Pappa: பவளவிழா பாப்பா! நாங்கள் இன்னும் அடிக்கவே இல்லையே! அதற்குள் அலறினா எப்படி? விஜய் விமர்சனம்
காஞ்சிபுரம்: "பவளவிழா பாப்பா, நீ பாசாங்கு காட்டல் ஆகாது பாப்பா. நீ நல்லவர்போல நடிப்பதை பார்த்து நாடே சிரிக்கிறது பாப்பா" என கூறிய விஜய், இன்னும் அடிக்கவே (விமர்சிக்கவே) இல்லை அதற்குள் அலறாதீர் என திமுகவை கடுமையாக விமர்சித்திருந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்து வரும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் கூறியிருப்பதாவது: அண்ணா பிறந்த மண்ணில் இருந்து பேசுவது பெருமை. மக்களிடம் செல் என கூறிய அண்ணாவை மறந்தது யார் ? அண்ணாவின் கொள்கைகளை பின்பற்றி நாட்டிற்கு நல்லது செய்யவே பிறந்தவர் அண்ணா என பாடிய எம்ஜிஆர் தனது கட்சிக் கொடியில் அண்ணாவின் உருவத்தை பொரித்துள்ளார். ஆனால் அவரது கட்சியை வைத்துக் கொண்டு இவங்க (திமுக) செய்யற வேலை இருக்கே!
நமக்கும் திமுகவுக்கும் என்ன வாய்க்கா தகராறா? மக்களுக்கு நல்லது செய்கிறோம் என சொல்லி உங்களையும் என்னையும் ஏமாற்றி ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வந்துவிட்டு தற்போது மக்கள் நலனை மறந்தால் நாம் கேள்வி கேட்காமல் இருக்க முடியுமா?
பவளவிழா பாப்பா, நீ பாசாங்கு காட்டல் ஆகாது பாப்பா. நீ நல்லவர்போல நடிப்பதை பார்த்து நாடே சிரிக்கிறது பாப்பா (சிரிக்கிறது என்ற இடத்தில் விஜய் கையை வைத்து வாயை மூடிக் கொண்டார்). நான் பாப்பா என சொன்னது அன்பின் காரணமாகத்தான்.
இதற்காக யாரும் அதிர்ச்சி அடைய வேண்டாம். அழ வேண்டாம். நாம் இன்னும் அடிக்கவே ஆரம்பிக்கவில்லை அதற்குள் அழுவதா? திமுக மீது நமக்கு தனிப்பட்ட வன்மம் ஏதும் இல்லை.
ஆனால் அவர்களுக்கு நம் மீது வன்மம் இருக்கும். நாம் அதை பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டாம். திமுகவின் கொள்கையே கொள்ளைதான். இந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாற்றில் ரூ 4000 கோடிக்கு மணல் கொள்ளையடித்துள்ளனர். மக்களிடம் செல் என்ற அண்ணாவின் கொள்கையை பின்பற்றி நாம் பயணிக்கிறோம். ஆனால் அவர்கள் அண்ணாவை மறந்துவிட்டு நமக்கு கொள்ளையில்லை என சொல்கிறார்கள்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கொள்கையுடன் அனைவருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்கிறோம். அனைவரும் சமூகநீதி கிடைக்க வேண்டும் என பாடுபடுகிறோம். சிஏஏ சட்டம் வரும் போது அதை நாம் தான் முதல் ஆளாக எதிர்த்தோம்.
வக்ப் திருத்த மசோதாவை நாம் அரசியலுக்கு வரும் முன்னரே உச்சநீதிமன்றத்திற்கு கொண்டு சென்றோம். சமத்துவம், சமூகநீதி என கூறிய மக்கு கொள்ளையில்லையா? நமக்கு அரசியல் புரிதல் இல்லை என்கிறார்கள். அறிவுத் திருவிழா என்ற பெயரில் அவதூறு திருவிழா நடத்தி நம்மை தற்குறிகள் என்றனர்.
மக்கள் என்ன தற்குறிகளா? வாக்கு செலுத்திய மக்களை தற்குறிகள் என்று அழைப்பதா? மக்களுக்கு நீங்கள் காட்டும் நன்றி இதுதானா? தவெகவுக்கு ஆதரவு தரும் இளம் தலைமுறையினரை தற்குறிகள் என்கிறார்கள்.
எம்ஜிஆர் கட்சி தொடங்கிய போதும் கூட கூத்தாடிக் கட்சி, நடிகர் கட்சி என விமர்சித்தனர். எம்ஜிஆரை கூத்தாடி என விமர்சித்தினர், பின்னர் விமர்சித்தவர்களே எம்ஜிஆருடன் சேர்ந்துக் கொண்டனர். இது வரலாறு, இது நம்மை விட அவர்களுக்கு நன்கு தெரியும். 54 ஆண்டுகளாக இதே கதறல்கள்தான். இனியும் கதறல்கள்தான் என விஜய் பேசினார்.
-
ஏனுங்க, கொஞ்சம் கேளுங்க.. கோயம்புத்தூர்-க்கு விஜய் விசிட்.. கூடவே ஒரு சர்ப்ரைஸ்..சொன்னது யார் தெரியுமா? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
“இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்”.. நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி! -
முதல்வர் விஜய்.. பதவியேற்ற 20 நாட்களில் 6 பெரிய சறுக்கல்கள்.. சொதப்பல் மேல் சொதப்பல்! -
விஜய் டெல்லி பயணம் 2.0.. அமித் ஷாவை எப்படியாவது சந்திக்க காய் நகர்த்தும் முதல்வர்.. மீண்டும் ட்ரிப்? -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங் -
பரிசு வேண்டாம்.. நோட்டு கொடுங்க.. அரசுப் பள்ளி மாணவர்களுக்காக இறங்கிய தவெக அமைச்சர் -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தமிழகத்தில் 3 பவர் சென்டர்களாம்! டெல்லியில் விஜய் கால் வைத்ததும் வந்து விழுந்த விமர்சனம்!












Click it and Unblock the Notifications