச்சனைகள் குறித்து விஜய் எடுத்துரைத்தார். தமிழ்நாட்டிற்கான தங்களின் செயல்திட்டங்கள் குறித்தும் விஜய் பேசினார். தொடர்ந்து பேசிய விஜய், "காஞ்சிபுரத்தில் தான் எங்களின் முதல் மக்கள் சந்திப்பு பயணம் தொடங்கியது. பரந்தூர் விமான நிலையம் பிரச்சனைக்காக முதலில் களமிறங்கினோம். பரந்தூர் பிரச்சனையில் நாங்கள் எப்போதும் விவசாயிகள் பக்கம் தான்.

அரசியல் என்ட்ரி
53 வருடங்களாக ஒரே கதறல் சத்தம் தான். நடிகர் கட்சி நடிகர் கட்சி என்கிறார்கள். எம்ஜிஆரை நடிகர் கட்சி என்று விமர்சித்தவர்கள் எம்ஜிஆர் கட்சியிலேயே சேர்வார்கள். இதுதான் வரலாறு. இந்த வரலாறு நம்மை விட அவர்களுக்கு நன்கு தெரியும். ஏன்டா இந்த விஜய்யை தொட்டோம் என்று அவர்கள் நினைத்து நினைத்து வருத்தப்படுவார்கள். இங்கு யாரும் தற்குறி கிடையது. அவர்கள் அரசியலை மாற்ற போகும் ஆச்சர்யகுறி.
மக்கள் பிரச்சனைகளை தொடர்ந்து பேசுவதால் எங்கள் மீது தொடர்ந்து அவதூறு பரப்புகிறார்கள். மக்கள் விரும்பும் ஆட்சியை மக்கள் வரவைக்கத்தானே செய்வார்கள். எங்கள் கொள்கை எதிரி யார், அரசியல் எதிரி யார் என்று சொல்லிவிட்டு தான் அரசியலுக்கு வந்துள்ளோம். அதில் எந்த குழப்பமும் இல்லை. அனைவருக்கும் வீடு, பட்டப்படிப்பு கல்வி, சுகாதாரம், வீட்டுக்கு ஒரு மோட்டார் சைக்கிள், பருவமழை முன்னெச்சரிக்கை திட்டம் வேண்டும்.
விஜய் பன்ச்
மீனவர்கள், நெசவாளர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பிரச்சனைகளை காது கொடுத்து கேட்க வேண்டும். தொழில்துறை வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். சட்டம் ஒழுங்கை கட்டிக் காக்க வேண்டும். பெண்கள் தைரியமாக, பாதுகாப்பாக வலம் வர வேண்டும். சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நடந்த மாதிரியோ, கோவை கல்லூரி மாணவிக்கு நடந்தது போலவோ பெண்களுக்கு எதுவும் நடக்க கூடாது.
மக்களுக்கு நல்லது செய்ய மட்டும் தான் அரசியலுக்கு வந்துள்ளோம். எங்களுக்கு வேறு எந்த அஜென்டாவும் இல்லை. இதை எப்படி செயல்படுத்துவோம் என்பதை தேர்தல் அறிக்கையில் தெளிவாக விரிவாக சொல்வோம். மற்றவர்களை போல நாங்கள் சும்மா அடித்துவிட்டு செல்ல மாட்டோம். இந்த விஜய் சும்மா ஒன்னும் சொல்ல மாட்டான். சொல்லிவிட்டால் அதை செய்யாமல் விடமாட்டான்." என்றார்.
-
Velmurugan: அதிமுகவில் 3 சீட்? பாஜக கூட்டணிக்கு செல்லமாட்டேன்! தவாக வேல்முருகன் உறுதி! -
25 டூ 15.. சர்ரென சரிந்த சப்போர்ட்.. விஜய் கோட்டையில் விரிசல்? தவெக சர்வே சொல்லும் ‘ஷாக்’ ரிப்போர்ட் -
விஜயால் மது குடிக்காமல் இருக்க முடியாதா? யாரு சொன்னது? கண்முன்னே நடந்த சம்பவம்! சர்ச்சைக்கு அனு மோகன் பதிலடி -
பால்வாடி இயக்கம்.. லீடர்னு சுற்றியவன்.. வில்லிவாக்கத்தில் சம்பவம் இருக்கு! உறுதியாக சொன்ன சேகர் பாபு -
சொதப்பும் ஸ்டாலின்.. திமுகவுக்கு எதிராக திரும்பும் வன்னியர் வாக்கு! தலித் வாக்குகளை பிரிக்கும் விஜய் -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
கருப்பு ஆடு யார்? விஜய் - சங்கீதா விவாகரத்து மனு கசிந்தது எப்படி? உண்மையை உடைத்த செங்கல்பட்டு ஆர்டிஐ -
நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. மும்பைக்கு பறந்த விஜய்! பைனான்ஸ் செய்யும் அரசியல் புள்ளியின் வாரிசு -
“திமுக தீயசக்தி”! கோஷம் போட்ட சிறுவர்கள்! த.வெ.க ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் மீது பாய்ந்தது வழக்கு -
திமுக கூட்டணியில் 3 சீட் கேட்டுள்ளோம்.. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம்- எஸ்டிபிஐ தலைவர் தகவல் -
பச்சை துண்டு போட்டு விஜய் கத்துனா விவசாயி ஆயிடுவாரா? சூட்டிங் வைத்து 50 பேரை கொன்னுட்டாரு! ஜூலி வீடியோ -
சினிமாவை விட்டு விலகும் திரிஷா.. காரணம் இதுதானா? அதிர்ச்சி பின்னணி! லீக்கான தகவல்கள்












Click it and Unblock the Notifications